தினமலர் 24 செப்டம்பர் செய்தித் தாளில் 'அறிவியல் ஆயிரம்' பகுதியில் சோம்பேறி பையனின் வலைப்பதிவைப் பற்றிய செய்திவந்துள்ளது. தொடர்பு சுட்டி http://dinamalar.com/2005sep24/flash.asp
நண்பர் 'கார்த்திக்' தொலைபேசியில் கூறியபோது நம்ப வில்லை. இணையத்தில் சென்று பார்த்தவுடன் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன். பல வாழ்த்துகளும், சில வசவுகளும் வந்தன. இரண்டு மணி நேரத்திற்கு ஒரே மஜாவாக இருந்தது. 'சுற்றும் விழிச் சுடரே..' என்று ஜீன்ஸ், கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு 'கஜினி' அஸினோடு பாட்டு பாடுவது போல் கனா கண்டேன்.
தினமலருக்கு நன்றிகள் பல. கேர்ள் ப்ரண்ட்ஸிடம் 'பெரிய எழுத்தாளராக்கும்' என்று தைரியமாக கதை விட ஆதாரம் கிடைத்து விட்டது. ஊருக்கு போன் செய்து, 24ம் தேதியிட்ட தினமலரை எடுத்து வைக்க சொல்ல வேண்டும். பெரிய கண்ணாடி ப்ரேம் போட்டு, ஹாலில் மாட்டலாம் என்று எண்ணம்.
இது சம்பந்தமான கோ. கணெஷின் வலைப்பதிவைப் படித்தேன். அவரது வலைப்பதிவைப் பற்றியும் மற்றும் வேறு சில நண்பர்களின் வலைப் பதிவுகளைப் பற்றியும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. வலைப் பதிவுகளைப் பற்றி செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது, அறிவியல் ஆயிரத்தை தினமும் கவனியுங்கள், நண்பர்களே.
ஆக மொத்தம், வலைப் பதிவர்களுக்கு பத்திரிக்கைகள் அங்கீகாரம் அளிக்க ஆரம்பித்துள்ள போக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதனால் வலைப்பதிவர்களின் பொறுப்பும் கூடியுள்ளது. வித்தியாசமான, உபயோகமான தகவல்களை அளிக்க வேண்டும். தனி மனித துவேஷம் கூடாது. கிண்டலிலும் பிறர் மனம் புண்படாதவாறு எழுத வேண்டும். பார்ப்போம், கடைப் பிடிக்க முடிகிறதா என்று!
இன்றைய டுபாக்கூர் கவிதை
மழைத் துளிகளின் நடுவே
சூரியன் தேடி அலைந்த
போதுதான் பார்த்தேன்,
சூரியன் உன்
செல்போனில் FM-ஆக இருப்பதை!
பின் குறிப்பு : இந்த கவிதையைப் பாராட்டி பின்னூட்டம் போடும் நண்பர்களில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் பிளாஸ்டிக் குடம் பரிசளிக்கப் படும்!
16 comments:
ஏனுங்க தினமலரிலே காமாசோமா ப்ளாக்குகள் மட்டுந்தேன் லிங்கு கொடுக்குறதுன்னு ஏதாச்சும் பாலிஸியா? வெங்கட், பத்ரி, தேசிகன் ப்ளாக்கெல்லாம் லிங்க் கொடுக்கமாட்டாங்களா?
யாருப்பா அது அப்படி கேட்டுபுட்டது.... பத்ரி blogகிற்கான லிங்க் http://dinamalar.com/2005Sep30/flash.asp
வாழ்த்துக்கள் சோம்பேறிப்பையன்
நம்ம துளசி அக்கா, பத்ரி, அமலசிங் என நிறைய பேரோட பதிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருகின்றன
Dinamalarla per vandhirichinu padicha udane..anda edakku madakkana padangalla than unga photo vum perum vandhiruchunu vandhu padichaa...
chappnu aahip pocchee... :P
பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.
டுபுக்கு, ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்.. நாங்க போட்டோவுக்கெல்லாம் போஸ் கொடுக்கறதில்ல :-))
சோம்பேறி பையன்..வாழ்த்துக்கள்.
சோம்பேறி பையன்..வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள். மேலும் சுவாரசியமாக எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.
வாழ்த்துக்கள் சோ.பா.!!!
கவிதை பற்றி:
முதலில் செல்லுக்கு பில் கட்டவும். இல்லையென்றால் சூரியன் தெரியாது அம்மாவாசை இரவு தான் தெரியும்!
Hi 20seconds
Kalakureenga ponga,,, Ini ungala adakka mudiyaathu,, Inun sombu nall saaptu yosichu niraiya yezhuthunga
வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி...
ஆல்தோட்ட பூபதி, 'செல்லுக்கு பில்' என்று எதுகை மோனையில் கலக்கி எடுக்கறீங்க...
ராகா, சோம்பு சாப்பிடறது பற்றிதான் அடுத்த பதிவை எழுதலாமென்று இருக்கிறேன்...
நன்றி கார்த்திக் அண்ணாச்சி..
ஒவ்வொன்றாக எல்லா கதையையும் எழுதுவோம் :-)
Congrats !!
வாழ்த்துகள் சோம்பேறி பையன். இவ்வளவு சுறுசுறுப்பா இருந்துகிட்டு பெயரை மட்டும் எப்படி இப்படி??? (கவிதை அருமை....... ரசிச்சேன்... பிளாஷ்டிக் குடம் எனக்கு விழுந்தால் அதை என் அன்பு பரிசாக வைத்துக்கொள்ளவும் ..ஹிஹி )
நன்றி மன்மதன்... இன்னும் குலுக்கல் நடத்தல.. உங்களுக்கு விழுந்தா மின்னஞ்சலில் அனுப்புகிறேன் :-)
வாழ்த்துகள் சோம்பேறி பையன். இன்னும் நிறைய எழுதி பேர் வாங்குங்க.
Post a Comment