Saturday, November 12, 2005

இந்திய கிரிக்கெட் அணியின் (திடீர்) முன்னேற்றம்

போன தொடர் வரை அடிமேல் அடி வாங்கி சாதனை படைத்து வந்த இந்திய அணி திடீரென்று வீறு கொண்டு எழுந்து, தற்போது நடக்கும் ஒருநாள் தொடரில் இலங்கை அணியை துவைத்து எடுக்கின்றது. இதற்கான காரணங்கள் என்ன என்று செய்தித் தாள்களும், தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு அலசி ஆராய்கின்றன. நாமும் நம் பங்குக்கு ஏதாவது ஆராய்ந்து வைப்போம்!

ஓர் அணியின் திறமையை ஒரு தொடரை வைத்து மதிப்பிட்டு விட முடியாது என்றாலும் இந்திய அணியின் தற்போதைய முன்னேற்றத்துக்கு பின்வருவனவற்றை காரணமாகச் சொல்லலாம்.
  • டிராவிட் - சேப்பல் கூட்டணியின் அணித்தலைமை
  • இளைஞர்களின் வரவும், இதனால் அணிக்கு கிடைத்த புத்துணர்ச்சியும்
  • எதிர்பாராத ஆட்ட வியூகங்கள்
  • ஒரு திட்டம் தோற்கும்போது, மாற்றுத்திட்டம் வைத்திருப்பது
  • அணி வீரர்களிடம் காணப்படும் போராட்ட குணம் மற்றும் தன்னம்பிக்கை
  • முன்னின்று வழிநடத்தும் டிராவிட்டின் பொறுப்பான அணுகுமுறை

இருந்தாலும் இவை அனைத்தும் இத்தொடரோடு முடிந்து விடுமா அல்லது இந்திய அணி தொடர்ந்து ஜொலிக்குமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். சவுரவ் கங்குலி அணிக்கு திரும்புவாரா, சேவக் மீண்டும் விலாசுவாரா என்று நிறைய கேள்விகளுக்கும் கொஞ்ச நாட்களில் பதில் தெரிய வரும். அதுவரைக்கும் வேறெதையும் பற்றி கவலைப் படாமல் நமது அணியின் சிறப்பான ஆட்டத்தை கண்டுகளிக்க நான் தயார், நீங்கள் தயாரா?

6 comments:

யாத்திரீகன் said...

அடங்கொய்யா.. முக்கியமான காரணத்தை விட்டுடீங்க...

1) போட்டிகள் இந்திய மண்ணில் நடப்பது..

இந்த கிரிக்கெட் அணியே வீட்டுல புலி, வெளியில புலின்ற கதையாத்தான இருக்காங்க... ;-)

Go.Ganesh said...

நான் சொல்ல வந்ததை யாத்ரீகன் செந்தில் சொல்லி விட்டார்.
எனக்கு ஒரு மனக்குறை கங்குலி அணியில் இல்லாதது. அவர் திமிர் பிடித்தவராக இருக்கலாமே ஒழிய கண்டிப்பாக அசாரூதீன் ஜடேஜா போன்றவர்களை விட ஒரு நல்ல ஆட்டக்காரர். ஆனாலும் அவருக்கு இனிமேல் அணியில் வாய்ப்பு கிடைப்பது அரிதாகிவிட்டது.
டிராவிட் தலைமையை ஏற்று நன்றாக செயல்பட்டிருப்பது பாராட்டுக்குரியது

Prasanna said...

Since I dont have the tamil font I am forced to write in english, which in a way is better since my written tamil is much worse than written english..yeah, upto a certain point I would agree with the comments posted by Swami, but it would be too premature to come to a conclusion after just one series (infact, even as I write this comment the 7th ODI is being played in Vadodara). So my thought is, let us play in a neutral venue or in a foreign environment and then if we win the series, I would totally agree with you.
Also, I would like to see how India plays in a tri-series, since we a wonderful record of losing the finals, although for this 7th ODI Greg Chappell has asked his team to play like this is a mini final or something (Courtesy - Times of India).

பழூர் கார்த்தி said...

கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே.. பார்ப்போம் தென் ஆப்ரிக்காவுடன் எப்படி விளையாடுகிறார்கள் என்று !

Anonymous said...

They (Chappel's men) played to defeat not only SriLanka, but Ganguly too.

சந்தோஷ் aka Santhosh said...

அண்ணே,
நம்ம வீட்டு பக்கம் வாங்க காரணம் சொல்லி இருக்கேன்.