மேலே உள்ள படம் சிந்தாநதி நடத்தும் ஓவியப் போட்டிக்காக வரையப்(?) பட்டது. இது முன் நவீனத்துவ ஓவியமாகியதால் யாரும் புரியவில்லை என்று கேள்வி எதுவும் கேட்கக் கூடாது. உங்களுக்கு என்னவெல்லாம் புரிகிறது என்று பின்னூட்த்தில் கூறலாம். சிறந்த பின்னூட்டத்திற்கு பிளாஸ்டிக் குடம் பரிசளிக்கும் எண்ணம் உள்ளது :-)
பின்குறிப்பு: எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் கூடிய சீக்கிரம் ஆகிவிடும் போல் தோன்றுகிறது.
7 comments:
கல்யாணத்துக்கு முன்பு கட்டுப் பாடில்லாமல் சுற்றித் திரிந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் கட்டுப் பாட்டோட இருப்பதாக சொல்ல வரீங்களா? கட்டத்துக்குள்ள அடைபடப்போறதை சொல்றீங்களா?
இருக்கட்டும் ஓவியத்துக்கு மொழி தேவை இல்லை. தலைப்பு படத்துக்கு வெளியே இருக்கணும்.
இப்போ கருத்துப் படம் மாதிரி ஆகிப் போச்சு....
captions மாறிப் போச்சு :)
சிந்தாநதி,
//கல்யாணத்துக்கு முன்பு கட்டுப் பாடில்லாமல் சுற்றித் திரிந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் கட்டுப் பாட்டோட இருப்பதாக சொல்ல வரீங்களா? கட்டத்துக்குள்ள அடைபடப்போறதை சொல்றீங்களா?//
இது நீங்கள் எடுத்துக் கொள்வதைப் பொறுத்து :-))
// இருக்கட்டும் ஓவியத்துக்கு மொழி தேவை இல்லை. தலைப்பு படத்துக்கு வெளியே இருக்கணும். //
அப்படியா, சரி அடுத்த படத்தில் செய்துவிடலாம்...
//இப்போ கருத்துப் படம் மாதிரி ஆகிப் போச்சு.... //
அதாவது கார்ட்டூன் மாதிரி என்கிறீர்களா, அதுசரி, இதை போட்டியில் எடுத்துக் கொள்வீர்களா, மாட்டீர்களா ?? :-)
<<>>
பாலா,
என்ன captions மாறிப் போச்சா ??
கல்யாணமானவங்கெல்லாம் இப்படிச் சொல்லி சின்ன பிள்ளைங்கள பயமுறுத்தக் கூடாது :-))))
திருமணத்திற்கு முன் சுதந்திரமாக கட்டுப்பாடுகள் இன்றி திரியும் ஓர் ஆணும் அல்லது பெண்ணும் திருமணத்திற்கு பின் தம் வாழ்க்கை பாதைகளை அழகானகோடுகளாக மாற்றி விட்டுக்கொடுப்புகளுடன் வாழும் அழகான வாழக்கை நேர்கோடுகளாக இருக்கும் என சொல்ல முயல்கிறீர்களா?
நன்று
படத்திற்கு ஏற்ற கருத்து என்றால் அது Nisha Nathan அவர்களுடையது அவருக்கு குடம் கொடுக்கலாம்
Nisha Nathan,
உங்க கருத்து ரொம்ப அழகா, நல்லா இருக்கு, மிக்க நன்றி !!
<<>>
சக்தி,
அதுசரி, அவங்க கருத்துதான் உங்க கருத்தா அல்லது வேறு ஏதாவது நினைக்கிறீங்களா??? எதுவாய் இருந்தாலும் நன்றி !!
//எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் கூடிய சீக்கிரம் ஆகிவிடும் போல் தோன்றுகிறது.//
முன்னும் பின்னும் மாத்தி போடலையே :)
Post a Comment