Friday, December 30, 2005

விருதுகள் - 2005

ஒவ்வோரு ஆண்டின் இறுதியிலும் செய்தி ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அந்த ஆண்டின் சிறந்தவைகளை பட்டியலிடுவது வழக்கம். இதோ நமது பட்டியல் !

தமிழ் திரையுலகம்
  • திரைப்படம் - தவமாய் தவமிருந்து
  • குணசித்திர நடிகர் - ராஜ்கிரன் (தவமாய் தவமிருந்து)
  • நகைச்சுவை நடிகர் - விவேக் (அன்னியன்)
  • கதாநாயகன் - விக்ரம் (அன்னியன்)
  • கதாநாயகி - அசின் (கஜினி)
  • திரைப்பட இசை - ஹாரிஸ் ஜெயராஜ் (அன்னியன்)
  • பாடல் - மயிலிறகே - வாலி (அ..ஆ)
  • இயக்குனர் - சேரன் (தவமாய் தவமிருந்து)
  • திரைக்கதை - சந்திரமுகி (வாசு)

விளையாட்டு
  • கிரிக்கெட் வீரர் - இர்ஃபான் பதான்
  • டென்னிஸ் வீராங்கனை - சானியா மிர்சா
தொலைக்காட்சி
  • நீள்தொடர் - மெட்டி ஒலி (சன்)
  • தொடர் - சிதம்பர ரகசியம் (சன்)
  • நகைச்சுவை காட்சிகள் - ஷோ டைம் (ஜெயா)
  • செய்திகள் - என்.டி.டிவி
  • விளையாட்டு - சீ. ஸ்போர்ட்ஸ்
  • நிகழ் தொடர் - அரட்டை அரங்கம் (சன்)
  • பழைய பாடல்கள் - தேனமுது (ஜெயா)
  • பாடல் வரிசையமப்பு - சூப்பர் 10 (சன்)

அரசியல் & சமூகம்
  • அமைப்பு - இந்திய தேர்தல் ஆணையம் (பீகார் தேர்தலுக்காக)
  • நகரம் - மும்பை (26/7 பேரழிவிலிருந்து மீண்டு வந்ததற்காக), பெங்களூர் (கணினி தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள்)
  • ஏழை மக்கள் மறுவாழ்வு - மும்பை (சேரி மக்களுக்கு 53000 வீடுகளை கட்டிக்கொடுத்ததற்காக)
  • தொலைபேசி நிறுவனம் - ரிலையன்ஸ் (இந்திய அளவில்), ஏர்செல் (தமிழக அளவில்), டாடா (வாழ்நாள் இலவசம் - உள்வரும் அழைப்புகள்)
  • மென்பொருள் நிறுவனம் - இன்ஃபோசிஸ்
  • நிர்வாகத் தலைவர் - நாராயணமூர்த்தி (இன்ஃபோசிஸ்)
  • மாநிலம் - தமிழகம் (சாலை வசதிகள், தூய்மையான கோயம்பேடு பேருந்து நிலையம், அரசு நிர்வாகம் மற்றும் ஒரளவுக்கு திறம்பட செயல்பட்ட
    பேரழிவு நிவாரணப் பணிகள் மற்றும் சமாளிப்பிற்காக (வெள்ள நிவாரண சாவுகள் தவிர்த்து))

பின்குறிப்பு : இவை முழுவதும் என் கவனத்திற்குள்ளான செய்திகளின் / ரசனைகளின் மீதான மதிப்பீடு மட்டுமே. இவைகளிலிருந்து நீங்கள் மாறுபட்டால் பின்னூட்டங்களில் உங்கள் கருத்துகளை இடலாம். மேலும் விருதுகளை தெரிவிக்கலாம் !!

9 comments:

வினையூக்கி said...

சிறந்த வில்லன் ப்ரித்விராஜ். (கனாக்கண்டேன்)

வினையூக்கி said...

ரீமேக் படங்களுக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியர் கொடுக்க இயலாது. வாசுவிற்கு பதிலாக முருகதாசுக்கு கொடுக்கலாம்

பழூர் கார்த்தி said...

வினையூக்கி, சிறந்த வில்லன் : ப்ரித்விராஜ் - சிறந்த தேர்வு !!!
****
சந்திரமுகி - திரைக்கதையமைப்பு கன்னடா மற்றும் மலையாள மூலத்திலிருந்து நிறைய மாறுபடுவதால் கொடுக்கப்பட்டது !!!!

சிங். செயகுமார். said...

இந்த வருடத்தின் சிறந்த விமர்சகர் "சோம்பேரி பையன்"

தருமி said...

சோ.பை. / ஜோதி,
விளையாட்டில் 50% ஒத்துப்போகிறேன். எந்த 50% என்று தெரிந்திருக்கும் - for obvious reasons - my 'love' for cricket!

டி.வி. - சொல்ல ஒன்றுமில்லை.
அரசியல் & சமூகம்: அந்த மொபைல் சர்வீஸ் தவிர மற்றவைக்கு என் ஓட்டு உண்டு.
எனக்கு சினிமாவை விட்டால் வேறென்ன தெரியும். அதனால அதில
சில மாற்றங்கள்:
கதாநாயகன் - விக்ரம் (அன்னியன்) oh no! for that stupid movie witha stupid characterisation !!

திரைப்பட இசை - (ஹாரிஸ்ஜெயராஜ் (அன்னியன்))எந்தப் படத்துக்கு? கஜினி அப்டின்னா சரி; அன்னியன்னா நான் அந்த விளையாட்டுக்கு வரலை.

பழூர் கார்த்தி said...

சிங் செயகுமார், உண்மையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி :-))
நீங்கள் மும்பை வரும்போது, உங்களுக்கு மசாலா டீ வாங்கித் தருகிறேன் :-))

*****

தருமி, கிரிக்கெட்டின் பெருமை புரிய லகான் (ஹிந்தி) படம் பாருங்கள் :-)
அன்னியன் மேல் ஏனிந்த வெறுப்பு ?
ஓரிரு குறைகள் இருப்பினும், என் போன்ற சாதாரண சினிமா ரசிகனுக்கு அது ஒரு நல்ல மசாலா படம் என்றே கருதுகிறேன் :-)

தருமி said...

"கிரிக்கெட்டின் பெருமை புரிய லகான் (ஹிந்தி) படம் பாருங்கள் :-)" //-
- அப்புறம் தாயக்கட்டத்தின் பெருமையைப் பிரிவதற்கு மகா பாரத சீரியல் பார்க்கச் சொல்லுவீங்க. நான் வர்லப்பா அந்த ஆட்டத்துக்கு! வேணும்னா நீங்க இங்க வந்து பாருங்க.


அன்னியன் ... ஒரு நல்ல மசாலா படம் என்றே கருதுகிறேன் :-) //
- வேற ஏதாச்சும் பேசுவோமா?

தருமி said...

இன்னொரு பின்னூட்டம் இட்டேனே..வரவில்லையா இல்லை வரவிடலையா..?

பழூர் கார்த்தி said...

தருமி, 15 நாட்கள் விடுமுறையில் இருந்ததால் உங்கள் பின்னூட்டத்தை அனுமதிக்க இயலவில்லை.. மன்னிக்கவும் :-)