Saturday, June 27, 2009

கால்டாக்சி - சென்னையின் வரப்பிரசாதம்

கால்டாக்சி என்பதற்கு தமிழில் என்ன என்று சொல்லுங்களேன். அழைப்பு சிற்றுந்து எனலாமா?

சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஆட்டோகாரர்களின் அட்டகாசம் பற்றி எழுதியிருந்தேன். 7 கிமீ தூரத்திற்கு 120 ரூபாய் கூசாமல் கேட்கிறார்கள்.

இவர்களின் அட்டகாசத்தை ஒடுக்க ஒரு வழி கண்டு பிடித்து விட்டேன். அது என்னவென்றால் ஆட்டோவில் இனிமே முடிந்தவரை பயணிக்க கூடாது. எங்கே போனாலும் பைக் அல்லது கால் டாக்சியில் போவதென்று முடிவெடுத்தாயிற்று.

சென்ற வாரம் நுங்கம்பாக்கம் ஓட்டல் பாம்க்ரோவில் உறவினர் இல்ல திருமண ரிஷப்ஷன் இருந்தது. குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம் என முடிவெடுத்து கால் டாக்சி (FAST TRACK) புக் செய்தோம். கரெக்டான நேரத்திற்கு வந்து மொபைலில் அழைத்தார் டிரைவர்.

உள்ளே அமர்ந்தவுடனேயே மீட்டர் ஆன் செய்யப்பட்டது. வேறு பேச்சே இல்லை. முதல் 5 கிமீ தூரத்திற்கு 100 ரூபாய். மேற்கொண்டு ஒவ்வொரு கிமீ தூரத்திற்கும் 10 ரூபாய். வெயிட்டிங் சார்ஜ் (டிராபிக் சிக்னலில் வண்டி நின்றபோது) ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய். எங்கள் வீட்டிலிருந்து (ராமாபுரம்) நுங்கம்பாக்கம் ஹோட்டலுக்கு 10 கிமீ தூரத்திற்கு மீட்டர் காட்டிய தொகை 157 ரூபாய் கட்டி நிகழ்ச்சிக்கு சென்றோம்.

அருமையான சேவை, டாக்சி புக் செய்தவுடன், வண்டி எண், டிரைவர் பெயருடன் அவரது மொபைல் நம்பர் போன்ற விபரங்களுடன் SMS வந்தது.

மனதிற்கு நிறைவாய் இருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, திரும்பவும் கால் டாக்சியிலே திரும்பி வந்தோம்.

நாங்க இனிமே எங்க போனாலும் கால் டாக்சிதான், அப்ப நீங்க??

14 comments:

http://urupudaathathu.blogspot.com/ said...

////7 கிமீ தூரத்திற்கு 120 ரூபாய் கூசாமல் கேட்கிறார்கள்.//


ஒரு சின்ன சந்தேகம்??
கால் டாக்சியிலிம் கணக்கு போட்டு பார்த்தால், ஆட்டோகாரர் கேட்ட தொகை சரிதானே??


///5 கிமீ தூரத்திற்கு 100 ரூபாய். மேற்கொண்டு ஒவ்வொரு கிமீ தூரத்திற்கும் 10 ரூபாய். வெயிட்டிங் சார்ஜ் (டிராபிக் சிக்னலில் வண்டி நின்றபோது) ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய். எங்கள் வீட்டிலிருந்து (ராமாபுரம்) நுங்கம்பாக்கம் ஹோட்டலுக்கு 10 கிமீ தூரத்திற்கு மீட்டர் காட்டிய தொகை 157 ரூபாய் கட்டி நிகழ்ச்சிக்கு சென்றோம்///

உதாரணதிற்கு : கால்டாக்சியில் 7 கிமீ க்கும் அதே 120 ரூபாய் தானே வருகிறது??


( ஹி ஹி டென்சன் ஆக வேண்டாம்.. சும்மா ஒரு நக்கல் தான்)

நா. கணேசன் said...

call taxi = அழைப்புந்து

நா. கணேசன்

புருனோ Bruno said...

// நா. கணேசன் கூறியது...
call taxi = அழைப்புந்து
//

நன்றி சார்

ஈரோடு கதிர் said...

//ஒரு சின்ன சந்தேகம்??
கால் டாக்சியிலிம் கணக்கு போட்டு பார்த்தால், ஆட்டோகாரர் கேட்ட தொகை சரிதானே??//

ஆட்டோவிலே 3 பேரு

டாக்ஸீலே 5 பேரு மாமே!!!!

ஹி ஹி ஹி ஹி

வடுவூர் குமார் said...

குடும்ப மாக செல்ல கால் டேக்ஸி தான் சரி.
ஆட்டோவில் மீட்டர் அது இது என்று பேச்சு வந்ததே! என்னாச்சு என்று தெரியவில்லை.இது வேற அவ்வப்போது ஞாபகம் வந்து தொலைக்கிறது.

நா. கணேசன் said...

மரு. புருனோ,

இயங்குள் = engine
(-உள் என்னும் விகுதியத் தமிழ்ப் பெயர்ச்சொற்கள் பல ஏற்கும்).
விசையுருளி/பொறியுருளி = motor cycle

துள்ளுந்து = scooter
மலையுந்து = jeep
மகிழுந்து = pleasure car
பேருந்து = bus
சிற்றுந்து = minibus
வாடகை உந்து = taxi
அழைப்புந்து = call taxi
சொகுசுந்து = deluxe bus
அடுக்குந்து = decker bus
விரைவுந்து = express bus
சுமையுந்து/சரக்குந்து = lorry

நா. கணேசன்

Anonymous said...

I dont know Why we always want to name others "child". If a thamizhan invent something let hime name it in thamizh... otherthings just accept it in its original name..

சீமாச்சு.. said...

//I dont know Why we always want to name others "child". If a thamizhan invent something let hime name it in thamizh... otherthings just accept it in its original name..

//

வாவ்.. நல்ல கருத்தாத் தெரியுதே...

யாராவது இதுக்கு மறுப்பு இருந்தால் சொல்லுங்க ராஜா !!

பழூர் கார்த்தி said...

உருப்புடாதது அணிமா,

உங்கள் கருத்திற்கு நன்றி! பணமென்னவோ அதேதான், ஆனால் டாக்சியின் வசதிகள் வேறல்லவா, உதாரணமாக ஒரு டாடா இண்டிகா கால் டாக்சியில் 4 பேர் சாய்ந்து, வசதியாக அமரலாம், எப்.எம் ரேடியோவோ அல்லது சிடி ப்ளேயரில் பாடலோ கேட்கலாம். ஏசி வசதியும் உள்ளது (கி.மீக்கு 12 ரூபாய்). கதவுகள், ஜன்னல்கள் மூடிடலாம், தூசு தும்பு கிடையாது, பெரிய நிறுவனத்தின் மூலம் வருவதால் நம்பகமானது, இரவு 12 மணிக்கும் நம்பி ஏறலாம்...

விளக்கம் போதுமா :-)))) ஹிஹிஹி

அதுசரிங்க, உங்க பெயர்க்காரணம், விளக்கம் சொல்லுங்களேன் :-)

பழூர் கார்த்தி said...

நா.கணேசன்,
உங்கள் தமிழாக்கத்திற்கும், விளக்கத்திற்கும் நன்றி!!

அனைத்து வார்த்தைகளுமே அருமை.. ஜீப்பை மலைப்பாதையில் நிறைய பயன்படுத்துவதால், மலையுந்து என்கிறீர்களா?? இதுமாதிரி நிறைய தமிழ் கலைச்சொற்களை காண/கண்டறிய ஏதேனும் இணையத்தளம் உள்ளதா?

உதாரணத்திற்கு project, deadline, defect போன்றவற்றிற்கு தமிழ் கலைச்சொற்களை கூற முடியுமா??

பழூர் கார்த்தி said...

புருனோ, உங்க நன்றிக்கு நன்றி!!

<<>>

கதிர்,
உங்க கருத்துக்கு நன்றி!! பெரும்பாலான கால் டாக்சிகளில் நான்கு பேர்தான் தாராளமாய் பயனிக்கலாம் :-)

<<>>

வடுவூர் குமார்,
உங்க கருத்திற்கு நன்றி!!
எல்லோ ஆட்டோவிலுமே மீட்டர் உள்ளது, ஆனால் இயக்க மாட்டர்கள், பேரம் பேசித்தான் செல்ல வேண்டும்..

<<>>

பழூர் கார்த்தி said...

பெயரில்லா,

இந்த விளையாட்டுக்கு நான் வரலைங்க.. என்னை விட்டுடுங்க :-)

<<>>

சீமாச்சு,

உங்களுக்கு பதில் தந்து வம்பில் மாட்டிக்க விரும்ப வில்லை :-)

விஜய் said...

மற்ற மாநகரங்க்ளை ஒப்பிடாமல் போனால்கூட சென்னை, ஆட்டோ விஷயத்தில் ரொம்ப ரொம்ப மோசம். இன்னமும் ஒழுங்காக மீட்டர் போடுவதில்லை. இவர்கள் சொல்லும் அநியாய விலையை குறைத்துக்கேட்டால் கேவலமான நாகரீகமற்ற முரையில் பதில் வரும். ஒருகாலத்தில் மந்திரிகளும் எம்.எல்.ஏக்களும் சிலபல ஆட்டோக்களை வாங்கி வாடகை விடுவர். இப்போது, அதெல்லாம் அவர்களின் ‘ரேஞ்சு’க்கு ரொம்ப கம்மி என்பதால் சமுதாயத்தின் அடுத்தநிலை ரவுடிகளான போலீஸ்காரர்கள் இப்போது அதை செய்கின்றனர். ஆம். சென்னையிலுள்ள பல ஆட்டோக்களின் சொந்தக்காரர்கள் போலீஸ் தான். இதுவே முறையற்ற மீட்டருக்கும் வசூலுக்கும் முக்கிய காரணம்.

பெங்களூரிலுள்ள ஆட்டோகாரர்கள் பல மடங்கு டீசண்ட். ஒன்று ஒழுங்காக மீட்டர் போடுவார்கள் இல்லையேல் முடியாது என்று நாகரிகமாக சொல்லிவிடுவார்கள்.

தமிழ்நாட்டில் அரசாங்கம் எப்போதுமே அடித்தட்டு மக்களுக்கும் மேல்தட்டு மக்களுக்குமே இயங்கிக்கொண்டிருக்கிரது. அதனால் தான் வேறு எங்குமே இல்லாத அளவுக்கு பஸ் கட்டணம் ரொம்பவும் கம்மியாக உள்ளது. ஆனால் ஆட்டோவில் செல்ல நினைக்கும் நடுதட்டு மக்களின் கவலையை அரசும் சரி போலீசும் சரி, அம்திப்பதேயில்லை. அதனால் தான் ஆட்டோக்காரர்கள் இந்த அட்டூழியம்.

பெங்களூரிலிருந்து சென்னை வந்து பல இடங்களுக்கு போக ஆட்டோவால் ரொம்பவே அவதியுற்று இப்போது நண்பனின் பைக் மட்டுமே பயன்படுத்துகிறேன்.

இத்தனைக்கும் நான் உள்ளூர்க்காரன். இந்த தடியன்களுக்கு தமிழ் தவிர ஒரு எழவும் தெரியாததனால் வெளியூர்காரர்களுக்கும் இவனுங்க ஒரு பெரிய இம்சைதான்.

பழூர் கார்த்தி said...

விஜய், உங்களது நீண்ட பின்னூட்டத்திற்கும், கருத்துக்கும் நன்றி!! இந்த ஆட்டோகாரர்களை எப்படி ஒடுக்கலாம் என்றே தெரியவில்லை :-(