Monday, January 17, 2011

18+ படங்கள் மற்றும் சில பின்குறிப்புகள்..

18+ பதிவு போடுவது இப்போது வலைப் பதிவுலகில் பேஷனாகி விட்டது. நானும் ஒரு 18+ பதிவு போடாவிட்டால் என்னையும் ஒரு ப்ளாக்கர் என்று ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று தோன்றியதால், இணையத்தில் வலைவீசித் தேடி சில 18+ படங்களைக் கண்டு பிடித்து, சில பின்குறிப்புகளுடன் இங்கே பதிவிட்டு உள்ளேன். பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பொழியுங்கள்!!
18+ பதிவு போடுவது பற்றி இங்கு ஒரு பெரிய விவாதமே நடந்து வருகிறது. சிலர் இந்த மாதிரியெல்லாம் பதிவிடக் கூடாது, ஏனென்றால் இணையம் சிறுவர்களுக்கு மிக எளிதாய் கிடைக்கிறது, அவர்கள் இம்மாதிரி பதிவுகளை எல்லாம் படித்து கெட்டுப் போய் விடுகிறார்கள் என்கின்றனர். 18+ என்று பதிவிடுவதே ஒரு நிறைய ஹிட் கிடைக்க உதவும் மளிவான விளம்பரம்தான் என்று குறை கூறுகின்றனர்.

இன்னும் சிலர், அம்மாதிரியெல்லாம் இல்லை. சிறுவர்களை இணையவெளியில் உலவ விடும்போது கண்காணிக்க வேண்டும், இல்லாவிட்டில் இணைய இணைப்பே கொடுக்காதீர்கள் என்கின்றனர். மேலும் இக்காலத்து சிறுவர்கள் நம்மை விட விவரமாக, உலக விவகாரங்களை தெரிந்து வைத்திருக்கின்றனர். நாம் பதிவு போடாவிட்டாலும், கூகுளில் போய் தேடி எளிதாய் ஆபாச வலைத்தளங்களுக்கு அவர்களுக்கு செல்லத் தெரியாதா என்கின்றனர்.
கருத்துச் சுதந்திரம் பெருகிவரும் இவ்வேளையில் இவற்றையெல்லாம் எப்படி கட்டுப்படுத்துவது என்று யோசிப்பதே தவறு. உலகம் தன்னைத்தானே பார்த்து, ரசித்து, திருத்தி கொண்டு முன்னேறலாம், இல்லையெனில் கலாச்சாரம் சற்று மாறுபடலாம்.
இப்போது 18+ படங்களுக்கு செல்வோமோ, இதை கற்பிக்கும் நோக்கத்தில்தான் இங்கே கொடுத்திருக்கிறேன், இதைப் பார்த்து ஆபாசம் என்று துள்ளிக் குதிக்க நினைப்பவர் இப்போது ஒதுங்கிக் கொள்ளலாம்.
.


..பின்குறிப்பு: சரி, 18+ படங்களை பார்த்து ரசித்தீர்களா? ஏதேனும் புதிதாய் கற்றுக் கொண்டீர்களா? மீண்டும் இன்னொரு 18+ பதிவோடு நாளை சந்திப்போமா?? :-))

ஓட்டு போடுவது பற்றி விரிவாக, சுருக்கமாக, மத்யமாக தமிழ்மணம், தெலுகுமணம், கன்னடாமணம், இண்ட்லி, இட்லி, தோசையிலும், பிபிசி, சன் டிவி, விஜய் டிவியிலும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர். இருந்தாலும், உங்க ஓட்டை உங்க இஷ்டப்படி பயன்படுத்தலாம், ஏதோ பாத்துச் செய்ங்க மக்கா!!


9 comments:

இனியவன் said...

போட்டுட்டேன் மக்கா.

பயணமும் எண்ணங்களும் said...

:)

nice

பழூர் கார்த்தி said...

நன்றி இனியவன்!!

<<>>

பயணமும் எண்ணங்களும், நன்றி! ஏதோ சமூகத்திற்கு என்னாலான சேவை!!

ராம்ஜி_யாஹூ said...

ok

FARHAN said...

சூப்பர் 18+பதிவு
நம்பி வந்தன் இப்பிடி எமாதிடீன்களே

டி.சாய் said...

சே..ஏமாத்திட்டீங்களே!!

Jayadev Das said...

இன்னைக்கு நீங்க எப்படி அல்வா குடுத்திருக்கிரீங்கன்னு பாக்கலாம்னுதான் வந்தேன், புதுசா பண்ணியிருக்கீங்க. நன்று. இது போலத்தான் நிறைய பதிவுகள் வருகின்றன, நிஜமாவே 18+ யாராச்சும் எழுத்வான்களோ என்று சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது, ஏனெனில் இதுவரைக்கும் நான் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. [நான் வலைப் பதிவு படிக்க ஆரம்பித்து ஆறேழு மாதங்கள் இருக்கலாம்]. எனினும் பதிவர்கள் அந்த மாதிரி ரா சரக்குக்கு முக்கியத் துவம் கொடுப்பதில்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பழூர் கார்த்தி said...

Thanks for all those who voted & commented!! :-))

ராஜா said...

ஓவெரா பில்டப் குடுக்கும்போதே நினைச்சேன், கடைசியா இந்த மாதிரிதான் இருக்கும்னு