Friday, January 14, 2011

பொங்கல் பண்டிகை: இந்த பதிவை படிக்காதீங்க..

அனைவருக்கும் எனது பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!



நன்றி: photobucket.com

தமிழக அரசு தைத் திருநாளை புத்தாண்டு பிறப்பாக கொண்டாடுமாறு கூறியுள்ளது, ஆனாலும் மக்கள் சித்திரை திருநாளைத்தான் புத்தாண்டாய் கொண்டாடும் மனநிலையில் உள்ளனர். மேலும் நமது பாரம்பரிய பண்டிகைகளை நாம் கொண்டாடும் விதமும், மனநிலையும் மாறி வருகிறது. ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் அளவுக்கு நாம் தமிழ் புத்தாண்டையோ, பொங்கலையோ கொண்டாடுவதில்லை. பெரும்பாலும் டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதே நம் பண்டிகைக் கால வேலையாக உள்ளது.

எங்கள் அபார்ட்மெண்ட்டில் சற்று பரவாயில்லை. பொங்கல் விளையாட்டுக்கள் சிலவற்றை குழந்தைகளுக்காக வருடா வருடம் நடத்துகின்றனர். உறி அடித்தல், கோலப்போட்டி, மாறுவேடம், ஸ்லோ சைக்கிள் ரேஸ் போன்ற போட்டிகள் இந்த வருடமும் நடக்கின்றன.

கிராமங்களில் முன்பெல்லாம் மார்கழி மாதம் முழுதும் வாசலில் சாணம் தெளித்து கலர்பொடிகள் நிறைத்து கோலம் போடுவர். நடுவில் சாணம் சிறிது வைத்து அதன்மேல் பரங்கிப்பூ வைத்து அழகு படுத்துவர், பொங்கலோடு இந்த வைபவம் நிறைவு பெறும். இப்போது இந்த பழக்கம் குறைந்துவிட்டது.




பொங்கலுக்கு வரும் திரைப்படங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படங்கள் காவலன், ஆடுகளம், சிறுத்தை. இதைத் தவிர வேறு பெரிய படங்கள் வெளியாகிறதா என்று தெரியவில்லை. டிரெய்லர் பார்த்த போது, ஆடுகளம் ஹிட் ஆகலாம், காவலன் சுமாராய் போகலாம், சிறுத்தை: ப்ளாப் ஆகலாம் என்று கணிக்கிறேன், ஒரு வாரத்தில் தெரிந்து விடும், பார்ப்போம்!!




இந்த வருட புத்தகத் திருவிழாவில் சுய முன்னேற்ற உதவும் புத்தகங்கள் நிறைய விற்பனை ஆகிறதாம். அதிலும் விஜய் டிவி புகழ் கோபிநாத்தின் #இந்த புத்தகத்தை படிக்காதீங்க# என்ற புத்தகம் நிறைய விற்கிறதாம். அதன் பாதிப்பில்தான் இந்த பதிவின் தலைப்பு.. ஹிஹி




ஓட்டு போடுவது பற்றி விரிவாக, சுருக்கமாக, மத்யமாக தமிழ்மணம், தெலுகுமணம், கன்னடாமணம், இண்ட்லி, இட்லி, தோசையிலும், பிபிசி, சன் டிவி, விஜய் டிவியிலும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர். இருந்தாலும், உங்க ஓட்டை உங்க இஷ்டப்படி பயன்படுத்தலாம், ஏதோ பாத்துச் செய்ங்க மக்கா!!


2 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

"பொங்கல் பண்டிகை: இந்த பதிவை படிக்காதீங்க.."
//

ஹி..ஹி.. அப்ப சர்தான்..

:-)

பழூர் கார்த்தி said...

ஏனுங்க பட்டா பட்டி, அது சும்மா உங்க ஆர்வத்தை தூண்டுவதற்காக வச்ச தலைப்புங்க.. அதுக்காக படிக்காமலா போவீக?? படிச்சுத்தேன்
பாருங்களேன் :-))