Tuesday, June 30, 2009

சன் டிவியே, உன் அழும்புக்கு எல்லையில்லையா?

சன் டிவி டாப்டென் சென்ற ஞாயிற்றுக்கிழமை யாராவது பார்த்தீர்களா? நான் பார்க்க வில்லை. இன்று மதியம் பெங்களூரிலிருந்து நண்பர் அருண் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.

சன் டிவியின் டாப் டென் மூவிஸ் நிகழ்ச்சியில், மாசிலாமணி முதலிடமாம். கடவுளே, இந்த கொடுமையை கேட்பாரில்லையா?? கொஞ்ச நாள் முன்பு தெனாவட்டு, ஆயுதம் செய்வோம் போன்ற படங்களையும் இதே மாதிரிதான் முதலிடத்தில் 'வைத்து' இருந்தனர் என நினைக்கிறேன்.

இப்படி பகிரங்கமாய் மோசடி செய்கின்றனரே, இதற்கு பேசாமல் இந்த நிகழ்ச்சியையே நிறுத்தி விடலாமே!! மக்கள் யாராவது இதை (இந்த ரேட்டிங்கை) நம்புகிறார்களா? என்னை பொறுத்த வரை, நான் நீண்ட நாட்களுக்கு முன்பே இந்நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். மாசிலாமணி, நிஜமாகவே முதலிடத்திற்கு தகுதிதானா? பசங்க, நாடோடிகள் போன்ற படங்களுக்கு சன் டிவி கொடுத்த ரேட்டிங் என்ன? யாராவது பார்த்தவர்கள் சொல்லுங்களேன்.

இப்படியே போனால், இன்னும் ஒரு வருடத்தில் டாப் டென் படங்களுமே சன் குழுமம் தயாரித்த படங்களே பிடித்து விடுமே! மக்கள் நம்பிக்கை இழந்து இந்நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தி விடுவார்கள் என்று சன் டிவிக்கு தெரியாதா??

இதேபோல் விகடன் குழுமம் தயாரித்த வால்மீகி படத்துக்கு ஆனந்த விகடனில் வழங்கப்பட்ட மார்க் என்ன? விமர்சனம் வந்து விட்டதா? படம் சரியில்லை என கேள்விப்பட்டேன், சிவா மனசில சக்தி என்ற மொக்கைக்கே ஆனந்த விகடன் 40க்கு மேல் மதிப்பெண் அளித்ததாக ஒரு ப்ளாக்கில் படித்தேன், உண்மைதானா?

இம்மாதிரி ஊடகங்கள் தயாரிக்கும் படங்களுக்கு அவர்களே விமர்சனம், ரேட்டிங் போன்றவற்றை தரக்கூடாது என சட்டமியற்ற இயலுமா, சாத்தியாமா சொல்லுங்களேன்!

30 comments:

வந்தியத்தேவன் said...

சன்னின் டாப் டென் என்றோ மதிப்பபிழந்துவிட்டது, என்றைக்கு இவர்கள் தங்களுக்கு தொலைக்காட்சி உரிமைகொடுக்கின்ற படங்களுக்கு முன்னுரிமைகொடுத்தார்களோ அன்றைக்கே சன்னின் நடுநிலையும் நம்பகத்தன்மையும் கெட்டுவிட்டது. நல்ல காலம் ஏனோ தினகரன் சினிமா விருதுகளை நிறுத்திவிட்டார்கள் இல்லையென்றால் சென்ற வருடத்தின் சிறந்தபடம் காதலில் விழுந்தேன். சிறந்த நடிகர் நகுல் என விருதுகள் கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள்.

Anonymous said...

tamillakalaye kollurathu ellam maraikraanga ithuku pooi alukureengale? ini tamilnadunda kathi ippadihtan irukkum dont worry.

பழூர் கார்த்தி said...

வந்தியத்தேவன்,

வருத்தமாய் இருக்கிறது... இதில் தினகரன் விருதுகள் வேறா, நல்ல வேளை நிறுத்தினார்களே, தப்பித்தோம் போங்க :-)

<<>>

பெயரில்லா,

செய்திகளில் எப்போதும் நடுநிலைமை இல்லை, இப்போது கலைஞரிடம் மீண்டும் சேர்ந்ததும் இன்னமும் மோசமாகி விட்டதே!!

யாத்ரீகன் said...

>>> இந்நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தி விடுவார்கள் <<<


எதாவது நடக்குற விஷயமா பேசுங்க பாஸு :-))

மயாதி said...

அது அப்படித்தான், தமிழன் என்றால் எல்லாத்தையும் சகிச்சுக்கனும்.
இப்படியெல்லாம் உண்மை பேசக் கூடாது....

நண்பரே உங்களுக்கு ரோசம் , மானம் எல்லாம் மிச்சம் இருக்கு போல , கொஞ்சம் உப்பு கம்மியா போட்டு குறைச்சு கொள்ளுங்கள், இல்லாட்டி இந்த உழகத்தில் வாழுறது கஷ்டமையா!!!!!!!

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

/சன் டிவியின் டாப் டென் மூவிஸ் நிகழ்ச்சியில், மாசிலாமணி முதலிடமாம். கடவுளே, இந்த கொடுமையை கேட்பாரில்லையா??//

காக்கைக்கும் தன் கு. பொன் கு.

அகராதி பிடிச்சவன் said...

//இம்மாதிரி ஊடகங்கள் தயாரிக்கும் படங்களுக்கு அவர்களே விமர்சனம், ரேட்டிங் போன்றவற்றை தரக்கூடாது என சட்டமியற்ற இயலுமா, சாத்தியாமா சொல்லுங்களேன்! //

யோவ்! எதையும் நீர் சொல்ல மாட்டீரா?

நீர் என்ன சொல்லுறீரு? அதைச் சொல்லுமையா முதல்ல!

கசாமா முன் வார்டன் said...

தூக்கிரலாமா சன் டிவியை!

ஒரு வார்த்தை! ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க!

தூக்கிடலாம்!

சரியூர் பைக்தி said...

பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி!

பழூர் கார்த்தி said...

//காக்கைக்கும் தன் கு. பொன் கு.//

ஹிஹி!


(ஐயய்யோ! என்ன இது? என் ஃபோட்டோ டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குதே! யாராச்சும் என்ன ஆச்சுண்ணு சொல்லுங்களேன்)

விஜய் டி.வி said...

நல்லா சொன்னீங்கண்ணே!

பஞ்சாயத்து டிவி said...

நம்ம புராக்ராமெல்லாம் சும்மா கில்லி மாதிரி இருக்கும்!

பக்கத்து வூட்டு டி.வி said...

இங்க ஓசியிலயே ஒலியும் ஒளியும் பார்க்கலாம்!

சந்தானம் said...

உங்களைப் பார்த்தா லொள்ளு சபா மனோகர் மாதிரியே இருக்கு!

பழூர் கார்த்தி said...

யாத்ரீகன்,

என்ன சொல்றீங்க, இந்த நிகழ்ச்சி எவ்ளோ மொக்கையா போனாலும், மக்கள் பாத்துக்கிட்டே இருப்பாங்களா??
:-))

<<>>

மயாதி,
என்ன பண்றதுங்க.. சகிச்சுகிட்டுதான் வாழறோம்.. சில சமயத்தில் தாங்க முடியாம பொங்கிடுதுங்க :-))

<<>>

பழூர் கார்த்தி said...

ஷோபிக்கண்ணு,

உங்க வார்த்தை நிஜமே, ஆனால் விமர்சனம், ரேட்டிங் என்று வரும்போது நடுநிலைமை இருக்க வேண்டுமல்லவா!!

<<>>

அகராதி பிடிச்சவன்,
ரொம்ப டென்சன் ஆயீட்டீங்க போல.. கோச்சுக்கிடாதீங்க.. என்னோட கருத்து என்னான்ன, இந்த மாதிரி நிகழ்ச்சிகளை தடை செய்திடலாம்... அது சட்டப்படி சாத்தியமான்னு என் சிற்றறிவுக்கு எட்டலை, அதைத்தான் வாசகர்களிடம் கேட்டிருக்கேன் :-)

<<>>

பழூர் கார்த்தி said...

கசாமா முன் வார்டன்,
என்னது தூக்கிரலாமாவா??? அவனா நீ.. யப்பா.. வன்முறை வேணாம்ப்பா... :-))) உங்க பேரு சூப்பராயிருக்கு :-))

<<>>

சரியூர் பைக்தி,
என் சார்பா நீங்க நன்றி சொன்னதுக்கு நன்றி :-))

<<>>

பழூர் கார்த்தி என்கிற பெயரில் பின்னூட்டம் இட்ட நண்பரே (சரியூர் பைக்தி பின்னூட்டத்திற்கு அடுத்து வரும் பின்னூட்டம்),

உங்க கருத்துக்கு நன்றி, ஆனா ஏன் எனது பெயரில் சொல்றீங்க.. உங்க பெயரிலோ, அல்லது அனானியாகவோ வாங்களேன்.. வலையுலக சுதந்திரத்தை தயவுசெய்து மிஸ்யூஸ் பண்ணாதீங்க!

<<>>

விஜய் டிவி, கில்லி டிவி, பஞ்சாயத்து டிவி, நன்றி!!

<<>>

சந்தானம்,

உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி!, அப்ப நானும் ஏதாவது சினிமா, சீரியல்ல நடிக்கலாம்னு நினைக்கிறேன் :-))

ramalingam said...

இவர்கள் எலக்ஷ்னின்போது, தாங்கள் ஜெயிக்க என்னதான் செய்திருக்க மாட்டார்கள்.

Anonymous said...

ஒரு காலத்தில் முழுமையாக அதைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். இப்பொழுது நகைச்சுவைக்காக 1 மற்றும் 2 இடத்தை பிடித்த படங்களை மட்டும் பார்ப்பது உண்டு. Vijay TV has already pushed Sun TV to number 2. Already people started watching only Raj news. Raj news is 100% unbiased. 90% of Vijay programs are unbiased too. If Raj improves video, break management & program quality (and stop promoting Mariyathai ;-)), sure it'll overtake Sun and come to number 2 after Vijay. It's a mere waste to watch news on Sun, Kalaignar and Jaya. I don't know why Sun & Kalaignar have a separate comedy channel. Point is stop watching programs which are biased.

Interesting blogs. Swami continue the good work.

Arun C.

பக்கத்து வூட்டு டிவி said...

//விஜய் டிவி, கில்லி டிவி, பஞ்சாயத்து டிவி, நன்றி!!//


ஏன் எங்களுக்கு நன்றி சொல்லலை?
இதைக் கண்டித்து எங்கள் அண்ணன் தன்மானச் சிங்கம் பழூர் கார்த்திக்கு உடம்பெல்லாம் அலகு குத்தி 30 நாள் நடைப் பயணமா டில்லிக்குக் கூட்டிட்டுப் போறோம்!

சரியூர் பைக்தி said...

நான் நன்றி சொன்னதுக்கு நீங்க பதில் நன்றி சொல்லி இருக்கீங்க! அதுக்கொரு நன்றி!

கேலங்கள் கொலை முருகன் said...

//உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி!, அப்ப நானும் ஏதாவது சினிமா, சீரியல்ல நடிக்கலாம்னு நினைக்கிறேன் //

நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குமாம்!

நீலப்பட இயக்குனர் said...

//உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி!, அப்ப நானும் ஏதாவது சினிமா, சீரியல்ல நடிக்கலாம்னு நினைக்கிறேன் //

நாங்க எடுக்குற படத்துல ஒரு குணச்சித்திர வேடம் இருக்கு! வறீங்களா>?

சுந்தரலிங்கம் said...

// ramalingam கூறியது...

இவர்கள் எலக்ஷ்னின்போது, தாங்கள் ஜெயிக்க என்னதான் செய்திருக்க மாட்டார்கள்.//

அண்ணே!

இங்க வந்த்..வந்த்...வந்த்...வந்த்...
வந்துட்டீங்களா?

Anonymous said...

//நான் பார்க்க வில்லை//

//இதே மாதிரிதான் முதலிடத்தில் 'வைத்து' இருந்தனர் என நினைக்கிறேன்.//

//யாராவது பார்த்தவர்கள் சொல்லுங்களேன்.//


//இதேபோல் விகடன் குழுமம் தயாரித்த வால்மீகி படத்துக்கு ஆனந்த விகடனில் வழங்கப்பட்ட மார்க் என்ன? //

//விமர்சனம் வந்து விட்டதா?//

//படம் சரியில்லை என கேள்விப்பட்டேன்,//

//சிவா மனசில சக்தி என்ற மொக்கைக்கே ஆனந்த விகடன் 40க்கு மேல் மதிப்பெண் அளித்ததாக ஒரு ப்ளாக்கில் படித்தேன், உண்மைதானா?//



இவ்ளோ சந்தேகங்களை வச்சிகிட்டு பதிவு போடறிங்களே:)

மற்றபடி எனக்கும் சன் டிவி விமர்சனம் புடிக்கலைதான் :-))

பழூர் கார்த்தி said...

ராமலிங்கம்,
உங்க கருத்துக்கு நன்றி! மக்களை ரொம்பவும் influence செய்ய முயற்சிக்கிறது, சன் டிவி!

<<>>

அருண். சி,
உங்க பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி!

<<>>

பக்கத்து வீட்டு டிவி,
கோச்சுக்கிடாதீங்க.. ரொம்ப நன்றி உங்களுக்கு :-)

<<>>

சரியூர் பைக்தி,
ரொம்ப விளையாடறீங்க :-))

<<>>

பழூர் கார்த்தி said...

கேலங்கள் கொலை முருகன்,

அப்படியா சொல்றீங்க.. பயப்படாதீங்க.. நான் நடிக்க வரலை :-)

<<>>

நீலப்பட இயக்குனர்,

என்னங்க இப்படி லொள்ளு பண்றீங்க... நான் நடிக்கவே வரலைன்னு சொல்லிட்டேங்க :-)

<<>>


சுந்தரலிங்கம்,
ராம்லிங்கம் உங்களுக்கு தெரிஞ்சவரா?

<<>>

பெயரில்லா,

ரொம்ப கேள்வி கேட்டுடன்ல.. இனிமே குறைச்சுகிறேன் :-)

யாத்ரீகன் said...

இணையத்திலதான் நாம சன் டிவி மொக்கை-நு சொல்றோம், இன்னும் பல மக்கள் பார்க்குறது சன் டிவி-ன்றது மறுக்க முடியாத உண்மை.. விஜய் டிவி பக்கம் போறதெல்லாம் சிட்டி-ல இருக்குற மக்களே தவிர வேற யாரும் கெடயாது .. கேபிள் டிவிநாளே சன் டிவி ன்றது இன்னும் இருக்கு .. பெரும்பான்மையினரை கவரும் சரியான மாற்று வராத வரைக்கும் என்னதான் மொக்கை கொடுமையா இருக்கட்டும்.. சன் டிவி ஒரு பக்கம் கல்லா கட்டிக்கிடே தான் இருக்கும் ..

Anonymous said...

pazhuvur karthi,

ungalukku neraiya velai irukkum,

vettiyaa enn intha maathiri topic ellam edukuringa..,

பழூர் கார்த்தி said...

யாத்ரீகன், நீங்கள் சொல்வது சரியே, கிராமப்புறங்களில் கேபிள் டிவி என்றாலெ சன் டிவிதான்..

<<>>

பெயரில்லா,

உங்க கருத்துக்கு நன்றி!!