Wednesday, July 07, 2010

BSNL தந்த இன்ப அதிர்ச்சி!

நான் BSNLன் அகல அலைவரிசை இணைய இணைப்பு பெற்றுள்ளேன். இரு வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன். சேவை திருப்திகரமாகவே உள்ளது. நான் வைத்திருப்பது Home Combo 299 என்கிற ப்ளான்.

கடந்த இரு வாரங்களாக Broadband அடிக்கடி disconnect ஆகி வந்தது. ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒருமுறை disconnect ஆகி விடும். பொறுத்து பொறுத்து பார்த்து மூன்று நாட்களுக்கு முன்பு இரவு 11 மணிக்கு வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு போன் செய்தேன். முதல் ஆச்சரியம், லைனில் பேசியவர் பொறுமையாக, அன்பாக பேசினார். என்ன பிரச்சினை என்று கேட்டுக் கொண்டு நிச்சயம் சரி செய்து விடுகிறோம் சார், 24 மணிநேரத்தில் உங்களுக்கு ஸ்டேட்டஸ் தெரிவிக்கிறோம் என்றார். கம்ப்ளெயிண்ட் நம்பரை நான் கேட்காமலேயே கொடுத்தார்.

மறுநாள் 10 மணிக்கு எனக்கு மொபைலில் கால் வந்தது, நான் மீட்டிங்கில் இருந்ததால் எடுக்க வில்லை. 12 மணிக்கு திரும்பவும் கால் வந்தது, BSNL ராமாபுரத்தில் (எனது ஏரியாவில் இருந்து) இருந்து பேசி விபரம் கேட்டார்கள். என்னவென்று பார்க்கிறோம் சார், உங்கள் லைனில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம் என்றார்கள். மாலை அலுவலகத்தில் இருந்து திரும்பும் போது மாலை 630 மணி, அபார்ட்மெண்ட் வாசலில் ரோட்டோரமாக இருக்கும் BSNL இணைப்புப் பெட்டியைத் திறந்து இருவர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

சாலையில் வெளிச்சம் குறைவால், கையில் டார்ச்சுடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். நூற்றுக் கணக்கான ஒயர்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தன. ஏதோ அபார்ட்மெண்ட் அருகில் பூமியில் கேபிள் அறுந்து கிடந்ததால், மாற்று கேபிள் பொறுத்தி அதிலிருந்து இணைப்பு கொடுத்தார்கள். நான் அருகே சென்று விசாரித்த போது, அபார்ட்மெண்ட்டில் உள்ள பாதி இணைப்புகளை சரி செய்து விட்டதாகவும் (மொத்தம் 256 வீடுகள்), மீதி வீடுகளின் இணைப்புகளை நாளை சரி செய்து விடுவதாகவும், பொறுமையாகவும், பொறுப்பாகவும் பதில் கூறினர்.

நான் எனது தொலைபேசி எண்ணைக் கூறி, அதை கொஞ்சம் சோதனை செய்யுங்கள், சரி செய்து விட்டீர்களா என்று கேட்டேன். ஏற்கனவே இருட்டி விட்டது, அவர்கள் கிளம்பும் நிலையில் சோர்வாக இருந்த போதும், எனது வேண்டுகோளை தட்டாமல், 5 நிமிடத்தில் எனது இனைப்பையும் சரி செய்தார்கள், உடனடியாக எனது இல்லத்திற்கு போன் செய்து சோதனை செய்யக் கூறினர், நான் போன் செய்து பார்த்து இயங்குவதை உறுதி செய்தேன். அவர்களுக்கு நன்றி கூறி வீட்டுக்கு வந்தேன்.

மறுநாள் காலை மறுபடியும் போன் செய்து, எனது புகார் திருப்திகரமாய் சரி செய்யப் பட்டு விட்டதா என்று உறுதி செய்து கொண்டனர், வேறு ஏதாவது புகார் இருந்தாலும் தெரிவிக்குமாறு கூறினர். அன்றிலிருந்து இணைய இணைப்பும் பக்காவாகி விட்டது. ஜிமெயிலில் ஜி என்று டைப் செய்தாலே ஜிமெயிலே திறந்து விடுகிறது. அவ்வுளவு வேகம், அருமை! மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது, வாழ்க BSNL! எதற்கெடுத்தாலும் பொதுத்துறையை, அவர்களின் சேவையை திட்டுபவர்களே, இதற்கு என்ன சொல்கிறீர்கள்??

பின் குறிப்பு: ஆனாலும் தொலைத்தொடர்பில் தனியார் உள்ளே வந்து போட்டி அதிகமாகி விட்ட நிலையில், தங்களை, தங்கள் வேலை, எதிர்காலத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் BSNL தொழிலாளர்களை இப்படி மாற்றி இருக்கலாம், எப்படி இருந்தாலும் அவர்களளப் பாராட்டலாம் அல்லவா?

12 comments:

வடுவூர் குமார் said...

அதிசியம் தான்.உலகம் 2012 உடன் முடிய போகிறதே அதற்குள் ஏதாவது நல்ல பெயர் சம்பாதிச்சிரலாம் என்று தோன்றிவிட்டதோ என்னவோ! :-)
நல்லா ஆனா சரி.

http://rkguru.blogspot.com/ said...

ஆமாம் நல்ல சேவைதான்....எனதும் bsnl இணைப்புதான் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைதான் எனக்கும் உண்டானது. ஆனால் இப்போது அவர்களால் சரிசெய்யபட்டு...வாழ்க bsnl இதை பதிவை தெரிவித்த நீங்கள் வாழ்க...

Prasanna said...

Nice to hear this :)

Ganesan said...

bsnl மாறி ரொம்ப நாளாச்சு,

அதுவும் பணம் கட்டவில்லையென்றால் 2, 3 பேர் மூணு தடவை நம் இடம் தேடி வந்து , பணம் கட்ட் சொல்வார்கள்..
corporate ஆனதால் எல்லோருக்கும் target வேற..

என் அலைபேசிக்கு போனவாரம் 4 கால்கள் , இணைப்புக்கு marketing..

ம்ம்ம்.

பார்போம்

Anonymous said...

//bsnl மாறி ரொம்ப நாளாச்சு,//

You are lucky!
I'm waiting for the 5th week to get a new BSNL broadband connection.

3 visits to local exchange (Koramangala 3rd block, Bangalore). No improvement. Constant response: Underground cable is faulty. Will be repaired in a week.

Even escalated to Divisional Manager.

FYI: I was a BSNL customer 2 years back. Got scre*ed with faulty billing and left them. Why I came back? B'coz private service providers are even worse! My buddy had a good experience in Andhra when he recently took a BSNL boradband connection.

Well BSNL experience do differ with place.

Balakumar Vijayaraman said...

மகிழ்ச்சி.

ALHABSHIEST said...

போங்கண்ணே பொய்யெல்லாஞ்ச் சொல்லக்கூடாது.ஏதாவது கனவு கினவு வந்துருக்கும்.

அன்புடன் அருணா said...

எதுவும் கனவில்லியே????எனக்கு 15 நாட்களாக இதே பிரச்னைக்காக கம்ப்ளெயின்ட் செய்து ஓய்ந்து விட்டோம்.இன்னும் ஒருவர் கூட வந்து எட்டிப் பார்க்கவில்லை.

Giri Ramasubramanian said...

நீங்க ஏதேனும் காமெடி பண்றீங்களா?

பழூர் கார்த்தி said...

கருத்துரையிட்ட நண்பர்களுக்கு நன்றி!!\

<<>>

வடுவூர் குமார், 2012 ல் உலகம் முடியப் போகிறதா? சும்மா பயமுறுத்தாதீங்க :-)
எப்படியோ நல்லா ஆனா சரிதான்..

<<>>

rk guru,
என்னை வாழ்க என்று பாராட்டிய நீங்கள் வாழ்க!!

<<>>

பிரசன்னா, மகிழ்ச்சி!

<<>>

காவேரி கணேஷ்,
தகவலுக்கு நன்றி! marketingல் வேறு அசத்துகிறார்களா? நல்லதுதான் :-)

பழூர் கார்த்தி said...

பெயரில்லா,

உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கு வருந்துகிறேன் :-( தொடர்ந்து follow-up செய்யுங்கள்..

<<>>

வி.பாலகுமார், நன்றி!!

<<>>

Siva,
கனவெல்லாம் இல்லைங்க, நிஜம்தான், நம்புங்க :-))

<<>>

அன்புடன் அருணா,

உங்கள் அனுபவம் வருத்தத்துக்கு உரியதே, தொடர்ந்து follow-up செய்யுங்கள்..

<<>>

கிரி, காமெடியெல்லாம் இல்லைங்க, நிஜம்தான் :-)

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

ஜிமெயிலில் ஜி என்று டைப் செய்தாலே ஜிமெயிலே திறந்து விடுகிறது. :)இன்ப அதிர்ச்சி!