Wednesday, August 22, 2007

திருச்சி - 2




மலைக்கோட்டை மாநகரான திருச்சிராப்பள்ளியைப் பற்றி சென்ற பதிவில் (திருச்சி - 1) பார்த்தோமல்லவா ! மேலும் நிறைய விவரங்களுடன் பல நண்பர்கள் பின்னூட்டமிட்டிருந்தனர். அந்த விவரங்களுடன் மீண்டும் ஒரு முறை திருச்சியைச் சுற்றிப் பார்க்கலாம், வாருங்கள் !

திருச்சியில் இரண்டு பெரிய பேருந்து நிலையங்கள் உள்ளன. சத்திரம் பேருந்து நிலையம் (மெயின் கார்டு கேட்) மற்றும் மத்தியப் பேருந்து நிலையம் (ஜங்சன்). ம.பே.நிலையத்திற்கு அருகே ரயில் நிலையம் உள்ளது. ம.பே.நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் செம்பட்டு விமான நிலையம் உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களுக்கு பஸ்/டிரெயின் வசதி உள்ளது. சென்னை, மதுரைக்கு விமான வசதிகளும் உள்ளன. இரண்டு பேருந்து நிலையத்திற்கு அருகிலும் நிறைய, நல்ல ஹோட்டல்கள் உள்ளன.



நாகநாதர் டீ ஸ்டால் என்று திருச்சியில் நிறைய டீக்கடைகளைப் பார்க்கலாம். டீ, காபி தவிர வாழைக்காய் பஜ்ஜி சட்னியோடு கொடுப்பார்கள் மாலை நேரங்களில். அவ்வுளவு சுவையாய் இருக்கும். தெப்பக்குளம் பகுதியில், நிறைய ரோட்டோர நூடுல்ஸ் கடைகளைப் பார்க்கலாம். எக் நூடுல்ஸ், வெஜ் நூடுல்ஸ், சிக்கன் நூடுல்ஸ் என்று மக்கள் பிரித்து மேய்வார்கள் (அப்படின்னா, நல்லா சாப்பிடுவாங்கன்னு அர்த்தம்).


திருச்சியில் நிறைய ட்யூசன் செண்டர்கள் உண்டு. பத்தாவது, பன்னிரண்டாவது மாணவர்களுக்கென, மேக்ஸ் செல்வராஜ், பிசிக்ஸ் ஆர்.சி, கெமிஸ்டரி ராஜா, பயாலஜி சுந்தர் என்று ஏரியா, ஏரியாவாக நிறைய பிரபலமான ஆசிரியர்கள் திருச்சியைக் கலக்கிக் கொண்டிருந்தார்கள் (கொண்டிருக்கிறார்கள்).


திருச்சியிலுள்ள முக்கியமான சுற்றுலாத் தளங்கள்


மலைக்கோட்டை, முக்கொம்பு, கல்லணை


முக்கியமான கோயில்கள்


ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவானைக்கோவில் சிவபெருமான், சமயபுரம் மாரியம்மன், குணசீலம் சிவபெருமான், மலைக்கோட்டை தாயுமானவர் & உச்சிப் பிள்ளையார், வயலூர் முருகன்.


முக்கியமான கல்விக்கூடங்கள்


என்.ஐ.டி (NIT, பழைய பெயர் REC)
கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி
பாரதிதாசன் பல்கலைக் கழகம்

இதைத் தவிர வேறு பல பிரபலமான கலைக் கல்லூரிகளும், பொறியியல் கல்லூரிகளும், கணிணி கல்விக்கூடங்களும் உள்ளன.

திருச்சியில் பிறந்த / படித்த முக்கிய பிரபலங்கள்

முதல் குடிமகன் அப்துல் கலாம் (நான் படித்த ஜோசப் கல்லூரியில் படித்தவர்)
தமிழ் தொண்டாற்றிய கி.ஆ.பெ. விசுவநாதம் (திருச்சியில் பிறந்து, வளர்ந்து, வசித்தவர்)
எழுத்தாளர் சுஜாதா (ஜோசப் கல்லூரி)
முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் (நேஷனல் கல்லூரி)
நடிகர் நெப்போலியன் (ஜோசப் கல்லூரி)
நடிகர் பைவ் ஸ்டார் பிரசன்னா (சாரநாதன் கல்லூரி)
சர்.சி.வி. ராமன் (உறுதியாக தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்)

*****

திருச்சி நினைவுகள் தொடர்ந்து சுழலும் :-)

15 comments:

பழூர் கார்த்தி said...

புதிய போஸ்ட் பப்ளிஷ் பண்ணினால், அதனை தமிழ்மணமும், தேன்கூடும் பிங் (ping) செய்ய முடியவில்லை (I get message as 'no new posts found'), நண்பர்களே, இதனை எப்படி சரி செய்வது என்று உதவுங்களேன் :-))

ஆனால் கமெண்ட் பப்ளிஷிங் ஸ்டேட்டஸ் தெரிகிறது என நினைக்கிறேன்...

ambi said...

எளிமையான ஆனால் அருமையான விளக்கங்கள். :)

என்ன ஒரே ஒரு குறை:
சன் நீங்கள் கேட்ட பாடலுக்காக திருச்சியிலிருந்து பழுவூரான்!னு ஒரு வரி சேர்த்து இருக்கலாம். :p

No idea about your problem encountered. sorry.

Sundararajan said...

திருச்சியில் இரண்டு பழூர்கள் உள்ளன. ஒன்று சமயபுரம் அருகிலும், மற்றொன்று கோவை சாலையிலும் உள்ளன. நீங்கள் எந்த பழூர்?

-சுந்தரராஜன்

PPattian said...

நல்ல பதிவு, திருச்சியை கண்முன் கொண்டாந்திட்டீங்க...

Camay Soap'பிலிருந்து, இம்போர்ட்டட் ஆட்டோமேட்டிக் கேஸ் ஸ்டவ் வரை எல்லாத்தையும் விக்கும் நம்ம பர்மா பஜார்...,

நம்ம காந்தி மார்க்கெட்டு..

தொழில் நகரமான பெல் கைலாசபுரம், அங்க உள்ள RSK ஸ்கூல், பொன்மலைப்பட்டி KV, Campion, Vestry, Josephs Girls Convent,

பிளானட்டோரியம், துப்பாக்கி தொழிற்சாலைன்னு இன்னும் கூட நிறய சொல்லலாம்..

மாரிஸ்'இல் இப்போ ரெண்டு தியேட்டரில்தான் படம் காட்டுறாங்கன்னு கேள்விப்பட்டேன். மத்த மூணும் மூடிட்டாங்களாமே?

பாலக்கரை மேம்பாலம், தென்னூர் மேம்பாலம், TVS டோல்கேட் மேம்பாலம் வந்ததுக்கு அப்புறம் திருச்சியில் ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு சுலபமான பயணம்தான்..

பழூர் கார்த்தி said...

பிங்கிங் (pinging) பிரச்சினை தீர்ந்து விட்டது, இன்னொரு போஸ்ட் பப்ளிஷ் செய்த போது, இரண்டு போஸ்ட்டுகளும் ping ஆகி விட்டன..

<<>>

அம்பி,
நன்றி!!

//சன் நீங்கள் கேட்ட பாடலுக்காக திருச்சியிலிருந்து பழுவூரான்!னு ஒரு வரி சேர்த்து இருக்கலாம்//

:-))))

<<>>

delphine,
ஆமாங்க, திருச்சி அருமையான ஊர்தான், I am missing it :-)))

<<>>

சுந்தரராஜன்,
நீங்கள் சொன்ன இரண்டு பழூருமில்லை :-)))

எனது ஊர் திருச்சியிலிருந்து 100 கி.மீ தொலைவில், கும்பகோணமருகே உள்ள தாதன்பேட்டை பழூர்...

நான் படித்தது திருச்சியில் :-))

<<>>

PPattian,

நன்றி!! நீங்களும் நம்மூருதானா, சூப்பர்...

ஆமாமா, டிராபிக் பிரச்சனையே இல்லையில்லியா திருச்சியில்!!


//மாரிஸ்'இல் இப்போ ரெண்டு தியேட்டரில்தான் படம் காட்டுறாங்கன்னு கேள்விப்பட்டேன். மத்த மூணும் மூடிட்டாங்களாமே?//

ஆமாங்க, :-(
விசிடியிலேயே எல்லாரும் படம் பாத்துடறாங்களே :-))

dubukudisciple said...

kaarthi!!!
danks...nalla oora suthi kamichiteenga.. seri antha tea kadai/ice cream kadaila ellam engaluku edavathu iruka illaya??

dubukudisciple said...

naan malai kotai, samayapuram, thiruvanaikaval, srirangam ellam parthu iruken

dubukudisciple said...

sri rangathula thaan ennoda kalyaname!!!

dubukudisciple said...

rangai kaana kaN koodi venum....
seri seri inime singara chennai - Part 1,2,3 appadinu ethir parkalama

dubukudisciple said...

chennailayum niraya iruku parka parthutu ezhuthunga

பழூர் கார்த்தி said...

dubukudisciple,

பின்னூட்ட மழைக்கு நன்றி!!! :-)

// seri antha tea kadai/ice cream kadaila ellam engaluku edavathu iruka illaya?? //

எல்லாமே இன்னமும் இருக்கு, என்றும் இருக்கும் :-)))

//seri seri inime singara chennai - Part 1,2,3 appadinu ethir parkalama //

கட்டாயமா :-)))

நட்டகுழியார் said...

அட..நான் காட்டுமன்னார்குடிங்க...படிச்சது திருச்சியில்.

சி.வி.ராமன் எங்கள் பள்ளியில் (பிஷப் ஹீபர், தெப்பக்குளம்) படித்தவர்.

- மு.க

Balaji Srinivasan said...

திருச்சியைப்பத்தி நல்லா சொல்லிகிட்டு வர்ரீங்க.. ஆனா, குணசீலத்தில பெருமாள் தான் இருக்கார், சிவபெருமான் இல்லே. திருத்திக்குங்கோ

Balaji Srinivasan said...

திருச்சியைப்பத்தி நல்லா சொல்லிகிட்டு வர்ரீங்க.. ஆனா, குணசீலத்தில பெருமாள் தான் இருக்கார், சிவபெருமான் இல்லே. திருத்திக்குங்கோ

Techfreaks said...

//திருச்சியில் பிறந்த / படித்த முக்கிய பிரபலங்கள்

முதல் குடிமகன் அப்துல் கலாம் (நான் படித்த ஜோசப் கல்லூரியில் படித்தவர்)
தமிழ் தொண்டாற்றிய கி.ஆ.பெ. விசுவநாதம் (திருச்சியில் பிறந்து, வளர்ந்து, வசித்தவர்)
எழுத்தாளர் சுஜாதா (ஜோசப் கல்லூரி)
முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் (நேஷனல் கல்லூரி)
நடிகர் நெப்போலியன் (ஜோசப் கல்லூரி)
நடிகர் பைவ் ஸ்டார் பிரசன்னா (சாரநாதன் கல்லூரி)
சர்.சி.வி. ராமன் (உறுதியாக தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்)
//


ஹேமா மாலினியை விட்டுவிட்டிரே