Saturday, April 25, 2009

சென்னை ஆட்டோகாரர்களை என்ன செய்யலாம்?

எங்கள் வீட்டிலிருந்து (ராமாபுரம், சென்னை) கோயம்பேடு செல்ல நேரடி பஸ் வசதி கிடையாது. கிண்டி சென்று அங்கே வேறு பஸ் பிடித்து கோயம்பேடு செல்லலாம், ஒரு மணி நேரம் ஆகும். ஆனால் வளசரவாக்கம், சாலிகிராமம், சின்மயா நகர் வழியே குறுக்கே சென்றால் 7 கிமீ தூரம்தான், 15 நிமிடத்தில் சென்று விடலாம், டிராபிக் இருக்காது. எனவே ஆட்டோவில் செல்வதைத்தான் விரும்புவோம்.

ஒவ்வொரு முறை நாங்கள் ஊருக்கு செல்ல கோயம்பேடு செல்ல எத்தணிக்கும் போதெல்லாம் ஆட்டோ ஓட்டுனருடன் பெரும் பேசமே நடக்கும். வாய் கூசாமல் பெரும்பாலானோர் 150 ரூபாய் கேட்கிறார்கள், எந்த ஊர் நியாயம் என்றே தெரியவில்லை. 7 கிமீ தூரத்திற்கு 150 ரூபாயா? நான் மும்பையில் இருந்த போது ஒரு கி.மீ தூரத்திற்கு 9 ரூபாய் கொடுத்ததாய் ஞாபகம். அந்த கணக்கில் பார்த்தால் 63 ரூபாய்தான் வருகிறது. இப்போது டீசல் விலை வேறு 4 ரூபாய் (இரு தடவையாய்) குறைந்து இருக்கிறது. கேட்டால் டிராபிக் இருக்கும், திரும்பி வர ஆள் இருக்காது என்று ஆயிரம் காரணங்கள் கூறுகிறார்கள். பேரம் பேசி 100 ரூபாய்க்கோ, 120 ரூபாய்க்கோ ஒவ்வொரு முறையும் செல்கிறோம்.

சென்னையில் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்? மும்பையில், புனேயில் இப்படி இல்லையே, நியாயமாய் மீட்டர் போடுகிறார்களே. இவர்களை என்ன செய்தால் திருத்தலாம், யோசனை சொல்லுங்களேன்?

21 comments:

Anonymous said...

யோசனையெல்லாம் கைவசம் ஏதுமில்லை.

//பேரம் பேசி 100 ரூபாய்க்கோ, 120 ரூபாய்க்கோ ஒவ்வொரு முறையும் செல்கிறோம்.
//

அப்பவும் இதுக்கெல்லாம் சாப்ஃட்வேர்காரனுகதான் காரணம்னு சொல்ல நாலு பேர் இருக்காங்க.

Anonymous said...

:-(

Anonymous said...

Government has to take series action against them. but our safer side CM won't go against Auto drivers. He need their support.

ஆதவா said...

என் தளத்தில் உங்கள் பின்னூட்டம் வழியாக வந்தேன்.. வருகைக்கு நன்றீங்க.

இவர்களை என்ன செய்யலாம்??

பேசாமல் ஆட்டோவில் போகாமல் பஸ்ஸிலாவது போய்விடலாம்!!!! ஹாஹா!!!

இன்னும் ஆட்டோ ராஜ்ஜியம் தமிழகத்தை விட்டபாடில்லை!!

ஆ.சுதா said...

நிரைய ஆட்டோக்காரர்கள் நீங்கள் சொல்லுவது போல் தான் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அதை நிர்பந்திபதும் நாம் தான், கையில் காசிருந்தாலோ அல்லது சின்ன அவசரம் என்றாலோ அவர்கள் கேட்பதில் பத்தை குறைத்துக் கொண்டு ஏறி சென்று விடுகிறோம்.
இன்னும் சிலர் எதுவும் கேட்பதில்லை
ஆட்டோவை கை தட்டிக் கூப்பிட்டு அங்கோ போ என்று மட்டும்தான் பேசுவார்கள், கேட்டதை கொடுத்து விட்டு இறங்கிக் கொள்வார்கள். இப்படியாக அவர்களுக்கு உங்களை என்னை போன்றவர்கள் ஏற வில்லை என்றாலும் அவர்களுக்கு ஒன்றும் இழப்பு இல்லை.. நண்பா,

மேலும் எல்லோரையும் அப்படி சொல்லிவிட முடியாது.
என் நண்பன் ஒருவர் ஆட்டோதான் ஓட்டுகிறார். அவர் நியாமாகத்தான் கேட்பார்.. அவர் வாழ்வு சற்று போராட்டமாகத் தான் போய் கொண்டிருக்கிறது. நான் கூட சொல்வேன் ஏன் மற்ற ஆட்டோகாரர்களை போல் நீயும் வாங்க வேண்டியதுதானே என்று அவர் அதற்கு மனமில்லை என்று சொல்லிவிட்டார்.

இப்படியும் இருப்பர்!

பாலகிருஷ்ணா said...

சென்னையில் ஆட்டோக்கள் கொள்ளை அடிக்கும் கும்பல்கள் என்று அடித்துச் சொல்கிறேன். எக்மோரிலிருந்து கோயம்பேட்டுக்கு மாதமிருமுறை 200 ரூபாய் அழுதிருக்கிறேன். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லா காசை மட்டுமே பார்க்கும் கழுகுக் கும்பல் அது

நிகழ்காலத்தில்... said...

\\இவர்களை என்ன செய்யலாம்??

பேசாமல் ஆட்டோவில் போகாமல் பஸ்ஸிலாவது போய்விடலாம்\\

அரை மணி நேரம் அதிகமானால் பரவாயில்லை ஒன்றும் குறைந்துவிடாது.
அதே சமயம் அவசரமானால் போகவேண்டியதுதான்

வாழ்த்துக்கள்

பழூர் கார்த்தி said...

பெயரில்லா 1,

சாப்ட்வேர் காரர்கள் வந்ததால் நிறைய தொழில்கள் பிழைக்கின்றன, ரியல் எஸ்டேட், ஆம்னி பஸ்கள், ஆட்டோ...

ஆனால் ஆட்டோக்களின் அட்டூழியம் அதிகம்தான்..

<<>>

பெயரில்லா 2,
உங்கா ஆதங்கம் புரிகிறது, நன்றி!!

பழூர் கார்த்தி said...

பெயரில்லா 3, ஆமாம் ஆளுபவர்கள் எல்லாம் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்..

எடுத்தால், மக்கள் ஆதரவு நிச்சயம் இருக்கும், ஏனெனில் மெஜாரிட்டி நாம்தானே..

பழூர் கார்த்தி said...

ஆத்மா,

ஆமாம், நீங்கள் சொல்வது போல் முயற்சிக்க வேண்டும், அப்போதாவது திருந்துவார்களோ பார்ப்போம் :-(

ஆ. முத்துராமலிங்கம்,
நீங்கள் சொல்வது போல் ஓரிருவர் இருக்கிறார்கள், ஆனால் நான் சென்னையில் இருக்கும் இந்த ஒன்றரை வருடத்தில் இதுவரையில் மீட்டர் போட்ட ஆட்டோவில் ஏறியதேயில்லை..

பழூர் கார்த்தி said...

பாலகிருஷ்னா,

உங்களுக்கு என் அனுதாபங்கள்..

அறிவே தெய்வம்,
நிஜமாகவே அப்படித்தான் தோன்றுகிறது.. ஷேர் ஆட்டோ கூட நிறைய கேட்கிறார்கள்..

Unknown said...

:)))

prasannakumar said...

all Autos are Owned by chennai Cops and Party ppl.. thats y there are Now laws Inmposed on them

Anonymous said...

recently i came from salem to tambaram thru train at 162 rupees, but gave 85 rupees from tambaram to cam road.... nice auto ppl... let them live happily with that money..

பழூர் கார்த்தி said...

ஸ்ரீமதி, நன்றி!!

<<>>

பிரசன்னா, ஆமாம் நீங்கள் சொல்வது ஓரளவுக்கு உண்மையே, நிறைய பினாமி ஆட்டோக்கள்தான் ஓடுகின்றன :-(

<<>>

பெயரில்லா,

சென்னையில் எல்லா இடங்களிலும் இப்படித்தான், கேம்ப் ரோடு போன்ற புறநகர் பகுதிகளில் இந்த அட்டூழியம் அதிகம்..

<<>>

ஆர்வா said...

சென்னையில அரசியல்வாதியா எப்படி ஒண்ணும் பண்ண முடியாதோ அப்படித்தான் ஆட்டோகாரங்களும்.. விடுங்க பார்த்துக்கலாம்

பழூர் கார்த்தி said...

கவிதை காதலன், நாம் அனைவருமே சேர்ந்து ஏதேனும் செய்தாக வேண்டும்...

எப்படியாவது ஆட்டோக்காரர்கள் திருந்தினால் சரி.. அவர்கள் நியாயமான ரேட் கேட்டால், இன்னும் நிறைய பேர் பயணிப்பர்..

Anonymous said...

Once I took auto from Gopalapuram to Vivekaanandhar illam for a fixed price. Just to know I asked the driver to run the meter also. Guess what, the amount shown in the meter was higher by 24 Rs!!

Anitha , Atlanta , USA said...

பெங்களூர் ம் ஆட்டோ சவாரி விலை குரைவு தான்
சென்னை ல பஸ் தான் பெஸ்ட்.

ஆட்டோவை தவிர்பது தான் நாம ஆட்டோகாரர்களுக்கு கொடுக்கும் தன்டனை......எனிவே...நான் சென்னை வந்து என்ன செய்ய போரேனோ !!!!

பழூர் கார்த்தி said...

பெயரில்லா,என்ன சொல்றீங்க.. மீட்டர்ல சூடு வச்சு, கூட காட்டிட்டாரா ஆட்டோ காரர் ??

<<>>

அனிதா,
பெங்களூரில் கொஞ்சம் பரவாயில்ல... மும்பையில் எல்லா ஆட்டோவுமே மீட்டர்தான்.. அவ்வுளவு நியாயம்.. ஆனா சென்னையில்தான் ரொம்ப மோசம்.. கால்டாக்சிதான் பெஸ்ட்..

Anonymous said...

Its not only in chennai, in coimbatore its still worse. infact the minimum official rate fixed by the govt. is highest in coimbatore. but still - kollai kollai thaan. i dont know how coimbatore alone has those old old models still running. (9/10 autos are those outdated models).
(you can catch a glimpse of this auto model in the song "yetu vitha katalaigal itu oru laabam illa- kitumani pola oru makkumani yarum illa from the movie manal kayiru")
i have travelled in autos and taxis in various states. i often doubt whether the tamilnadu auto drivers had a special "thaai paal" to perform these kind of atrocities.