1
புதிது புதிதாய்
காதல் கவிதைகள் புனைய
புனைப்பெயரை
தேடி அலைந்த போதுதான்
கண்டேன் உன்னை....
கண்டது முதல்
மறந்தேன்
சொந்தப் பெயரையும்...
2
வலைப்பதிவுகளில் கை
வலிக்கும் வரை
எழுதித் தள்ளி விட்டேன்..
எல்லா போட்டிகளிலும்
கலந்து கொண்டிருக்கிறேன்..
நட்சத்திரமோ,
பரிசுகளோ,
வலை நிறைய பின்னூட்டங்களோ
கைக்கெட்ட வில்லை...
இருப்பினும்
வலை தொடர்வேன் நான்...
தாய்மொழியில் எழுதுவது
சுவாசிப்பது போலல்லவா..
தொடர்ந்து சுவாசிப்பதற்கு
காரணம் வேண்டுமா என்ன?
3
புன்னகைதான் உனக்கு
சிறந்த பொன் நகை
என்று
கூறிக் கூறியே
என் நகைகளையெல்லாம்
ஒவ்வொன்றாய்
களவாடி சென்றாயே...
திருமணமானதும்
திசைமாறிப் போவதா காதல்?
4
மழை பொழியும்
ஓர் பின்னிரவில்
தேநீருடன் பருக
கவிதைகள்
சிலவற்றை தேடி
அலைந்த போதுதான்,
தெரிந்து கொண்டேன்
உன் புகைப்படம்
உணர்த்தும்
எண்ணிலா புரிதல்களை!!!
*****
பின்னூட்டத்தில் உங்களுக்கு பிடித்த கவிதையின் எண் எதுவென்பதை மறவாமல் எழுதுங்கள்!! எதுவுமே தேறாவிட்டால் '0' என்று கூறுங்களேன் :-) இனிமையான வார இறுதிக்கு வாழ்த்துக்கள்!
12 comments:
எனக்கு ரொம்பப் பிடித்தது 2ம் 4ம்...
மத்தது நல்லா இல்லைன்னு சொல்ல முடியாது. இது ரெண்டும் ரொம்ப நல்லா இருக்கு.
http://blog.nandhaonline.com
//நட்சத்திரமோ,
பரிசுகளோ,
வலை நிறைய பின்னூட்டங்களோ
கைக்கெட்ட வில்லை...//
விரைவில் கிட்ட வாழ்த்துக்கள் !
//பின்னூட்டத்தில் உங்களுக்கு பிடித்த கவிதையின் எண் எதுவென்பதை மறவாமல் எழுதுங்கள்!!//
இது போல் கண்டிசன் எல்லாம் போட்டால் அப்பறம் நான் எஸ்கேப்.....
:)
நன்றி நந்தா!!
<<>>
கோவி.கண்ணன்,
நன்றி!
//இது போல் கண்டிசன் எல்லாம் போட்டால் அப்பறம் நான் எஸ்கேப்.....:)//
நானும் என்னென்னவோ எழுதிப் பாக்கறேன், முடியல.. யாரும் படிக்காமலே போய்க்கிட்டிருந்தா அழுதுருவேன் :-))) வேணாம்...
2 - மிக அருமை :)
1 , 3 & 4 ம் நன்றாக உள்ளது.
கார்தி, இவ்வளவு திறமை எங்கே இருந்தது?
0-
3rd edho puthgathil paditha nyabagam..1st is nice...
பீரடித்து பினாத்த ஒரு கவிதை
-----------------------------------------
புதுக் கவிதை சொல் என்றாய்
நீ என்றேன்.
கவுஜ சொல் என்றாய்
நான் என்றேன்.
மரபுக் கவிதை சொல் என்றாய்
குழந்தை என்றேன்.
'பின்'நவீனத்துவ கவிதை கேட்டாய்
நடிகைகள் நனையும் போது
உள்பாவடை அணிவதில்லை என்றேன்.
விருட்டென்று போய்விட்டாய்.
ஜூட் விட்டுவிட்டா?
ஜட்டி வாங்கவா?
அறியாமல் தவித்திருக்கிறேன்
வாயில் விரல் வைத்து சூப்பியபடி
---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.
2.
******************
தாய்மொழியில் எழுதுவது
சுவாசிப்பது போலல்லவா..
தொடர்ந்து சுவாசிப்பதற்கு
காரணம் வேண்டுமா என்ன?
******************
நான் மிகவும் ரசித்த வரிகள்.
மற்ற கவிதைகளும் அருமை.
simply good
அனிதா,
//கார்தி, இவ்வளவு திறமை எங்கே இருந்தது?//
என்ன கிண்டலா :-)))
நானே ஏதோ கைக்கு வந்ததை எழுதி பொழப்பை ஓட்டிக்கினு இருக்கேன்...
<<>>
தறுதலை,
0வுக்கு நன்றி!! நமக்கு வேண்டியது பின்னூட்ட கணக்குதான் :-)))
<<>>
அபர்ணா,
//3rd edho puthgathil paditha nyabagam//
போச்சுடா, நானே வருஷத்துக்கு 10 பதிவுதான்(post) போடுறேன்.. நீங்க வேற இப்படி பயமுறுத்துனா என்ன நியாயம் :-))))
<<>>
தறுதலை,
என் ப்ளாக்கை படிக்க வரும் ஒன்றிரண்டை பேரையும் துரத்திடலாம்னுதானே இப்படியெல்லாம் யோசிச்சு கவிதை எழுதுறீங்க :-)))
<<>>
வெங்கட்ராமன்,
மெய்யாலுமா :-))))) நன்றி!!
<<>>
அய்யனார், simply நன்றி!!
1,2 சூப்பர்.... !!!!
நாலுமே ok ok தாங்க!!
அன்புடன் அருணா
Post a Comment