Wednesday, September 05, 2007

நம்ம ஊர் திருச்சி - பாகம் 3திருச்சியைப் பற்றிய கடந்த பதிவுகள்

திருச்சி 1
திருச்சி 2


தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளைப் போலவே, திருச்சியிலும் வெயில் அதிகம். வேண்டுமானால் பகலில் வெளியில் அதிகம் சுற்றாமல், சமாளித்துக் கொள்ளலாம்.

சத்திரம் பஸ் ஸ்டாண்ட், மெயின் கார்டு கேட், தெப்பக்குளம், என்.எஸ்.பி ரோடுகளில் நிறைய தரமான உணவுக் கூடங்கள் (ஹோட்டல்கள்) உள்ளன.ரகுநாத், ஆர்ய பவன், வஸந்த பவன், கேரளா மெஸ், பனானா லீப் போன்றவை குறிப்பிடத் தக்கவை.

பிரபல ஆபரணம் மற்றும் துணிக்கடைகள்
சாரதாஸ்
தைலாஸ்
ஆனந்தாஸ்
சென்னை சில்க்ஸ்
கல்யாணி கவரிங்
லஷ்மி ஜுவல்லர்ஸ்
தம்பு (செருப்புகள், பெல்ட்டுகள்)

இப்போது இன்னும் நிறைய கடைகள் வந்து விட்டன. என்.எஸ்.பி ரோடு சென்றால், தரமான துணிகளை நியாயமான விலைக்கு வாங்க வாய்ப்புகள்
நிறைய உள்ளன. அப்புறம் இப்ப திருச்சிக்கு சென்னை சில்க்ஸ் வந்துருச்சு, அதுவும் சாரதாஸ விடாத மக்கள் கூட நகரும் படிக்கட்டு(Esclater) பார்க்குற ஆசையில் துணிய அள்ளிட்டு போறாங்க.

திருச்சியின் நடுவே ஓடும் இரு பெரும் ஆறுகள் காவிரி மற்றும் கொள்ளிடம். மிகப் பிரமாண்டமான ஆறுகள், முழு வேகத்துடன் ஓடுவதை
கல்லணை மற்றும் முக்கொம்பில் ரசிக்கலாம். போன வருடம் பெய்த மழையின் போது இரு ஆறுகளும் நிரம்பி ஓடின என நண்பர்கள் தெரிவித்தனர். வெள்ளமேற்பட்டால் சமாளிப்பது சற்று கடினமே. ஆனால் வருடத்தில் பல நாட்கள் காவிரி, கொள்ளிடம் தண்ணீரே இல்லாமல் இருக்கும்.

பனானா லீப் ஹோட்டல் பற்றிக் கூறும்போது நண்பர் அருண்.சி 'Banana leaf do serve non-veg. Infact i go there only for non-veg. " என்று அந்த ஹோட்டல் அசைவ உணவு வகைகளையும் அருமையாக படைப்பதை நினைவு கூறுகிறார். இந்த ஹோட்டல் ஹோலிகிராஸ் காலேஜ் அருகே மெயின்கார்டு கேட் (பெரிய மலைக்கோட்டை கதவு) எதிரில் உள்ளது.

திருச்சி வெயிலைப் பற்றி நண்பி மலர் கூறும்போது "Trichy veyilum oru sorkkam than ...athu 0 degree kulirla vaduravangalukku than theriyum !!!" என்று பரவசப்படுகிறார். மலர் தற்போது ஜப்பானில் இருக்கிறார். 0 டிகிரியில் இருக்கும்போது, வெயிலின் அருமை புரியுமல்லாவா !

மாம்பழச்சாலை என்ற இடத்தில், உலகின் அனைத்து விதமான மாம்பழங்களும் சீசனின் போது கிடைக்கும். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 நிமிடத்தில் பேருந்தில் (லால்குடி, சமயபுரம், மண்ணச்ச நல்லூர்) சென்று விடலாம். திருச்சியில் கிடைக்கும் சிறப்பான உணவு வகைகளைப் பற்றி வலைப்பதிவர், நண்பர் தேசிகன் "ரமா கபே, ரமணா பேக்கரி, மாம்பழச்சாலை மாம்பழம், காந்தி மார்கேட், வசந்த பவன் பரோட்டா, பாலக்கரை பிரமனந்தா சர்பத் கடை, பிமநகர் மோர்கடை... என்று அடுக்கிக்கொண்டே போகலாம்" என்று நினைவூட்டுகிறார்.

திருச்சியிலுள்ள பிரபலமான கலைக் கல்லூரிகள் சிலவற்றுக்கு பட்டப் பெயர்கள் உண்டு. ஜெயில் - ஜோசப், பியூட்டி - பிஷப், ஜாலி - ஜெமால் என்று கல்லூரிகளுக்கு நிக் நேம் உண்டு என்றும் தேசிகன் சிலாகிக்கிறார். வேறு கல்லூரிகளின்/கல்விக் கூடங்களின் பட்டப் பெயர்கள் தெரிந்தால்,
நண்பர்கள் கூறலாம்.

திருச்சியை பொறுத்த வரை கல்லூரி மாணவர்கள் இரண்டு ஏரியா பஸ்களைப் பார்த்தாலே பரவசப் படுவார்கள். அவை பெல் (BHEL) மற்றும் கே.கே நகர் பஸ்களே. ஏனென்றால் இந்த ஏரியாக்களில்தான் பிகர்கள் அதிகம் (தற்போது எப்படியென்று ட்ரெண்ட் தெரியவில்லை). தனியார் பஸ்கள் நிறைய உண்டு. டிஎஸ்டி, எம்ஆர்ஜி போன்று நிறைய பஸ் நிறுவனங்கள் உள்ளன. பஸ்கள் எல்லாம் புதிதாக, டேப் ரிகார்டர், எப்.ம் என்று கலக்கலாக இருக்கும். உறையூர், தில்லை நகர், பாலக்கரை, ஸ்ரீரங்கம் போன்ற ஏரியாக்களுக்கு நிறைய பஸ்கள் உண்டு. எல்லா ஏரியாக்களுக்கும்
போதுமான பஸ்கள், தொடர்ந்து உள்ளன.

மாலை நேரங்களில், சத்திரம் பேருந்து நிலையத்திலும், என்.எஸ்.பி ரோட்டிலும் கூட்டம் அலைமோதும். ஏகப்பட்டு பிளாட்பார கடைகள் பாப்கார்ன் முதல் பாப் பாடல்கள் சிடி வரை விற்பார்கள். தெப்பக்குளத்தில் இப்போது போட் விட்டிருக்கிறார்கள். இளைஞர்கள் அவரவர்கள் ரேஞ்சுக்கு
டைட்டானிக் ஹீரோ போல் கற்பனையில், போட்டில் மிதக்கிறார்கள். சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் திருச்சியில் மிகப்பிரபலம். இவர்கள் வைத்திருக்கும் கேண்டீனில் இனிப்புப் போளி (தமிழ்மணம் போலி இல்லீங்கோவ், தின்பண்டம்), ஜாங்கிரி, சமோசா போன்றவைகள் ருசியாக
கிடைக்கும்.

மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடை இப்போது திருச்சியில் நிறைய கிளைகளை திறந்துள்ளனர். ஆனால் ஐஸ்கிரிமின் தரம் தற்போது குறைந்து விட்டது என நண்பர்கள் பலரும் வருத்தப்படுகின்றனர்.

RTC Lodge ஹோட்டல் ரவா, வெங்காய ஊத்தப்பம், காபி, கந்தக பூமியின் காட்டமான வெய்யில், Golden Rock Loco shed, 80வயதான ஸ்டேட் பாங்க் ஆலமரம், 117 Infantry Battallion, அமெரிக்கன் ஆஸ்பத்திரி, பாலக்கரை ஆறுமுகம் ஹோட்டல் பரோட்டா, டவுன் ஸ்டேஷன் அய்யர்கடை இட்லி கடப்பா, ஸ்ரீரங்கம் அம்மாமண்டப படித்துறை, வருடமொருமுறை ஸ்ரீரங்கநாதர் வந்துபோகும் நாச்சியார் கோவில், திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோவில்,BHEL என்று திருச்சியைப் பற்றி எழுத நிறைய விஷயங்கள் உள்ளன. ஸ்ரீரங்கத்திலிருந்து ரங்கநாதர் பல்லக்கில் வருடமொருமுறை நாச்சியாரைப் பார்க்க உறையூர் நாச்சியார் கோவிலுக்கு வந்து போவார்.

திருச்சியை பற்றிய விபரங்களை ஓரளவுக்கு தொகுத்திருக்கிறேன். மேற்சொன்ன விபரங்களில் விடுபட்டவை, மாற்ற வேண்டியவற்றை நண்பர்களே, பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். மீண்டும் சந்திப்போம் !

புகைப்படங்கள், இணையத்தில் தேடி எடுக்கப் பட்டன. வல்பென், சுலேகா மற்றும் வேறு சில ஆதாரத் தளங்களுக்கு நன்றி!

13 comments:

தம்பி said...

//மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடை இப்போது திருச்சியில் நிறைய கிளைகளை திறந்துள்ளனர். ஆனால் ஐஸ்கிரிமின் தரம் தற்போது குறைந்து விட்டது என நண்பர்கள் பலரும் வருத்தப்படுகின்றனர்.//

ஆமாங்க. போன முறை போகும்போது ஒண்ணுமே சரியில்ல. ஏகப்பட்ட கிளைகள் இருக்கு இப்ப.

நாகநாதர் டீஸ்டால் பத்தி எழுதுங்க. :)

Thangavel manickam said...

superp articles you wrote. today accidently i read your articles.

Nice it was.

Friendly
Thangavel

John P. Benedict said...

ரொம்ப இயல்பா எழுதியிருக்கீங்க. நானும் திருச்சிக்காரன் தாங்க... நீங்க சொல்லியுள்ள எல்லா கடைகளுக்கும், இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். நன்றி.

asrajesh said...

Excellent articles dear... i really love being in Trichy.. I really proud to say that I am from Trichy...

asrajesh said...

Very nice articles.. Excellent..
I feel proud to say that I am from Trichy.. I love being in Trichy .. Such a wonderful place it is ...
Thanks for the articles...

keep writing ..
- Rajesh

பழூர் கார்த்தி said...

தம்பி,
நன்றி!
//நாகநாதர் டீஸ்டால் பத்தி எழுதுங்க//
கட்டாயம் எழுதிடுவோம் :-)

<<>>

தங்கவேல், ஜான், ராஜேஷ்
நன்றி!

<<>>

பரத் said...

தல இப்பதான் மூணு பகுதியையும் படிச்சேன்.கலக்கிடீங்க
எல்லாதுக்கும் சேர்த்து இங்கயே பின்னூட்டம் போட்ரேன்.
//மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு வந்துருவீங்க. மொத்தம் 470 படியோ என்னமோ. மேல ஏறினப்புறம் திருச்சியவே பாக்கலாம். //
மலைக்கோட்டை ஏறும்போது பாதிவழியில் ஒரு குகைக்கோயில் உள்ளது.பல்லவர்காலத்து
சிற்பங்கள் அங்குள்ளன.அங்குள்ள சுரங்கப் பாதைவழியே தஞ்சாவூர் பெரிய கோவில் வரை செல்லலாம் என்று கேள்விப்படிருக்கிறேன்.உண்மையா,உட்டாலக்கிடியா என்று தெரியவில்லை


//மெயின்கார்டுகேட் எதிர்த்தாப்ல, எங்க செயிண்ட் ஜோஸப் கல்லூரி வளாகத்துலேயே ஒரு பெரிய பழமையான சர்ச் இருக்குங்க. நான் காலேஜ் படிச்சப்ப அடிக்கடி இங்க போவோம்.//
மிகவும் அருமையான சர்ச்.புத்தாண்டு இரவில் நடக்கும் திருப்பலி ரொம்ப பேமஸ்.மதவேறுபாடின்றி அனைவரும் பங்கு பெறுவார்கள்.

//திருவானைக்காவல் சிவன் கோயிலும் பெரிய, பழைமையான கோயில். இங்க சிவபெருமான் நிலத்துக்கு கீழ எப்பவும் தண்ணீருக்கு மத்தியில் இருப்பாருங்க. சூப்பரா இருக்கும்//
ஜம்புகேஸ்வரர் என்று பெயர்.இந்த கோயில் புளியோதரை ஸ்ரீரங்கம் கோயில் புளியோதரையைவிட நன்றாக இருக்கும்.

//முக்கொம்பு சூப்பரான சுற்றுலாத் தளம்//
ஒருகாலத்தில் நன்றாக இருந்ததோ என்னவோ இப்போது இல்லை.ஆனால் மற்ற வேலைகள் இங்கு கனஜோராக நடப்பது உங்களுக்குத்தெரியுமா? ;)

//(மாரீஸ்) 5 தியேட்டர்கள் இருக்குங்க//
இப்போது 70ம்mm மற்றும் ராக் இரண்டில் மட்டுமே காட்சிகள் நடைபெறுகின்றன.அப்பல்லோ மருத்துவமனை அங்கு வரப்போவதாக பேசிக்கொண்டார்கள்.

//ஆங்கிலப் படங்கள் பார்க்கனுமா, அதுக்கு சிப்பி, பிளாஸா இருக்குங்க//
ஆங்கிலப்படங்கள் நல்ல ஒளி,ஒலி வசதியுடன் பார்க்க சிப்பி அருமையான தியேட்டர்.இப்போது தியேட்டரை இளுத்து மூடிவிட்டார்கள்.பிளாசாவை மூடியும் பலகாலமாகிறது.கெய்ட்டி தன் இறுதிநாட்க்களை எண்ணிக்கொண்டிருக்கிறது.

//சீன் படம் பாக்கணுமா, முல்லை, கோஹீனூர் இருக்குங்க//
சரித்திரப் பெருமை வாய்ந்த முல்லை தியேட்டரை மூடிவிட்டார்கள்.அங்கு இப்போது நடனப் பள்ளி நடப்பதாகக் கேள்வி.கோஹினூரும் சீன் படங்களை நிறுத்திவிட்டு தனுஷ் சிம்பு படங்களை ரிலீஸ் செய்கிறார்கள்.

//வன்முறை, ரவுடித்தனம் அதிகம் இருக்காதுங்க. நல்ல ஊரு, சுத்தமான காத்து, காவிரித் தண்ணி, குறைந்த விலைவாசி (மற்ற தமிழக நகரங்களை ஒப்பிட்டால்), அமைதியான, மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையுடைய மக்கள் இதெல்லாம்தாங்க திருச்சி.
//
100% உண்மை

பரத் said...

*ராமா கபே மற்றும் மாயவரம் லாட்ஜ்களில் இன்னமும் நல்ல வெண்ணை தோசை கிடைக்கிறது.
பெரிய கடைவீதி கடைசியில் ஜிகர் தண்டா சூப்பராக இருக்கும்.மலாய்,ஜவ்வரிசி பால் என எல்லாம் சேர்ந்து குடித்தால் ஜிவ்வென்றிருக்கும்.அதுதவிர வேரென்னவெல்லாம் அதில் கலக்கிறார்கள் என்பது சிதம்பர ரகசியம் .
பனானா லீபின் கிளை குரு மெடிகல்ஸ் பேருந்து நிறுத்தத்திற்கருகில் உள்ளது.
திருவானைக்காவலில் உள்ள பாரதவிலாஸ் ஹோட்டல் தோசை பற்றி விகடனில் வந்தது
கலையரங்கம் ஆசியாவிலேயெ இரண்டாவது பெரிய தியேட்டர்.அது ரஜினி படமாகவே இருந்தாலும் மூன்று வாரத்திற்குப் பிறகு இந்த தியேட்டரை முழுவதுமாக நிரப்புவது கஷ்டம்

*திருச்சி மாணவ மாணவிகள் அனைவருக்கும் REC ஒரு கனவு காலேஜ்.

*அகில இந்திய Business School தரப் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஒரு சில தமிழக கல்லூரிகளில் பாரதிதாசன்(BIM) கல்லூரி முதலிடம் வகிக்கிறது.

*கேகேநகர்,சுந்தர் நகர்,ஐயப்ப நகர் மற்றும் குமரன் நகர்,ஸ்ரீனிவாச நகர் பகுதிகளில் தமிழ் ஈழமக்கள் அதிகமாக வசிப்பார்கள்.தீபாவளி சமயங்களில் போலீஸ் காரர்கள் இவர்கள் வீடுகளில் மாமூல் வாங்கிப்போவார்கள்.ஏனென்பது தெரியாது

*போன வருடம் பெய்த மழையில் சோமரசம்பேட்டை அருகே ஒரு அணை உடைந்து அருகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வெள்ளம்.எங்கள் வீட்டுக்குள் முழுவதும் தண்ணீர்.இரண்டு நாட்கள் கழித்து வெள்ளம் வடிந்து வீட்டை திறந்து,சகதிகளுக்குள் நடந்து வந்தபோது கிரைண்டர் மேல் படுத்திருந்த பாம்பு தலதூக்கிப் பார்த்தது.
வாஷிங் மெஷின்,பிர்ட்ஜ் போன்றவை வாரண்டி பீரியடில் இருந்ததால் சர்வீஸ் செய்து குடுத்தார்கள்.

பரத் said...

* நோபல் பரிசுபெற்ற சி.வி.ராமன் திருவானைக் கோயில் காரர்.
சுஜாதாவும் வாலியும் திருவரங்கத்துக்காரர்கள்
சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் பாலக்கரைக்காரர்
ஹேமமாலினி ஜீயர்புராத்தைச் சேர்ந்தவர்

* திருநெல்வேலி பாஷை,கோயமுத்தூர் பாஷை என்று இருப்பது போல திருச்சிக்கு பிரத்யேகமாக பாஷை இருப்பதாகத்தெரியவில்லை.இங்கு நியூட்ரல் தமிழை கேட்கலாம்.ஒருவேளை நான் இந்தவூர்காரன் என்பதால் வித்யாசம் தெரியாமலிருக்கலாம்.மற்றவர்கள் சொல்லலாம்.

* BHEL லும்,HAPP யும் திருச்சி மக்களின் வாழ்க்கை தரத்தை கணிசமாக உயர்த்தியுள்ளன.ஆனால் உலகெங்கும் அடிக்கும் மென்பொருள் அலையின் சில துளிகள் கூட இன்னும் திருச்சியில் விழவில்லை.GFT என்ற ஜெர்மன் சார்ந்த ஒரு கம்பெனியையும் மற்ரும் சில சில்லரை கம்பெனிகளையும் தவிர சொல்லிக்கொள்ளும் படியாக எந்த சாப்ட்வேர் கம்பெனியும் இல்லை.தொழில் துறையைப் பொருத்தவரையில் திருச்சி மந்தமானதொரு வளர்ச்சியையே கொண்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.

* எனக்குத் தெரிந்து நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் நல்ல தரமான தமிழ்புத்தகங்கள் கிடைக்கின்றன.தமிழில் வரும் எல்லா சிறுபத்திரிக்கைகளும் இங்கு கிடைக்கின்றன.ஹிக்கின் பாதம்சில் ஆங்கில புத்தகங்கள் கிடைக்கின்றன.மற்ற பெரிய புத்தகக் கடைக்ள் தெரிந்தால் குறிப்பிடவும்.வருடம் ஒருமுறை நடக்கும் புத்தகக் கண்காட்சியிலேயெ எல்லா புத்தகங்களையும் வாங்கிக்கொள்ள வேண்டும்

*பிரச்சனை இல்லாத சாதுவான மக்களையும்,நிறைய கோயில் குளங்களையும்,தரமான கல்விநிறுவனங்களையும்,நல்ல உணவகங்களையும்,திரையரங்குகளையும் கொண்டிருக்கும் திருச்சி பூலோக சொர்க்கம் என்பதில் சந்தேகமே இல்லை

பழூர் கார்த்தி said...

பரத்,

விளக்கமான பின்னூட்டங்களுக்கு நன்றி!! இதையே தனிப்பதிவாகவும் இட்டு விடுமளவுக்கு அருமையாக நினைவூட்டி இருக்கிறீர்கள், நன்றி!!

இளைய கவி said...

நண்பரே,

தங்கள் வலைப்பதிவிலிருந்து சில தகவல்களை நான் என்னுடைய http://dailycoffe.blogspot.com ல் பயன்படுத்தி உள்ளேன், தங்களுடைய அனுமதி பெறாமல் இதை செய்ததிற்கு மன்னிக்கவும். மேலும் நான் என்னுடைய வலைபூ பற்றிய உங்கள் மேலான கருத்துகளை எதிர் நோக்கி உள்ளேன்.

geetha said...

நான் திருச்சியில்(Holy Cross) படித்தேன். அந்த நாட்களை இன்று என் கண்முன் காணமுடிந்தது உங்களின் மூலமாய்.
மிக்க நன்றி

Ramesh said...

Dear friends,

I am sorry to write in English.

Innum konjam information

1) Sri Rangam kovila, Ramanujarnu orutharoda bodya innaumum preserve panni vaichu irukanga.
Avoroda bodya , normal temperaturela (kunguma poo) vaichu preserve panni ieukanga)
Most of the trichy fellows doesnot know about this.

2) Malaikottai kovila , kaveri palathularunthu partha, nijamavey vinayagar utkanthu iruka mathiri irukum.

3) Trichyla SIT nu oru poly technic iruku, athu tamil nadula 2nd polytechnic.

4) Trichiuku full name
- Thiru ichina palli

Means - Thriu -> Kadavul
ichina( sanskrit) - thiruku nooki
Palli -> palli kondula idam.

5) Kollidam -> Kaveri nirambi neer kollum idam kollidam

6) Kallanai -> worldla natural damna athu kallanai mattum than.

7) ithu mattum illama, vera yengaium illatha virunthonbal trichyla iruka restarunnts la irukum.

8) as our friend told the chaste tamil inga than irukum.