Sunday, January 03, 2010

அவதார் - இப்படியொரு திரைப்படம் தமிழில் வருமா?

அனைவருக்கும் எனது இதயங் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த புத்தாண்டில் நான் வழக்கமாய் செய்யும் சிலவற்றை செய்யவில்லை.


1. 31-ம் தேதி இரவு 12 மணிவரை கண்விழித்திருக்க வில்லை. மாலையில் எங்களது அடுக்ககத்தில் (Apartment) சில கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னை புறநகர் காவல்துறை கண்காணிப்பாளர் ஜாங்கிட் வந்திருந்தார். இரவு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்துவிட்டு உறங்கி விட்டேன்.

2. புத்தாண்டு முதல் தேதியில் எவருக்கும் தொலைபேசியில் வாழ்த்து சொல்ல வில்லை. என்னை பொருத்த வரை புத்தாண்டின் முதல் நாளும் மற்ற எந்தவொரு நாளைப் போல் சாதாரணமானதே.

3. கோவிலுக்கு செல்ல வில்லை. வீட்டிலேயே கடவுளை வழிபட்டேன்.

<<>>இன்று மதியம் சத்யம் - சாந்தம் தியேட்டரில் அவதார் திரைப்படத்தை கண்டு ரசித்தோம். டிக்கெட் 120 ரூபாய், இணையத்தில் பதிவு செய்திருந்தோம். தியேட்டரில் 3D கண்ணாடிக்கென 20 ரூபாய் தனியே வாங்கிக் கொண்டனர். இதை டிக்கெட்டுடனேயே வாங்கியிருக்கலாமே என்று தோன்றியது. இணையத்தில் அவ்வசதி இல்லையோ?

அற்புதமான திரைப்படம் அவதார். வித்தியாசமான கதை, விறுவிறுப்பான தெளிவான திரைக்கதை. இப்படியெல்லாம் ஹாலிவுட் திரைஉலகினர் எப்படி சிந்திக்கிறார்கள் என்று பொறாமையும், ஏக்கமும் படவைக்கிறது. பாண்டாரா கிரகம், அதில் வாழும் மனிதர்கள், மிருகங்கள் என கிராபிக்ஸில் புகுந்து விளையாடி உள்ளனர். இப்படம் தயாரிக்க பத்து வருடம் ஆனதாம், அந்த உழைப்பு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.

3Dயில் பார்த்தது ஓர் அற்புதமான அனுபவம். ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு மிஞ்சுகின்றன. பாண்டாரா காட்டில் ஹீரோ ஓடும்போதும், தாண்டும்போதும் நாமும் கூடவே தாண்டுவது போல் உணர்வு ஏற்பட்டது. இப்படியொரு ஆக்-ஷன் திரைப்படத்தில் அழகாக ஒரு காதலையும் சொல்லியிருக்கின்றனர்.

காட்சிகள் ஏற்படுத்திய பிரமிப்பினாலும், மொழி உச்சரிப்பினாலும் எனக்கு ஒரு சில இடங்களில் வசனம் புரியவில்லை, இருந்தாலும் ரசிக்க முடிந்தது. தியேட்டரை விட்டு வெளியே வரும்போது பிரமாண்டமான வேட்டைக்காரன், ஆதவன் போஸ்டர்கள் கண்ணில் பட்டதும் என்னுள் எழுந்தது கழிவிரக்கமா / சோகமா / கோபமா என்று சொல்லத்தெரிய வில்லை.

இப்படியொரு படம் தமிழில் வருமா? ஏன் அறிவியல் / தொழில்நுட்பம் / வானவியல் தொடர்பான திரைப்படங்களை தமிழில் எவரும் தயாரிக்க வில்லை? அதற்கான சூழ்நிலை இங்கே இல்லையா? உலக அளவிலான மார்க்கெட் (viewer ship) இல்லாததுதான் காரணமா?

4 comments:

Anonymous said...

no movie will come like this in tamil forever...

Raja Raja Cholan said...

முதல்ல பட்ஜெட்,

அவதார் படம் கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலரைத் தாண்டும் பட்ஜெட். அதுக்கு பக்கத்தில கூட தமிழ்சினிமா ஏன், இந்தி சினிமாகூட நிக்கமுடியாது.

இரண்டாவது வைட் ரிலீஸ்

தமிழ் ஒரு குறுகிய வட்டத்தில இருக்கு. ஆங்கில அப்படி இல்லை. அதனால்தான் பண்டோரா வாசிகள் கூட ஆங்கில பேசறாங்க,

திறமை :

நம்ம தமிழ் சினிமா தொழில் வல்லுனர்களுக்கு திறமை இருக்கு ஆனா உபயோகம் படுத்த முடியலை. அதுக்கு பல காரணங்கள் சொல்லலாம். ஒரு டைரக்டர் சுதந்திரமா கதையை எடுக்க முடியாது. ஹீரோக்கள் கதையில் தலையிடுவாங்க,

சரி விடுங்க..

பிரம்மாண்டமா எடுத்தாத்தான் சினிமான்னு இல்லை. பிரம்மாண்டமா எடுத்த படங்களைவிட, ஆவ்ரெஜ் பட்ஜெட் படங்கள்தான் பெயர் வாங்கும். அதுக்கு பிரம்மாண்டம் காரணமில்லை. சப்ஜெக்ட். நம்ம தமிழ் சினிமா இன்னும் எப்போ புதுசு புதுசா இறங்கிறாங்களோ அப்பத்தான் மாறும்.

விஜய்யோட சமீப படங்களை எடுத்துக்கோங்க.. சப்ஜெக்ட் மாறியிருக்கா என்ன? ஒரேமாதிரியான கதை கரு எத்தனை படத்தில பார்த்திருப்பீங்க. பின்ன எப்படி மாறும்?

சோழன்

Raja Raja Cholan said...

அவதார் படம் தமிழ்ல இருக்கே..

Avatar Dubbed in tamil. Lol!

பழூர் கார்த்தி said...

பெயரில்லா, உங்க கருத்துக்கு நன்றி!

<<>>

ராஜ ராஜ சோழன்,

நீண்ட விளக்கத்திற்கு நன்றி!
உண்மைதான், இப்படியொரு பட்ஜெட்டை தமிழில் செய்ய முடியாதுதான்...

<<>>

சென்னையில் அவதார் தமிழில் திரையிடுகிறார்களா, என்ன??