Sunday, February 14, 2010

அசல் கவிதை - காதலர் (தொலைத்த) தினம்



தினமும் பல மணி நேரம் பேசி மகிழ்ந்த நாட்கள் எங்கே?
அன்பில் தோய்த்தெடுத்த மின்னஞ்சல்கள் எங்கே?
குறும்பு நிறைந்த குறுஞ்செய்திகள் எங்கே?
அடிக்கடி கொடுத்து மகிழ்ந்த பரிசுப் பொருட்கள் எங்கே?
என்ன உடை, என்ன உணவு, என்ன செய்கிறாய் என்ற குசல வினவுகள் எங்கே?
கிண்டல் பேச்சுக்கள் எங்கே?
செல்ல ஊடல்கள் எங்கே?
பொங்கி வழிந்த காதல் எங்கே?
என் மனைவியே, இத்தனையும் இரண்டு வருடத்தில் மறைந்தது எங்கே?

5 comments:

நாமக்கல் சிபி said...

2 வருஷம் ஆச்சா! வாழ்த்துக்கள்!

பழூர் கார்த்தி said...

உங்க வாழ்த்திற்கு நன்றி, சிபி!
எனக்கு இன்னும் திருமணமாகி இரு வருடங்களாக வில்லை! எனது எழுத்துக்களின் மூலம் என்னை அறிந்து கொள்ள முயற்சிக்காதீர்கள் என்ற தலைவரின் வசனத்தை இங்கே நினைவூட்டுகிறேன் :-))

நாமக்கல் சிபி said...

ஐயா! நான் வாழ்த்து சொன்னது உங்களுக்கல்ல! நீங்கள் எழுதியிருக்கும் கவிதையின் தலைவனுக்கு(கதாபாத்திரத்துக்கு)!

கதாபாத்திரங்களுக்கு இடப்படும் பின்னூட்டங்களை தங்களுக்கு இடப்பட்ட பின்னூட்டங்களாக நினைத்து உங்களை குழப்பிக் கொள்வதோடு மட்டுமின்றி, அந்த கதாபாத்திரத்தையும் குழப்பித் தொலைக்காதீரும்!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Unknown said...

தற்கால காதல் திருமணங்கள் சில காலத்தில் கசக்கின்றமை
கசப்பான விடயம் தான்