Monday, March 17, 2014

சமீபத்தில் ரசித்த பாடல்கள்

நேரம் படப் பாடல்களிலேயே நஸ்ரியா - நவீன் ஜோடி அசத்தி இருப்பார்கள். இப்போது அதே ஜோடி 'ஓம் சாந்தி ஒசானா' என்ற படத்தில் எப்படி கலக்கி இருக்கிறார்கள் என்று கண்டு களியுங்கள். இப்படி ஒரு துள்ளலான இசையை, அற்புதமான ரசிக்கத் தக்க காட்சிகளுடன் காண ரம்யமாக உள்ளது. நஸ்ரியாவின் முக பாவங்களை கூர்ந்து கவனியுங்கள். இப்படி ஒரு அற்புதமான நடிகையை 'தொப்புள்' பிரச்சினையால் தள்ளி வைத்தது, தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஒரு இழப்பே!! இப்பாடல் கூடிய சீக்கிரம் தமிழிலும் வந்தால் பாடல் வரிகளையும் புரிந்து ரசிக்கலாம்!


இன்னொரு நஸ்ரியா பாடல். திருமணம் எனும் நிக்காக்ஹ்' படத்திலிருந்து. அற்புதமான பாடல், இசைக் கோர்வை. தெளிவான பாடல் வரிகளை ரசிக்கும் படியான இசை. ஜிப்ரான் இசையில் அருமையான பாடல். வீடியோ இல்லாவிடினும், பாடலில் வரும் புகைப்பட பதிவுகளே ரசிக்க வைக்கின்றன, படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...

தெகிடி படத்திலிருந்து ஒரு பாடல். அருமையான மெலடி. நல்ல இசை, காட்சி அமைப்புகளும் ரசிக்க வைக்கின்றன. பாடல் வரிகளை தெளிவாக கேட்க முடிவது சிறப்பு. 'நான் பேசாத மவுனம் எல்லாம் உன் கண்கள் பேசும்' கவிதையான பாடல் வரிகள், அருமை.

கோச்சடையான் பாடல்களை ஒரிரு முறை கேட்டேன், இதுவரை ஈர்க்க வில்லை, பார்ப்போம். நன்றி!

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

மூன்றுமே நன்றாக இருக்கிறது. இருப்பினும் இரண்டாம் பாடல் ஏனோ அதிகமாய் பிடிக்கிறது!

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே....

தி.தமிழ் இளங்கோ said...

அன்புடையீர் வணக்கம்! எனது ” திருச்சி மாவட்ட வலைப் பதிவர்களே! ” http://tthamizhelango.blogspot.com/2014/09/blog-post_30.html என்ற பதிவினில் தங்களைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன். தங்களது கருத்துரையையும் தங்களுக்குத் தெரிந்த இங்கு குறிப்பிடப்படாத திருச்சி மாவட்டத்து வலைப் பதிவர் பற்றியும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

மணவை said...

அன்புள்ள திரு. பழூராரின் அவர்களுக்கு,
வணக்கம். தாங்கள் ரசித்த பாடல்கள் மூன்றையும் நாங்கள் ரசிக்க வைத்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கதை, கவிதை, கட்டுரை பார்த்தே பழக்கப்பட்ட எனக்கு தங்கள் சுட்டிக் காட்டியிருந்த திரைப்பாடல் மெல்லிசைப் பாடல தாலாட்டாய் அமைந்தது.

நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in