Thursday, August 05, 2010

தீவாளிக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சு!!

இரண்டு மூன்று நாட்களாகவே ஒரே பரபரப்பாக இருந்தது. அலுவலகத்தில் எல்லோரும் தீபாவளிக்கு எப்போது ஊருக்கு போகிறீர்கள், பஸ்ஸா, ட்ரெயினா, காரா? டிக்கெட் புக் பண்ணியாச்சா என்று விசாரித்தவாறு இருந்தார்கள். செய்தித்தாள்களில் முந்தின நாட்களுக்கான டிக்கெட் காலியாயிடுச்சு என்று செய்திகள் வேறு.

என்னை மாதிரி தென் மாவட்டத்திலிருந்து வந்து சென்னையில் வேலை செய்பவர்களுக்கு இது ஒரு பெரிய சவால்தான். பண்டிகை காலங்களில் ஊருக்கு போக டிரெயின் டிக்கெட் புக் பண்ணுவது என்பது மிகப்பெரிய சாதனை. டிக்கெட் கிடைத்து விட்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி J

நேரில் சென்று கவுண்டரில் புக் செய்ய காலையில் 5 மணிக்கே சென்று க்யூவில் நிற்க வேண்டும். அப்படியும் உங்கள் முறை வரும்போது டிக்கெட் கிடைக்காமல், வெயிட்டிங் லிஸ்ட் ஆகலாம். இண்டர்நெட்டில் புக் செய்யலாம், ஆனால் சமயத்தில் IRCTC வெப்சைட் காலை வாரிவிட்டு விடும். நம்ப முடியாது. ஏஜண்ட் புக் பண்ண காலை 8 முதல் 9 மணிவரை தடை செய்து விட்டதால் அங்கேயும் போக முடியாது.

எனவே சாபூத்ரி போட்டு இண்டர்நெட்டில் நமது அதிர்ஷ்டத்தை சோதனை செய்ய முடிவு செய்தேன். இரு நாட்களுக்கு முன்பே மொபைலில் ரிமைண்டர் எல்லாம் வைத்தாயிற்று J

இன்று காலை 715

படுக்கையிலிருந்து எழுந்தாச்சு, காலைக் கடன்களை முடித்துவிட்டு, அம்மா கையால் ஒரு ஸ்ட்ராங் டிகாஷன் காபி குடிச்சாச்சு, பேப்பர் ஹெட்லைன்ஸ் பாத்தாச்சு..

காலை 750

லேப்டாப் ஆன் பண்ணி, IRCTC சைட் திறந்தேன். ஆஹா, சைட் பிரச்சினை பண்ணாம ஓப்பன் ஆயிடுச்சே.. இன்று இனிய நாள்தான் என்று மனதுக்குள் சுகிசிவம் சொன்னார் J

காலை 756

3 நவம்பர்க்கான மலைக்கோட்டை show availability முயற்சி செய்தபோது இன்னும் டைம் ஆகவில்லை என்றது

காலை 801

திரும்பவும் show availability, 470 டிக்கெட்டுகள் என்றது.. ஆஹா..

காலை 802

உடனே மலைக்கோட்டை எக்ஸ்பிரஸை தேர்வு செய்து, புக் செய்தேன்.. பேரெல்லாம் கொடுத்த பிறகு பார்த்தால் 428 டிக்கெட் என்றது. ஐயோ, புக்காகி விட வேண்டுமே ஒரே டென்ஷன். சிலசமயம் பணம் எடுக்கும்போது சொதப்பி விடும். அப்பா ஒரு வழியா பேங்க் டிரான்சாக்ஷன் எல்லாம் முடிந்து, சரியா புக் ஆயிடுச்சு.. ஹூர்ர்ர்ர்ர்ரேரேரே J

அப்பா ஒருவழியா 3 நவம்பர் நைட் டிரெயின் புக் பண்ணியாச்சு, திரும்ப ரிட்டர்னுக்கு வரும் திங்களன்று ட்ரை பண்ணனும். முக்கியமா ஒரு விஷயம், ஆபிசில் நவம்பர் 5 மட்டும்தான் ஹாலிடே, 4ம் தேதி லீவு கொடுக்கனும், மேனேஜர் கால்லயவாது விழுந்துரலாம், எம்பெருமானே காப்பாத்துப்பா J

பின் குறிப்பு: இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடுபவர்கள் எல்லாருக்கும் ஏதாவது ஒரு ட்ரெயினில் டிக்கெட் கிடைக்க பிரார்த்தனை செய்து கொள்ள இருக்கிறேன், ஆதலால்...... J

4 comments:

ராஜா said...

ஏதாவது ஒரு ட்ரெயினில் வேண்டாம், மதுரை போற ட்ரெயினில் கிடைத்தால் போதும், அதுவும் நவம்பர் 3 இரவு அன்று சென்னையிலிருந்து கிளம்பும் ட்ரெயினில் :)

பழூர் கார்த்தி said...

சரிங்க ராஜா, உங்களுக்கு டிக்கெட் கிடைக்க பிரார்த்தனை செஞ்சாச்சு :-))

<<>>

இவ்ளோ அருமையா எழுதியும், ஒரே ஒரு கமெண்ட்தானா :-((

ராம்ஜி_யாஹூ said...

ரிட்டன் டிக்கெட்டும் எடுதாச்சா

தீபாவளி வாழ்த்துக்கள்

பழூர் கார்த்தி said...

என்னங்க ராம்ஜி, 3 மாசத்துக்கு முன்பேவா வாழ்த்துக்கள்?? :-))

எனிவே, ரொம்ப நன்றிங்க :-))

<<>>

சஞ்சனா,

என் ப்ளாக்குக்கு நீங்க விளம்பரம் பண்ற அளவுக்கு எல்லாம் ஆளுங்க வரமாட்டாங்க.. நானே ஒரு நாளைக்கு பத்து தடவை வந்து பாத்தாத்தேன் உண்டுங்கோவ்.. :-))