ஏப்ரல் 16, 2006ம் தேதியிலிருந்து புனேயில் வாழத்தொடங்கிய நான், செப்டம்பர் 11, 2007 அன்று புனேவிலிருந்து விடைபெறுகிறேன். புதிய அலுவலகம் சென்னையில் உள்ளது. 9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் வசிக்கப் போவது குறித்து மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
புனே மிகவும் அருமையான, அமைதியான ஊர். மலைகளுக்கு நடுவில் அற்புதமான க்ளைமேட்டுடன் கூடிய ஊர். போக்குவரத்து, சாலை வசதிகள் மட்டும் கொஞ்சம் குறைவு புனேயில். மற்றபடி அருமையான ஊர். இவ்வுளவு அருமையான ஊரை விட்டு வருவதும், நல்ல அலுவலகத்தை விட்டு வருவதும் சிறு வருத்தத்தை அளித்தாலும், தாய் தமிழ்நாட்டு மண்ணை மீண்டும் தழுவச் செல்வது அவ்வருத்தத்தை மறையச் செய்கிறது.
புனேயில் வசித்து வரும் அனைத்து தமிழ் வலைப்பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி & வாழ்த்துக்கள்!!
மீண்டும் உங்கள் அனைவரையும் சென்னையில் சந்திக்க விரும்புகிறேன், நன்றி & வணக்கம்!!
3 comments:
நீங்க சொன்ன மாதிரி தமிழ் மணத்தோட பெண் கெடச்சுட்டாங்களா???
புனேல எல்லாம் நல்லாதான் இருந்திருக்கும் ஆனா காலையில் வாடாபாவும், பாவுபஜியும் சாப்பிட்டவங்களுக்கு. காலையில் இட்லியும்,பொங்கலும் கெடைக்காம இருந்திச்சி இல்லையா. இப்போ சென்னை வந்தா நம்ம ஊர் சாப்பாடு நல்லாதான இருக்கும்
:)
Post a Comment