Wednesday, July 25, 2007

சில பதிவர்களிடம் சில கேள்விகள்

ஊரெல்லாம் ஒரே கேள்விப் பதிவுகளாகவும், போட்டிப் பதிவுகளாகவும் இருப்பதால் நாமும் நம் பங்குக்கு ஏதாவது ஒரு பதிவு பதியாவிட்டால் என்னாவது நம் பெருமை! இதோ கேள்விகள், சம்பந்தப் பட்ட பதிவர்கள் மட்டுமல்ல, வேறு எவரேனும் கூட பதில் கூறலாம். இக்கேள்விகள் விளையாட்டுக்கல்ல; உண்மையான, நேர்மையான பதிலைக் கூறுங்கள்.

1. செந்தழல் ரவி
அது என்ன 'செந்தழல்' ரவி? செந்தழல் என்பது என்ன? உங்கள் ஊர்ப் பெயரா அல்லது காரணப் பெயரா? நிழல்கள் ரவி மாதிரி இருக்க வேண்டும் என்று செந்தழல் ரவி என்று பெயர் வைத்துக் கொண்டீர்களா?

2. தேசிகன்
எழுத்தாளர் சுஜாதா உங்களுக்கு எப்போதிலிருந்து பழக்கம்? எப்படி இந்தளவுக்கு பழக்கமானார்? உங்கள் உறவுக்காரரா அவர்?

3. டோண்டு
மகரநெடுங்குழைக்காதன் என்பவர் யார்? கடவுளா, எந்த கடவுள்? அவருக்கு இப்பெயர் எப்படி வந்தது?

4. பாஸ்டன் பாலா
ஈ.தமிழ் வலையகத்தில் முன்பு போல் இப்போதெல்லாம் தினமும் பதிவுகள் வருவதில்லையே ஏன்? நீங்கள்தான் இட்லிவடை என்று வதந்தி கிளம்ப காரணம் என்னவாக இருக்கலாம்?

5. லக்கிலுக்
உங்கள் பெயரை தமிழ் படுத்தினால் எப்படி வைக்கலாம்? 'அதிர்ஷ்டப் பார்வை' என்றா? லக்கி என்பதற்கான தூய தமிழ் சொல் என்ன? அதிர்ஷ்டம் என்பது வடமொழிச் சொல் அல்லவா?

பதிவர்களே, பதில்களை வீசுங்கள், பரிசுகளை(?) வெல்லுங்கள்!!
கேள்விகள் தொடரும்.....

17 comments:

Unknown said...

கூடவே அய்யானாரை சேத்துக்குங்க...

எந்த ஊருக்கு காவல் தெய்வம் அவர்...
சாராயம் ஆட்டுக்கறி பீடி படயல் எல்லாம் உண்டா?? எந்த ஏரிக்கரயில் அவர் சிலை இருக்கிறது

லக்கிலுக் said...

//5. லக்கிலுக்
உங்கள் பெயரை தமிழ் படுத்தினால் எப்படி வைக்கலாம்? 'அதிர்ஷ்டப் பார்வை' என்றா? லக்கி என்பதற்கான தூய தமிழ் சொல் என்ன? அதிர்ஷ்டம் என்பது வடமொழிச் சொல் அல்லவா?//

நான் வைத்திருக்கும் லக்கிலுக் என்பது ஒரு அமெரிக்க கார்ட்டூன் கவுபாய் கேரக்டர். ஆங்கிலத்தில் Lucky Luke. பெயர்ச்சொல்லையெல்லாம் தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமா என்ன? அப்படி மொழி பெயர்ப்பதாக இருந்தாலும் "அதிர்ஷ்ட லூக்கா" என்று மொழிபெயர்க்கலாம் (நன்றி : பைபிள்)

அதிர்ஷ்டம் என்பதற்கு சரியான தமிழ் பதம் எனக்குத் தெரியாது :-(

Voice on Wings said...

//அதிர்ஷ்டம் என்பதற்கு சரியான தமிழ் பதம் எனக்குத் தெரியாது :-(//

எனக்குத் தெரிஞ்சி 'யோகம்'ன்னு சொல்லலாம். இது பத்தி விரிவான ஒரு விவாதத்தை இங்கே காணலாம்.

ரவி said...

///அது என்ன 'செந்தழல்' ரவி? செந்தழல் என்பது என்ன? உங்கள் ஊர்ப் பெயரா அல்லது காரணப் பெயரா? நிழல்கள் ரவி மாதிரி இருக்க வேண்டும் என்று செந்தழல் ரவி என்று பெயர் வைத்துக் கொண்டீர்களா?///

கார்த்தி...

பதிவுலகத்திற்கு வரும்போது, சரி நாமளும் ஒரு புணைப்பெயரை வெச்சுக்கலாமே என்று யோசித்தேன்...

எப்போதும் கோபமான என்னுடைய கேரக்டருக்கு தகுந்தமாதிரி நெருப்பு இருக்கனும் பெயர்ல என்று நினைத்தேன்...

அதனால தழல் என்று எழுதினேன்...

பிறகு இன்னும் உக்கிரமாக இருக்கவேண்டும் என்பதற்கான செவப்பையும் சேர்த்து செந்தழல் ஆனேன்...

ரவி என்றால் சூரியனாச்சே என்று அதையும் சேர்த்து முழுப்பெயரையும் பதிவுல வைத்தேன்...

அம்புட்டு தேன்...

பழூர் கார்த்தி said...

இசை,
//கூடவே அய்யானாரை சேத்துக்குங்க...//

எல்லா ஊரிலும் அய்யனார் இருக்கிறார், பொதுவாக ஊரின் ஆரம்பத்தில் இருப்பார், ஊரின் காவல் தெய்வமாய் :-)

<<>>

லக்கிலுக்,
மிகுந்த அக்கறையுடன், விரிவாக விளக்கியதற்கு நன்றி !!

<<>>

Voice on Wings,
யோகம் பொருத்தமாகத்தான் இருக்கிறது, நீங்கள் கொடுத்த சுட்டியும் அருமை, நன்றி !!

<<>>

செந்தழல் ரவி,
உடனடி பதிலுக்கும், தெளிவாக்கியதற்கும் நன்றி !!
கொரியா எப்படி உள்ளது, எப்போது திரும்பி வரும் உத்தேசம்???

ரவி said...

கொரியா நல்லாருக்கு...டிசம்பரில் திரும்பலாமா என்று கூட நினைக்கிறேன்...

நடுவில் சவுத் ஆப்ரிக்கா மற்றும் மொராக்கோவில் மொக்கை போடவும் இருக்கிறேன்....

:))))))))

Boston Bala said...

ஈ.தமிழ் வலையகத்தில் முன்பு போல் இப்போதெல்லாம் தினமும் பதிவுகள் வருவதில்லையே ஏன்?

இங்க வாங்க: Snap Judgment

நீங்கள்தான் இட்லிவடை என்று வதந்தி கிளம்ப காரணம் என்னவாக இருக்கலாம்?

Lack of imagination? ;)

பழூர் கார்த்தி said...

செந்தழல் ரவி,

//நடுவில் சவுத் ஆப்ரிக்கா மற்றும் மொராக்கோவில் மொக்கை போடவும் இருக்கிறேன்....//

:-)) ஜமாயுங்கள் !!

<<>>

பாபா,

//நீங்கள்தான் இட்லிவடை என்று வதந்தி கிளம்ப காரணம் என்னவாக இருக்கலாம்?

Lack of imagination? ;) //

இருக்கலாம்... ஆமாம் நீங்கள் இட்லிவடைக்கு இருபது கேள்விகள் கேட்டு இருந்தீர்களே, பதில் வந்துச்சா??

சிவா said...

yogakkaran enbadum vadamozhi ye. sariyaana thamizh vaarthai sollungappa

ரவி said...

///நீங்கள்தான் இட்லிவடை என்று வதந்தி கிளம்ப காரணம் என்னவாக இருக்கலாம்?

Lack of imagination? ;)///

ஏன்...

Leak of information? ;) அப்படீன்னு வெச்சுக்கலாமே

ஹி ஹி ஹி ஹி

Unknown said...

ஜாலி ஜம்பர் லக்கிலுக்குக்குக் ஒரு நல்ல தமிழ்ப் பெயர் சொல்லியிருந்தார்.
அதன் படி,

லக்கி = நல்லூழ்

Unknown said...

பழூரானிடம் ஒரு கேள்வி:
சோம்பேறித்தனம் போயிரிச்சா உங்ககிட்ட இருந்து? எப்படி? ஏன்?

பழூர் கார்த்தி said...

Vaasi,

voice on wings அளித்துள்ள சுட்டியை சென்று பாருங்கள், பல நல்ல வார்த்தைகளை மாற்றாக கொடுத்துள்ளனர்..

நல்லூழ், ஆகூழ், நல்வினைப் பயன், யோகம் போன்றவைகளை lucky என்பதற்கு பயன்படுத்தலாம்..

அதிட்டம் என்பதே தமிழ் சொல்தான் என்கிறார் இராம.கி.

<<>>

செந்தழல் ரவி
//
Leak of information? ;) அப்படீன்னு வெச்சுக்கலாமே//

அய்யா, எப்படி இப்படி நின்னு அடிச்சு விளையாடுறீங்க ???? :-)))

<<>>

sam,
நல்லூழ் நல்ல வார்த்தையே, நன்றி!!

//சோம்பேறித்தனம் போயிரிச்சா உங்ககிட்ட இருந்து? எப்படி? ஏன்? //

அப்பப்ப போகும்,
அப்பப்ப வரும் :-)
விரிவா ஒரு பதிவே போட்டுடறேனே!!

dondu(#11168674346665545885) said...

தென்திருப்பேரை திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் திருச்செந்தூரிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ளது. அங்கு கோவில் கொண்டிருக்குக்ம் பெருமாள் மகரநெடுங்குழைகாதன். முதல் முறையாக அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதே மார்ச் 2005-ல்தான். அவரைப் பற்றி நான் போட்ட இப்பதிவு உங்களுக்கு மேலும் விளக்கங்கள் தரும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/03/blog-post_22.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழூர் கார்த்தி said...

விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி டோண்டு!

சட்னிவடை said...

//2. தேசிகன்
எழுத்தாளர் சுஜாதா உங்களுக்கு எப்போதிலிருந்து பழக்கம்? எப்படி இந்தளவுக்கு பழக்கமானார்? உங்கள் உறவுக்காரரா அவர்?
//

இன்னும் இட்லிவடை சார்தான் பாக்கி.

சிவா said...

யோகப் பார்வை