Saturday, October 22, 2005

கிரிக்கெட்டுக்கும் தீபாவளிக்கும் என்ன தொடர்பு ?

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நாளை தீபாவளிக்காக ஊருக்கு கிளம்புகிறேன். எங்கள் ஊரில் இணைய வசதிகள் இல்லாததால், அடுத்த பத்து நாட்களுக்கு வலைப்பதிவு பக்கம் வர இயலாது. எனவே நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

()

சூப்பர் (டூபாக்கூர்) சீரிஸ் கிரிக்கெட்

ஆஸ்திரேலியா அணிக்கும் மற்ற அனைத்து நாடுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் கொண்ட உலக அணிக்கும் சூப்பர் சீரிஸ் கிரிக்கெட் தொடர் கடந்த வாரம் நடந்து முடிந்தது. ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் உலக அணியை அடித்து துவைத்த ஆஸ்திரேலியா, டெஸ்ட் போட்டியிலும் உலக அணியை துவைத்து காயப் போட்டது. இத்தனைக்கும் உலகின் சிறந்த வீரர்களை கொண்டது உலக அணி. டிராவிட், லாரா, இன்சாமம், காலிஸ், பிளிண்டாப் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தும் அடிமேல் அடி வாங்கியது உலக அணி. ஒவ்வொரு போட்டியிலும் படு மோசமாக தோல்வி பெற்று சாதனை படைத்தது. இவ்வுளவு அடி வாங்கயதைப் பற்றி கவலையே படாமல் உலக அணி வீரர்கள் ஷாப்பிங், பிக்னிக், டின்னர் என்று (டூரில் இருந்த போது) பொழுது போக்கி அவரவர் ஊருக்கு சென்று/வந்து 'இது ஒரு சிறந்த அனுபவம்' என்று பேட்டி கொடுக்கின்றனர். இதையெல்லாம் பற்றி கவலைப் படாமல் கிரிக்கெட் ரசிகர்களாகிய நாம் தொடர்ந்து நமது அணியை ஆதரிப்போம் !

()

பின்குறிப்பு : கிரிக்கெட்டுக்கும் தீபாவளிக்கும் தொடர்பு ஏதாவது உள்ளதா என்பதை பற்றி நண்பர்கள் தெரியப் படுத்தலாம். கெட்டவார்த்தையில் திட்டி மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம்.

2 comments:

பழூர் கார்த்தி said...

யாருமே பின்னூட்டம் போடாததால், நானே பின்னூட்டமிடுகிறேன். இந்த பதிவு சூப்பர் :-)

Go.Ganesh said...

என்ன உங்களுக்கு மட்டும் தீபாவளி இன்னும் முடியலையா?
அடுத்த பதிவைக் காணோம்....?

பதிவு சூப்பர் தான்...
வருத்தப்படாதீங்க அடுத்த பதிவுக்கு கண்டிப்பா பின்னூட்டுகிறேன்