Saturday, July 21, 2007

இந்திய கிரிக்கெட் - மற்றுமோர் சொதப்பல்

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்கிஸில் 201 ரன்களுக்கு ஆல் அவுட். இங்கிலாந்து 97 ரன்கள் லீடிங். ஜாபர் 58 ரன்கள், சச்சின் 37, கங்குலி 34 ரன்கள். புயல் விக்கெட் கீப்பர் தோனி டக் அவுட் ஆகி 'அதிருதுல்ல...' என்று பெவிலியன் திரும்பினார். கேப்டன் டிராவிட் 2 ரன்கள் எடுத்ததே சாதனை என்று நினைக்கிறார் போலும்.

தினேஷ் கார்த்திக் இங்கிலாந்து பிட்ச்சுகளில் ஒப்பனர் வேலைக்கு ஒத்து வர மாட்டார். ஏதோ பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை பிட்ச்சுகளில் வேண்டுமானால் கார்த்திக்கை வைத்து ஒப்பேத்தலாம். இந்தியாவில் வேறு ஸ்பெசலிஸ்ட் ஓப்பனர்களே இல்லையா, என்ன??

217/1 என்றிருந்த இங்கிலாந்து 298 ரன்களில் ஆல் அவுட் ஆன போதே எங்கோ இடித்தது. சரிதான், நமது வீரர்கள் திடீர் உத்வேகம் பெற்று இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கி விட்டார்கள் என்று மகிழ்ந்து உச்சி முகர்வதற்குள் பேட்டிங்கில் சொதப்பி விட்டனர். ஆரம்பத்தில் இருந்தே தொடரும் கதைதான் இது. வெளிநாட்டு தொடர்களில் அதுவும் பந்து ஸ்விங் ஆகும் பிட்ச்சில் இந்தியாவின் பருப்பு எப்போதுமே வேகாது. இப்போதும் இப்படித்தான் இருக்கிறது.

பார்ப்போம், இரண்டாவது இன்னிங்ஸில் என்ன நடக்கிறதென்று!!!

4 comments:

முரளிகண்ணன் said...

கிரிக்கெட்டெல்லாம் பார்க்கிறிங்களா என்ன

இரா. வசந்த குமார். said...

dear sir,

i got an offer in TCS (Embedded Domain), Pune. I just want to know how is to live in Pune? Regarding safety, language barrier, cultural diff, food and mainly rental... can u pls help me..?

-vasanth

பழூர் கார்த்தி said...

vathilai murali,

கிரிக்கெட் எப்பவுமே பார்ப்பதுதான், ஏன் இந்த சந்தேகம் உங்களுக்கு :-))
இந்தியா ஜெயிக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு பார்க்கக் கூடாது :-))

<<>>

வசந்த குமார்,

விட்டால் அனைத்திந்திய மொழிகளிலும் பெயர் எழுதி விடுவீர்கள் போலிருக்கே :-)))

புனே அருமையான ஊர்
பாதுகாப்பானது, அருமையான கிளைமேட்..

மொழித் தடங்கல் - சற்று இருக்கலாம், ஹிந்தி கற்றுக் கொள்ளுங்கள், தமிழ்நாட்டிற்கு வெளியே இது மிகவும் அவசியம்...

கலாச்சாரம் - மாற்றமில்லை, பேருந்தில் ஆணும், பெண்ணும் பக்கத்தில் அமர்ந்து பணிக்கு செல்வதை கலாச்சார மாற்றம் என்று கருதுவீர்களானால், சாரி....

உணவு - நீங்களே சமைத்து சாப்பிட கற்றுக்கொள்வது நல்லது, அல்லது திருமணம் செய்து கொள்ளுங்கள் (மனைவிக்கு சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்))

வீட்டு வாடகை - விண்ணில் பறக்கிறது, நல்ல வீடு நல்ல ஏரியாவில் 2BHK - ரூ 10,000.

இரா. வசந்த குமார். said...

Very much Thanks Karthi....