Sunday, June 28, 2009

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் - இன்றைய கிரிக்கெட் போட்டி - முன்னோட்டம்

இந்தியா டிவெண்ட்டி20 உலகக் கோப்பைத் தொடரில் சீக்கிரம் தோற்று வெளியேறிய போது வானத்திற்கும், பூமிக்குமாய் எகிறிக் குதித்தவர்களே, எங்கே இருக்கறீர்கள் நீங்களெல்லாம்? இப்போது சொல்லுங்கள், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முதல் போட்டியை இந்தியா வென்று விட்டது. அநேகமாய் தொடரை வெல்லவும் நிறைய வாய்ப்பு இருக்கிறது.

முதல் போட்டியின் யுவராஜ் பேட்டிங்கை பார்த்தீர்களா? சும்மா கிரிக்கெட் மட்டையை கதாயுதம் போல் கையாண்டு ரதகளப் படுத்தினார். ஜெரோம் டெய்லர் முதல் 5 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்தவர், யுவராஜ் எனும் புயலில் சிக்கி ஆலை வாய் பட்ட கரும்பை போலாகி விட்டார். இரண்டு ஓவரில் 30 ரன்கள். இந்த போட்டியில் யுவராஜ் இறங்கினால், நான் விளையாட மாட்டேன் என்று அடம்பிடிகிறாராம் :-)

சரிதான், டெண்டுல்கர், சேவாக் இல்லை, பேட்டிங் வீக் என்று முடிவு செய்தவர்களுக்கு யுவராஜைத் தவிர தினேஷ் கார்த்திக், தோனி, பதான் போன்றவர்களும் தம் திறமையை நிரூபித்தனர். கம்பீர், ரோகித் ஷர்மாவும் நல்ல திறைமையான பேட்ஸ்மேன்களே, சீக்கிரம் பார்முக்கு வந்தால் இந்தியாவுக்கு நல்லது.

நமது பவுலிங்தான் வீக்காக உள்ளது. இஷாந்த் ஷர்மா சொதப்புகிறார், அவருக்கு பதிலாய் வேறு யாராவது வரலாம். ரவிந்திர ஜடேஜாவும் அவ்வுளவு எபெக்ட்டாக இல்லை, ரவி தேஜா வரலாம். பந்து வீச்சை பலப்படுத்தினால், தொடர் நமது பக்கம் எளிதாய் வந்து விழும்.

இன்றைய போட்டி இரவு 8 மணி இந்திய நேரத்துக்கு தொடங்குகிறது; பரபரப்பாய் இருக்குமென எதிர்பார்க்கலாம்! இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!! :-)

16 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நண்பரே பொறுங்கள்... இன்னமும் மூன்று போட்டிகள் உள்ளது..

பழூர் கார்த்தி said...

குறை ஒன்றும் இல்லை!!!,

நினைவு படுத்தியதற்கு நன்றி!! ஹிஹி.. கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டுட்டேன் :-)))

அதுசரி, இம்புட்டு பாஸ்ட்டா கமெண்ட் போட்டதற்கு ஒரு ஸ்பெசல் நன்றி!!

நாமக்கல் சிபி said...

//நமது பவுலிங்தான் வீக்காக உள்ளது.//

அப்போ ஃபீல்டிங்க் பக்காவா இருக்குன்னு சொல்ல வறீங்களா கார்த்தி? கொமட்டுலயே குத்திப்புடுவேன்!

பழூர் கார்த்தி said...

நாமக்கலி சிபி,
உங்க கருத்துக்கு நன்றி!!

உள்ளதை சொல்லனும்னா, நம்ம அணிக்கு எல்லாமே வீக்தான் :-)))

எந்த முகூர்த்த்தில இந்த போஸ்ட்டை போட்டேனோ தெரியலை.. இந்தியா இன்றைய போட்டியின் பேட்டிங்கில் தடுமாறிகிட்டு இருக்கு

72 ரன்னுக்கு 6 விக்கெட், அனேகமா நூறைத் தாண்டாது போலிருக்கு :-((
இவிங்களை நம்பி ஒரு ப்ளாக் எழுத முடியலப்ப்பா :-(((((

வந்தியத்தேவன் said...

கார்த்தி 82க்கு 8 விக்கெட் இப்போதான் பிரவீன் குமார் வெளிநடப்புச் செய்தார்.

நாமக்கல் சிபி said...

101/8 (28 ஓவர்கள்)

நாமக்கல் சிபி said...

பத்து விக்கெட்டும் காலியாகாம கௌரதையா டிக்ளேர் பண்ணிகிட்டா நல்லதுன்னு நினைக்கிறேன்!

shabi said...

பத்து விக்கெட்டும் காலியாகாம கௌரதையா டிக்ளேர் பண்ணிகிட்டா நல்லதுன்னு நினைக்கிறேன்!//விளையாடுறது ONEDAY.... TEST இல்ல DICLARE லாம் பண்ணமுடியாதுங்கோ............................

நாமக்கல் சிபி said...

//விளையாடுறது ONEDAY.... TEST இல்ல DICLARE லாம் பண்ணமுடியாதுங்கோ............................//

நமக்கு கிரிக்கெட்டால் அவ்வளவா தெரியாதுங்கோ..............!

:))

seik mohamed said...

188/10 india
dhoni 95

நாமக்கல் சிபி said...

வெஸ்ட் இண்டீஸ் : 83/0 (13.0 ஓவர்கள்)

நாமக்கல் சிபி said...

//72 ரன்னுக்கு 6 விக்கெட், அனேகமா நூறைத் தாண்டாது போலிருக்கு :-((
இவிங்களை நம்பி ஒரு ப்ளாக் எழுத முடியலப்ப்பா :-(((((//

இந்தியா 188/10
அவங்களை நம்பி நீங்க ஒரு கமெண்டு கூட போட முடியலயே!
:((((

பழூர் கார்த்தி said...

நண்பர்களே, உங்கள் பின்னூட்டங்களுக்கும், கருத்துக்கும் நன்றி!! :-)

<<>>

நாமக்கல் சிபி, ரன்னிங் கமெண்டரி போல, ரன்னிங் பின்னூட்டம் கொடுத்து அசத்தறீங்களே :-)

<<>>

பழூர் கார்த்தி said...

வந்தியத்தேவன், Shabi, பார்சா குமாரன், சிபி,

இந்த பய புள்ளைகளை (இந்திய வீரர்களை) நம்பி ஒரு பின்னூட்டம் கூட போட முடியறதில்லை... ஹூம் என்னத்தை விமர்சனம் பண்ண???

எட்வின் said...

இந்த பதிவிற்கு தானா மூன்றே மணி நேரத்தில் அடி கிடைத்தது... :)

பழூர் கார்த்தி said...

ஆமாங்க எட்வின்,

என்ன பண்றது.. கிரிக்கெட் சூதாட்டம் போல ஆயிடுச்சு :-(