எனது அலுவலக நண்பருக்கு சொத்தைப் பல். ஒரு வருடத்திற்கு முன்பு சென்னை - போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். இங்கே ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி கடைசி வருட மாணவர்களும் பணிபுரிவர் (இண்டர்ன்ஷிப்). பீஸ் கிடையாது, 20 ரூபாய் குடுத்து பதிவு செய்து கொண்டால் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் (நண்பரின் கூற்று). சொத்தைப் பல்லை எடுத்து விட்டு, அவ்விடத்தில் சிமெண்ட் வைத்து அடைத்தார்களாம் (சிமெண்ட்டுக்கு மட்டும் 70 ரூபாய் கொடுத்தார், வேறெதுவும் செலவில்லை).
இப்போது ஒரு மாதத்திற்கு முன்பு சிமெண்ட் எடுத்துக்கொண்டு வந்து விட்டது. நண்பருக்கு சற்று பயம் திரும்பவும் ராமச்சந்திரா செல்ல. சரி, வேறு ஏதாவது மருத்துவமனைக்கு செல்லலாம் என்று நண்பர்களிடம் விசாரித்து இருக்கிறார்.
ஒரு நண்பரின் மூலமாக தாம்பரத்தில் இருக்கும் ஒரு பல் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். தலைமை மருத்துவர், அந்த நண்பருக்கு தெரிந்தவராம். போய் பல்லைக் காட்டியிருக்கிறார். எக்ஸ்ரே எடுத்திருக்கிறார்கள். தலைமை மருத்துவர் பார்த்து விட்டு, சொத்தைப் பல் எடுத்த பகுதிக்கு கீழேயும் பாதிக்கப் பட்டிருக்கிறது, இன்னும் சிறிது நாட்களில் வேர் வரை பரவி விட்டால், தாங்க முடியா வலி ஏற்படும், எனவே ரூட் கானல் ட்ரீட்மெண்ட் செய்து கொள்ளுங்கள் என்றாராம். நண்பர் எவ்வுளவு செலவாகும் என்று கேட்டிருக்கிறார். 3000 ரூபாய் ஆகும் என்றிருக்கிறார் டாக்டர்.
இவர் எனக்கு தற்போது ரூட் கானல் டிரீட்மெண்ட் தேவையில்லை. சொத்தைப் பல் இருந்த இடத்தை மட்டும் அடைத்து விடுங்கள் என்றிருக்கிறார், வலி வந்தால் பிறகு வந்து அந்த் ட்ரீட்மெண்ட் செய்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். டாக்டர் ஒத்துக் கொள்ளவில்லை. நிறைய பேசி நண்பரை கன்வின்ஸ் செய்ய முயற்சித்து இருக்கிறார். அரை மணி நேரத்திற்கு பிறகு, அரை மனதோடு சரி, அடுத்த வாரம் வாருங்கள், சொத்தைப் பல் இருந்த இடத்தை அடைத்து விடலாம் என்று வரச் சொல்லி இருக்கிறார். நண்பர் திரும்பி வரும் முன், ரிசப்ஷனிஸ்ட்டிடமும் ரூட் கானல் ட்ரீட்மெண்ட்டுக்கு எவ்வுளவு செலவாகும் என்று கேட்டார். ரிசப்ஷனிஸ்ட் 2500லிருந்து 3000 வரை செலவாகும் என்றாராம்.
திரும்பவும் அடுத்த வாரம் நண்பர் மருத்துவமனைக்கு சென்ற போது, தலைமை மருத்துவர் இல்லை. வேறு ஒரு உதவி மருத்துவர் நண்பரையும், எக்ஸ்ரேவையும் சோதனை செய்திருக்கிறார். பார்த்து விட்டு, அவரும் ரூட் கானல் டிரீட்மெண்ட் செய்து கொள்ளுங்கள் என்றிருக்கிறார். நண்பரோ “இல்லை, பிறகு பார்த்துக் கொள்கிறேன், தலைமை மருத்துவரிடம் ஏற்கனவே கூறிவிட்டேன், அவரும் சொத்தைப் பல் இருந்த இடத்தை மட்டும் அடைக்க ஒப்புக்கொண்டு இப்போது வரக் கூறினார்” என்றார். டாக்டர் ஒத்துக் கொள்ள வில்லை. இல்லை, உங்களுக்கு சொத்தை நிரம்ப புரையோடி இருக்கிறது, நீங்கள் ரூட் கானல் டிரீட்மெண்ட் செய்து கொள்வதுதான் நல்லது என்று என்னென்னவோ ஒரு மணி நேரம் பேசி நண்பரை கன்வின்ஸ் செய்து விட்டார். நண்பர் திரும்பவும் அதற்கு ஆகும் செலவை டாக்டரிடமும், ரிசப்ஷனிட்டிடமும் கன்பர்ம் செய்து கொண்டு (ரூபாய் 3000) முதல் சிட்டிங் (ரூ 500 கொடுத்து விட்டு) செய்து கொண்டார். 4 முதல் 5 சிட்டிங் வரவேண்டுமாம். 4-வது சிட்டிங்கின் போது 2000 ரூபாய் கட்டி இருக்கிறார்.
கடைசி சிட்டிங்கின் போது பீஸ் கட்ட சென்ற போது இன்னும் 1500 ரூபாய் பேலன்ஸ் தர வேண்டும் என்றார்களாம் (ஏற்கனவே 2500 கட்டி விட்டார், ஆரம்பத்தில் கூறிய செலவு தொகையான 3000 ரூபாய்க்கு இன்னும் 500 ரூபாயே மீதி தரவேண்டும்). நண்பர் அதிர்ச்சி அடைந்து எதற்கு 1500, இன்னும் 500 தானே தரவேண்டும் என்று கேட்டதற்கு ரிசப்ஷனிஸ்ட் கூலாக 3000 ரூபாய் ட்ரிட்மெண்ட்டுக்கு, 1000 ரூபாய் டாக்டர் பீஸ் (ரூட் கானல் டிரீட்மெண்ட் செய்ய சர்வீஸ் சார்ஜ்) என்றிருக்கிறார்.
நண்பருக்கோ சரியான ஆத்திரம். ஆரம்பத்தில் ஏன் சொல்லவில்லை, மொத்தம் 3000 ரூபாய்தானே ஆகும் என்றீர்கள், தலைமை மருத்துவர் கூட அதுதானே கூறினார் என்று சண்டை போட்டு இருக்கிறார். ரிசப்ஷனிஸ்ட் ஒத்துக் கொள்ள வில்லையாம். அங்கிருந்த மற்ற ஊழியர்களும் ஒத்துக் கொள்ள வில்லையாம். ஒரு மணி நேர விவாதத்திற்கு பிறகு நண்பர் தலைமை மருத்துவருக்கு மொபைலில் பேசி இருக்கிறார். அவரும் ஆமாம் 4000 ரூபாய்தான் என்று இருக்கிறார். நண்பருக்கு அவரிடம் சண்டை போட விருப்பமில்லை (அவரது நண்பருக்கு தெரிந்தவர், மேலும் மெத்தப் படித்த டாக்டர்). சிறிது நேர உரையாடலுக்கு பின்பு, சரி 500 ரூபாய் குறைத்துக் கொண்டு, 3500 ரூபாய்க்கு செட்டில் செய்து விடுங்கள் என்றிருக்கிறார் தலைமை மருத்துவர். விதியை நொந்து கொண்டு நண்பர் பணத்தை செட்டில் செய்து விட்டு வந்திருக்கிறார். என்னிடம் சென்ற வாரம் இந்த கதையைக் கூறி புலம்பினார். சரி இதனை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ளலாம், மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும் என்று கூறி இப்போது எழுதி இருக்கிறேன்,
நண்பர்களே, எனது கேள்விகள் சில
- நண்பர் சொத்தைப் பல் இருந்த இடத்தை அடைக்க மட்டுமே சென்றிருக்கிறார். அவரை எக்ஸ்ரே அது, இதுவென்று பயமுறுத்தி ரூட் கானல் டிரீட்மெண்ட் செய்து கொள்ள கட்டாயப் படுத்தியது ஏன்?
- அவருடைய மெடிக்கல் கண்டிஷனுக்கு நிஜமாகவே ரூட் கானல் டிரீட்மெண்ட் அவசியமா? அதை எப்படி நாம் உறுதி படுத்திக் கொள்ளலாம்? இம்மாதிரி மருத்துவ விஷய்ங்களை நாம் எப்படி cross verify பண்ணலாம்? நம்முடைய அறியாமையை பயன்படுத்தி பணம் பண்ணும் நோக்கத்துடன் டாக்டர்கள் விளையாடலாமா?
- முந்தின வாரம் தலைமை டாக்டர் சொத்தைப் பல் இருந்த இடத்தை அடைக்க ஒப்புக்கொண்டு விட்ட பிறகு திரும்பவும் ஏன் அடுத்த வாரம், உதவி டாக்டர் பழைய பல்லவியை (ரூட் கானல் டிரீட்மெண்ட்) பாடியிருக்கிறார்? ஏன் ஒரு மணி நேரம் வாதடி, நண்பரை கன்வின்ஸ் செய்திருக்கிறார்?
- ஆரம்பத்தில் ஏன் மருத்துவமனையில் 3000 ரூபாய்தான் செலவாகும் என்றார்கள்? இந்த செலவை எப்படி நிர்ணயிக்கிறார்கள். ஏதாவது standard உள்ளதா? ரூட் கானல் டிரீட்மெண்ட்டுக்கு நிஜமாகவே 3000 ரூபாய் என்பது நியாயமான தொகைதானா? இதை நாம் எப்படி cross verify செய்யலாம்?
- ஆரம்பத்தில் 3000 ரூபாய்தான் என்று சொல்லிவிட்டும், டிரிட்மெண்ட்டின் கடைசி கட்டத்தில் ஏன் 4000 ரூபாய் என்றார்கள்? (1000 ரூபாய் டாக்டர் பீஸை ஏன் முன்பே தெளிவாய் சொல்ல வில்லை?. இப்படி மறைமுகமாய் கட்டணம் பிடுங்கவது ஒரு மருத்துவமனைக்கு அழகா?
- 4000 ரூபாய் என்ற பீஸ் எப்படி தலைமை மருத்துவரிடம் மொபைலில் பேசியவுடன் 3500 என்று குறைந்தது? உண்மையான தொகை என்ன?
இதுதான் இன்றைய மருத்துவத்தின் உண்மையான நிலை. நிறைய மருத்துவமனைகள் (எல்லாமும் அல்ல) வியபார மையங்களாகி விட்டன. எதையும் நம்ப முடியவில்லை. சென்னையில் இருக்கும் கார்ப்பரேட் மருத்துவ மனைகளுக்கோ சென்றால், நீங்கள் காலி என்பதே உண்மை. அரசாங்கம் இதெயெல்லாம் முறைப்படுத்த இயலுமா? இதற்கெல்லாம் தீர்வு காணாமால், இலவச காப்பீட்டுத் திட்டங்களால் பெரிய பயன் இல்லை!!
12 comments:
//மருத்துவமும் வியபாரமா?// மருத்துவம் சேவை என்ற நிலையிலிருந்து வியாபாரமயமாகி பல ஆண்டுகள் ஆயிற்று.
ஆமாம் Robin, நிலைமை வரவர ரொம்ப மோசமாகிறது, மனசாட்சியே இல்லாமல் நிறைய பேர் கொள்ளை அடிக்கிறார்கள், சில நல்லவர்களை தவிர்த்து :-(
உங்க கருத்திற்கு நன்றி!!
Last week I have paid Rs.1200/- for root canal treatment.
ஓ அப்படியா ஜடம், பாருங்க.. அதே டிரீட்மெண்ட்டுக்கு என் நண்பர் 3500 ரூபாய் கொடுத்திருக்கிறார் :-(
நீங்க எங்க செஞ்சுகிட்டீங்க, சென்னையிலா??
ரூட் கேனால் என்னும் பல் வேர் மருத்துவம் பணக்கார மருத்துவந்தான்.தேவையா இல்லையா என்பது எக்ஸ்ரே பார்த்துத் தான் சொல்ல முடியும்.ஆனால் கொள்ளையடிக்கும் மருத்துவர்கள்தான் மிகுந்து விட்டார்கள் என்பது மிகவும் உண்மை.நல்ல மருத்துவர்கள் சேர்ந்து மருத்துவர்களைக் கண்காணிக்கும் குழு ஏற்படுத்திச் செயல் படாவிட்டால் அனைத்து மருத்துவர்களும் ஒரே குட்டையில் மொத்தமாகத் தள்ளப் படுவார்கள்.மக்கள் அடி,உதை என்று ஆரம்பித்தாலும் ஆச்சரியப் பட முடியாது.
நிறைய மருத்துவமனைகள் (எல்லாமும் அல்ல) வியபார மையங்களாகி விட்டன. எதையும் நம்ப முடியவில்லை. சென்னையில் இருக்கும் கார்ப்பரேட் மருத்துவ மனைகளுக்கோ சென்றால், நீங்கள் காலி என்பதே உண்மை. அரசாங்கம் இதெயெல்லாம் முறைப்படுத்த இயலுமா? இதற்கெல்லாம் தீர்வு காணாமால், இலவச காப்பீட்டுத் திட்டங்களால் பெரிய பயன் இல்லை!!
.....பண வசதி இருக்கிறவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வண்ணம் இருக்கிறது, மருத்துவ வசதி..... அவல நிலை மாற வழி???
மதுரையில் ரூட்காணல் சிகிச்சைக்கு நல்ல மருத்துவர் என்றால் (அனுபவம்+படிப்பு)இரண்டாயிரம் மட்டுமே...ரெகுலர் கஸ்டமர் என்றால் ஐநூறு ரூபாய் கம்மி...
எனது அம்மாவுக்கு ட்ரீட்மென்ட் எடுத்த வகையில் இது போன்ற கசப்பான அனுபவங்கள் நிறைய இருக்கிறது.
மனது நொந்து போய் சொல்கிறேன், " கள்ளச்சாராயம் காய்ச்சுபவனுக்கும் இந்த காவாலி டாக்டர்களுக்கும் எந்த வித்தியாசமும்
இல்லை.(ஒரு சதவீதமோ,இரு சதவீதமோ இருக்கும் சேவையுள்ளம் கொண்ட மருத்துவர்கள் என்னை மன்னிக்கட்டும்)
சாராயம் காய்ச்சுபவனுக்காவது மனதில் ஒரு குற்ற உணர்வாவது இருக்கும்.இந்த மருத்துவ மயிராண்டிகளுக்கு அதுவும் இல்லை.
சமுதாயத்தில் இவனுங்களுக்கு கிடைக்கும் மரியாதை,,,,அது பெரிய கொடுமை!
இது பல் மருத்துவர்களை பற்றிய விவாதமாக இருந்தாலும் பொதுவாக மருத்துவர்களை திட்டும் மனப்போக்கு இங்கும் காணப்படுவதால் இது சம்பந்தமான சுட்டிகளை கொடுத்துள்ளேன்..இதனை ஒருமுறை படித்துவிட்டு பின்பு தங்களது கருத்துகளை கூறவும்..நான் பல் மருத்துவர் அல்ல..
http://vdc.dentistindia.com/rootcanaltreatment.asp
http://members.rediff.com/deepakvaswani/rootcanal.htm
http://www.drchetan.com/root-canal.html
தயவு செய்து பின்னூட்டங்களில் அநாகரீகமான வார்த்தைகளை தவிர்க்க முயற்சி செய்யவும்.. ஒரு பக்க சார்பாக மனம்போன போக்கில் திட்டுவது என்பது ஆரோக்கியமான விவாதத்தை மழுங்க செய்து விடும்
from
http://vdc.dentistindia.com/rootcanaltreatment.asp
What Is the Cost of Root Canal Treatment?
There are many factors that affect the cost of root canal treatment. Each patient and tooth presents a different set of circumstances. Generally, the cost of root canal treatment is directly related to the chair time necessary to perform the treatment as well as to the costs of the staff, training, and technology that the dentist has available when performing the procedure. There are many factors that influence the amount of chair time necessary to treat any particular tooth:
* The position of the tooth in the mouth
* The number of roots and the number of canals within these roots
* Root curvatures and the length of the roots
* The presence or absence of calcifications within the root canal space
* Special dental considerations. For example, it may be more difficult for the dentist to work through an existing crown or a bridge than to work on a tooth with only a small previous filling. Also, some teeth may have been severely broken down by past dental disease and these may have to be "built-up" before root canal treatment can even be started so that an aseptic field can be established and maintained during treatment.
In addition to the chair time involved for treatment, other factors are also taken into consideration when determining a fair fee for root canal treatment:
* The cost of technology. Dentists who use state-of-the-art technology for certain procedures have invested in computer digital radiography, ultrasonic, and specialized training courses for themselves and for their staff. Those patients who benefit from them share the costs of these items.
* The costs of the dental office overhead include staff, rent, and supplies in addition to many other expenses. These costs vary significantly in different areas of the country.
* Fees vary among practitioners due to differences in their endodontic treatment philosophies, which in turn dictate the chair time required, the materials selected, and the technologies utilized.
In conclusion, there can be marked discrepancies in the fees charged for root canal treatment by different dentists. Ultimately, the best value for care is treatment that is done once and works over a period of many years. Conversely, the most expensive dental treatment is the treatment that may cost less initially but does not work predictably and needs to be redone one or more times. The wise dental consumer does not make a treatment decision on the basis of cost alone.
from
http://vdc.dentistindia.com/rootcanaltreatment.asp
உங்களது கேள்விகளுக்கான பெரும்பான்மையான பதில்கள் இங்கு உள்ளது .உங்கள் கருத்தினை கூறவும்
நண்பர்களே,
உங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி!!
<<>>
சித்ரா,
//பண வசதி இருக்கிறவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வண்ணம் இருக்கிறது, மருத்துவ வசதி..... அவல நிலை மாற வழி??? //
உங்கள் கருத்து சரியே, புரிகிறது..
<<>>
//தயவு செய்து பின்னூட்டங்களில் அநாகரீகமான வார்த்தைகளை தவிர்க்க முயற்சி செய்யவும்//
இதனை வழிமொழிகிறேன்.. விவாதம் ஆரோக்கியமானதாய் இருக்க இது மிகவும் அவசியம்!!
<<>>
ராம்,
உங்களது தகவல்கள் பயனுள்ளவையாக இருந்தன.. இந்த ட்ரீட்மெண்ட்டின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள உதவின.. மிக்க நன்றி!!
Post a Comment