இன்று மாலை சென்னை தேவநேயப் பாவணர் அரங்கில், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு நடந்த கருத்தரங்கு நடைபெற்றது. அந்நிகழ்ச்சித் துளிகள்..
மாலை 5:30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப் பட்டிருந்த விழா, தமிழ் கலாச்சாரத்தின் படி சரியாக 630 மணிக்கு துவங்கியது.
நான் 6 மணிக்கு சென்றபோது, மனுஷ்யபுத்திரன் தேநீர் அருந்தி கொண்டிருந்தார், அவருக்கு வணக்கம் தெரிவித்து அரங்கின் உள்ளே சென்றேன். கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் டீ, தண்ணீர் பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என நினைக்கிறேன், நான் தேநீர் அருந்த வில்லை.
அரங்கு எளிமையாய், அழகாய் இருந்தது, ஏசி செய்யப் பட்டது. இருக்கைகள் சத்யம் தியேட்டர் போல் வசதியாய் இருந்தன. இவ்வுளவு செலவழித்து ஒரு எழுத்தாளருக்கு பாராட்டு விழா நடத்திய உயிர்மை மற்றும் மணற்கேணி பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள் & நன்றிகள் பலகோடி!!
இந்திரா பார்த்தசாரதி மற்றும் ஞானக்கூத்தன் முன்பே வந்து விட்டனர். மற்ற விருந்தினர்கள், சிறப்பு பேச்சாளர்கள் சற்று தாமதமாக வந்தனர். இந்திரா (வேறோரு பெண்மணி), ஞானக்கூத்தன், அ.ராமசாமி, இமையம், எஸ். ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், ரவிக்குமார் (மணற்கேணி ஆசிரியர்) ஆகியோர் இந்திரா பார்த்தசாரதியை பற்றியும், அவரது படைப்புகளைப் பற்றியும் பாராட்டிப் பேசினர்.
இ.பா ஏற்புரை வழங்கி நகைச்சுவையாய் பேசினார்.
விழாவிற்கு எழுத்தாளர் சாரு நிவேதிதா சரியாய் துவங்கும் நேரத்திற்கு சற்று முன்பே வந்தார். விழா முடிவதற்கு சற்று முன்பே கிளம்பி போய் விட்டார். அவருடன் பேசலாம் என்று நினைத்து ஏமாற்றமடைந்தேன்.
சாரு நிவேதிதா வெகு இளமையாய் இருந்தார். ரவுண்ட் நெக் டி-ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட், ரிம்லெஸ் கண்ணாடி என்று படு யூத்தாக இருந்தார். அவரது டி-ஷர்ட்டில் “DON’T STARE AT MY SHOES” என்று போட்டிருந்தது, அப்படி என்ன என்று ஷூவை எட்டிப் பார்ப்பதற்குள் என்னை கடந்து சென்று விட்டார்.
எஸ். ராமகிருஷ்ணன் கூட சாரு எப்போதும் இளமையாய் காட்சியளிக்கிறார் என்று பேச்சிலேயே பொறாமைப் பட்டார்.
ஞானக்கூத்தன் சாருவுக்கும் டாக்டர் பட்டம் கொடுத்தாலும் கொடுத்து விடுவார்கள் என்று நகைச்சுவையாய் பேசினார், சாரு ரசித்திருப்பார் என நினைக்கிறேன்.
மனுஷ்ய புத்திரன் “சாரு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாய் உடனே பேசி விடுவார்” என்று கூறி பாராட்டினார்.
அரங்கில் பேசிய அனைவருமே, தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பத்தில்லை என்று வருத்தப் பட்டனர்.
இந்திரா பார்த்தசாரதியின் போலந்து அனுபவங்கள் பற்றிய நாவலையும், நந்தன் கதை போன்ற நாடகங்களையும் அனைவரும் சிலாகித்தனர். அவரது படைப்புகள் எதையும் நான் படித்ததில்லை. ஆனால் இனிமேல் படிப்பேன், படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த கருத்தரங்கு உண்டாக்கியது, அதுவே இக்கருத்தரங்கின் வெற்றி! பல்லாண்டு பல்லாண்டு வாழ்க, இ.பா!!
7 comments:
//மாலை 5:30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப் பட்டிருந்த விழா, தமிழ் கலாச்சாரத்தின் படி சரியாக 630 மணிக்கு துவங்கியது. //
:-)
//மாலை 5:30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப் பட்டிருந்த விழா, தமிழ் கலாச்சாரத்தின் படி சரியாக 630 மணிக்கு துவங்கியது. //
தமிழ் எழுத்தாளர்களின் ஒழுங்கு, அறிவுரை எல்லாமே வாசகர்களுக்கு மட்டும் தான் போல.
அதனால் தான் தமிழ் எழுத்தாளர்களை மதிக்க, போற்ற விருப்பம் வருவது இல்லை.
நன்றி அபர்ணா!!
<<>>
ராம்ஜி_யாஹூ,
உங்க கருத்துக்கு நன்றி
Anna kalakureenga!
உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)
அந்த இந்திரா என்னும் பெண்மணி அளவுக்கு மீறி நேரம் எடுத்துக் கொண்டு படுத்தினார் என சிலர் எழுதியிருந்தனர், சாரு உள்பட.
அது பர்றி உங்கள் கருத்து?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இளவரசன், நன்றி!
<<>>
ஸ்வேதா, தகவலுக்கு நன்றி!
<<>>
டோண்டு, ஆமாம் இந்திரா நிறைய நேரம் எடுத்துக் கொண்டதும், அவர் தமிழராயிருந்தும் ஆங்கிலத்தில் உரையாற்றியதும் எனக்கு வருத்தம்தான் :-(
Post a Comment