ஏங்க, திருச்சின்னா உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வரும் ? மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், காவேரி, முக்கொம்பு, கல்லணைன்னு எதுவாச்சும் ஞாபகத்துக்கு வருதுல்லியா ? எனக்கு ஒரு ஐஸ்கீரீம் கடைதாங்க ஞாபகத்துக்கு வரும்.
- வனிலா ஐஸ்கீரீம் ரூ 1.50
- சாக்லேட் ஐஸ்கீரீம் ரூ 2.00
- புரூட்சாலட் ஐஸ்கீரீம் ரூ 2.00
நான் செயிண்ட் ஜோஸப் காலேஜ்லதாங்க படிச்சேன். காலேஜ் படிச்சப்பவும் இங்கதாங்க வருவோம். இந்த கடைக்கு பின்னாடி ஹோலிகிராஸ் பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரி, எதிர்த்தாப்ல பிசப் ஹிபர் பள்ளி, பக்கத்துல செயிண்ட் ஜோஸப் பள்ளி மற்றும் கல்லூரின்னு ஓரே இளைஞர்கள் கூட்டமாத்தான் இருக்கும் எப்பவும். பக்கத்துலதான் மலைக்கோட்டை. அங்க சுத்திப் பாக்க வர்ரவுங்க கூட இங்கே வருவாங்க. இப்ப ஒரு ரூவா விலை ஏத்தியிருக்காங்க. எனக்கு தெரிஞ்சு உலகத்துலேயே குறைந்த விலைக்கு தரமான ஐஸ்கீரீம் கிடைக்கிற இடம் இதுதான் நினைக்கிறேங்க. நீங்க திருச்சிதானா ? இல்லைன்னா ஒரு தடவை திருச்சி போயிட்டு வாங்களேன், சூப்பர் ஊருங்க !
என் கல்யாணத்துக்கு இந்த ஐஸ்கீரிம் கடையில்தான் டீரிட் கொடுக்கலாம்னு இருக்கேன். 100 பேர் சாப்பிட்டாலும் ரூ 1000க்கும் மேல பில் வராது. என்ன சொல்றீங்க ?
இந்த கடைக்கு பின்னால இருக்குற தெருவுலதாங்க 'பனானா லீஃப்' ன்னு ஒரு ஹோட்டல் இருக்குங்க. சாப்பாடு தலை வாழை இலைல சூப்பரா போடுவாங்க. எல்லா வெரைட்டிஸூம் இங்க கிடைக்கும்ங்க. ஆனா அசைவம் கிடையாதுன்னு நினைக்கிறேன். சரியா ஞாபகம் இல்லீங்க !
திருச்சியில நிறைய தரமான ஹோட்டல்கள் இருக்குங்க. இருந்தாலும் ரோட்டோர நைட் கடைகளும் நிறைய இருக்குங்க. இந்த மாதிரி ரோட்டு கடையில இட்லி, தோசை, பரோட்டா எல்லாம் சாப்பிட்டு ஒரு நாலு ஆம்லெட், ஆஃப்பாயில் சாப்பிடற சுகமே சுகந்தாங்க. அவ்வுளவு அருமையா இருக்கும் !
என்னடா இவன் சாப்பாடைப் பத்தியே பேசிக்கிட்டு இருக்கானேன்னு பாக்குறீங்களா ? கோச்சுக்காதீங்க, எனக்கு சாப்பாடைப் பத்தித்தான் எப்பவும் நினைவு.
இப்ப திருச்சியில உள்ள சுற்றுலா தளங்கள் பற்றி பேசுவோமா ? மலைக்கோட்டைதாங்க முதல்ல. நீங்க மெயின்கார்டுகேட்ல இறங்கனீங்கன்னா அப்படியே எதிர்த்தாப்ல நடந்து போயிறலாம். மலைவாசல் கீழே டிக்கெட் வாங்கிகிட்டு (ரூ 2) விநாயகர் ஒருத்தரு இருப்பாரு, அவர கும்புட்டுட்டு அப்படியே படிகள்ள ஏறீனீங்கன்னா, தாயுமானவர் கோயில் வருங்க. நல்லா பொறுமையா சுத்திப்பாத்துட்டு இன்னும் கொஞ்சம் மேல ஏறீனீங்கன்னா மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு வந்துருவீங்க. மொத்தம் 470 படியோ என்னமோ. மேல ஏறினப்புறம் திருச்சியவே பாக்கலாம். பிரமாண்டமா இருக்கும். காத்து பிச்சிகிட்டு வரும் பாருங்க, இதாங்க பூலோக சொர்க்கம் !
மெயின்கார்டுகேட் எதிர்த்தாப்ல, எங்க செயிண்ட் ஜோஸப் கல்லூரி வளாகத்துலேயே ஒரு பெரிய பழமையான சர்ச் இருக்குங்க. நான் காலேஜ் படிச்சப்ப அடிக்கடி இங்க போவோம். ரொம்ப உயரமானது. மலைக்கோட்டை உயரம் வரும்னு நினைக்கிறேன். இந்த சர்ச்சும் ரொம்ப நல்லா இருக்கும்ங்க.
அப்புறம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுங்க. ஆசியாவிலேயே உயரமான கோபுரம்ன்னு சொல்றாங்க. நல்லா இருக்கும்ங்க கோயில். அரங்கநாதர் பள்ளிகொண்ட நிலையில் பரவசப் படுத்துவாருங்க. நம்ம சுஜாதா சார் ஸ்ரீரங்கம் பத்தி நிறைய சொல்லியிருக்கார், நீங்க படிச்சிருக்கிங்களா ? நம்ம தேசிகன் கூட ஸ்ரீரங்கம் சொக்கப்பானைன்னு ஒரு பதிவு போட்ருந்தாருங்க. சூப்பர் கோயிலுங்க, நீங்க பார்த்தே ஆகனும்.
திருவானைக்காவல் சிவன் கோயிலும் பெரிய, பழைமையான கோயில். இங்க சிவபெருமான் நிலத்துக்கு கீழ எப்பவும் தண்ணீருக்கு மத்தியில் இருப்பாருங்க. சூப்பரா இருக்கும். அப்புறம் மதியம் 12 மணிக்கு இங்க கோமாதா பூஜை ஒன்னு செய்வாங்க, ஐயர் புடவை கட்டிட்டு வந்து செய்வாருங்க. நமக்கு இது பத்தி மேம்போக்காதாங்க தெரியும்.
உறையூர் வெக்காளி அம்மன் கோயில் (அம்மன் மேற்கூரையின்றி வெட்டவெளியில் இருப்பாள்), பஞ்சவர்ணசுவாமி கோயில்
போன்ற கோயில்களும் நல்லா இருக்கும்ங்க. அப்புறம் சமயபுரம் மாரியம்மன் கோயில், சொல்லி தெரிய வேண்டியதில்லை. அருமையான திருத்தலம், போயி பார்த்துட்டு வாங்க. குணசீலம், திருப்பைஞ்சலி கோயில்களும் பிராமாதனமானவை.
இன்னும் நிறைய கோயில்கள் இருக்குங்க திருச்சியில. யாராவது சொந்தக்காரங்க இருந்தாங்கன்னா, போய் ஒரு பத்து நாள் இருந்து சுத்திப் பாத்துட்டு வாங்க. கோயில்கள் மட்டுமில்லைங்க. முக்கொம்பு சூப்பரான சுற்றுலாத் தளம். கல்லணை பிரமாண்டமா இருக்கும். அதுவும் இப்ப காவிரியில் வேற தண்ணீர் முழுமையா ஓடிக்கிட்டிருக்கு, போய் பாத்தீங்கன்னா அசந்துருவீங்க !
திருச்சியில துணிக்கடைகள் பிரபலம்ங்க. சாரதாஸ், ஆனந்தாஸ், தைலா, சென்னை சில்க்ஸ், பாம்பே டையிங் ஷோரூம்ன்னு சின்னகடை வீதி போனீங்கன்னாலே கூட்டம் அலை மோதும்ங்க. தரமான துணிகளை குறைந்த விலைக்கு வாங்கலாங்க. மலைக்கோட்டை போற வழியிலதான் இவை அனைத்தும் இருக்குதுங்க.
சினிமா தியேட்டர்களுக்கு என்ன குறைச்சலா திருச்சியில ? நிறைய தியேட்டர்கள் இருக்குங்க. ஒரே காம்ப்ளெக்ஸ்ல (மாரீஸ்) 5 தியேட்டர்கள் இருக்குங்க. அப்புறம் ரம்பா, ஊர்வசி, சிப்பி, சோனா, மீனா, காவிரி இன்னும் நிறைய தியேட்டர்கள் ஞாபகம் இல்லைங்க.
நீங்க புதுப்படம் பாக்கணும்ன்னா மேல சொன்ன தியேட்டர்களுக்கு போகலாம், இல்ல செகண்ட் ரவுண்ட் ஓடற படம் பாக்கணும்னா லிட்டில் அருணா, ருக்மணி, ராமகிருஷ்ணா, வெங்கடேசா இப்படி தியேட்டர்கள் இருக்கு. ஆங்கிலப் படங்கள் பார்க்கனுமா, அதுக்கு சிப்பி, பிளாஸா இருக்குங்க. சீன் படம் பாக்கணுமா, முல்லை, கோஹீனூர் இருக்குங்க. இல்ல நீங்க தியேட்டர் போகப் பிடிக்கலையா, விசிடி நிறைய கிடைக்கும்ங்க, அப்புறம் என்ன, ஜமாய்க்க வேண்டியதுதான் !
இது எல்லாத்தையும் விடுங்க. படிப்புக்கு சிறந்த இடம் திருச்சிதாங்க. ஆண்களுக்காக செயிண்ட் ஜோஸப் பள்ளி மற்றும் கல்லூரி, பிசப் ஹீபர் பள்ளி மற்றும் கல்லூரி, நேசனல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, இ.ஆர் பள்ளிகள் இருக்குங்க. பெண்களுக்காக ஹோலி கிராஸ், இந்திரா காந்தி, எஸ்.ஆர்.சின்னு நிறைய இருக்குங்க. ஓரளவுக்கும் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள்ள தரமாவே படிப்பு சொல்லித் தராங்க. என்ன ஒன்னு, பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் கோ-எட் கிடையாது. அது ஒன்னுதாங்க எனக்கு வருத்தம். இது மட்டுமல்லாமல் கணிப்பொறி படிப்பிற்கான தனியார் கல்விக்கூடங்களும் இருக்குதுங்க.
சொல்ல மறந்துட்டேன் பாருங்க, தரமான மருத்துவ கூடங்கள் (ஆஸ்பிடல்ஸ்) திருச்சியில் நிறைய இருக்குங்க. உறையூர்ல சி.எஸ்.ஐ அப்படின்னு ஒரு ஹாஸ்பிடல் இருக்குங்க. சூப்பரான ஹாஸ்பிடல். தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த நியாயமான செலவில் கிடைக்கும். அப்புறம் சீ.ஹார்ஸ் பணக்காரங்களுக்கு. கண் மருத்துவமனைகளும் நிறைய. இன்னும் நிறைய நல்ல ஹாஸ்பிடல்ஸ் இருக்குங்க.
ரோடுகள் எல்லாம் ஓரளவுக்கு நல்லா இருக்கும். வன்முறை, ரவுடித்தனம் அதிகம் இருக்காதுங்க. நல்ல ஊரு, சுத்தமான காத்து, காவிரித் தண்ணி, குறைந்த விலைவாசி (மற்ற தமிழக நகரங்களை ஒப்பிட்டால்), அமைதியான, மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையுடைய மக்கள் இதெல்லாம்தாங்க திருச்சி.
இப்ப சொல்லுங்க நீங்களே, திருச்சி பூலோக சொர்க்கம்தானே ? இதுவரைக்கும் திருச்சிக்கு போனதில்லைன்னா உடனே போயிட்டு வந்துருங்க. உங்களுக்கும் திருச்சியை புடிச்சுடுச்சுன்னா '+'ல்ல ஒரு குத்து விட்டுட்டு போங்களேன், புண்ணியமாப் போவும் !
35 comments:
அதெல்லாஞ் சரியப்பு.. திருச்சி வெயிலை பத்தி ஒரு வார்த்தைகூட சொல்லாம "சொர்க்கம்"னா எப்படி?! :)
சும்மா தமாசுங்க... நல்லா சுத்திக்காட்டினிங்க திருச்சியை..
மைக்கேல் ஐஸ்கிரீம் தான் சாப்பிட்டோம், அப்புறம் காலேஜ் வந்ததும் இந்திரா காலேஜ் பொண்ணுஙகள சைட் அடிக்க ரெயின்போ போறது.
இப்பவும் சத்திரம் (பஸ்டாண்டுங்க) போன ரகுநாத்,வஸந்த பவன் ல சில்லி பரோட்டா,ரவாதோசா சாப்பிட மறக்குறதுல்ல.
அப்புறம் இப்ப திருச்சிக்கு சென்னை சில்க்ஸ் வந்துருச்சு, அதுவும் சாரதாஸ விடாத மக்கள் கூட நகரும் படிக்கட்டு(Esclater) பார்க்குற ஆசையில் துணிய அள்ளிட்டு போறாங்க.
அதுவும் மலைக்கோட்டைல இருந்து காவெரி ஆற்றையும், அது மேல் கட்டிறுக்குற பாலம், அதுல ரயில் போறது எல்லாமே அழகு தான்.
தம்பி சோம்பேரிபையன்,
சொல்ல வேண்டிய, கேட்க வேண்டிய செய்திகளை விட்டு விட்டு திருச்சி புராணம் பேசுகிறீர்கள். திருச்சியில் வெள்ளம் வெள்ளமோ வெள்ளம் காவிரிகரை உடைந்த விட்டது. திருவெறும்பூரில் தண்ணீர், வெக்காளியம்மன் தண்ணீரில் பாண்டமங்கலத்தில் வீடுகள் முழ்கிவிட்டது இப்பொழுதான் கொஞ்ச கொஞ்மாக வடிகிறது. புள்ளம்பாடிக்கும் காட்டூருக்கும் இடையில் உள்ள இரயில்வே லைன் எழும்பு கூடாய் நிறகிறது.
It was a mind blowing rewind. Gud work Jo. But u'd given a worng information, doubtfully. Banana leaf do serve non-veg. Infact i go there only for non-veg. While describing abt. education i think u'd missed out REC and K.A.P medical colleges. innum tamil font install pannala. guys kindly adjust for english comment.
Arun C
Hello 20 seconds !!! hey nanum namma oooru ponnu than ...trichy pathi padikka romba santhosama irunthathu ..arun sonnathu pol REC pathiyum Engg colleges pathiyum Medical college pathiyum sollalai!!! Trichy veyilum oru sorkkam than ...athu 0 degree kulirla vaduravangalukku than theriyum !!!
நன்றாக இருந்தது. ரமா கபே, ரமணா பேக்கரி, மாம்பழச்சாலை மாம்பழம், காந்தி மார்கேட், வசந்த பவன் பரோட்டா, பாலக்கரை பிரமனந்தா சர்பத் கடை, பிமநகர் மோர்கடை... என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதே போல்
ஜெயில் - ஜோசப்,
பியூட்டி - பிஷப்
ஜாலி - ஜெமால் என்று கல்லூரிகளுக்கு நிக் நேம் உண்டு.
I strongly condemn for not specifying about BHEL REC areas. :-) and my college also. :-)
a true trichy boy
நல்லாத்தேன் இருக்கு...ஆமா வருஷத்துல முக்காலேவாசி நாள் தண்ணியே இல்லாமல் மணல் படுகையோடு காட்சி அளிக்கும் காவிரின்னு சொல்லலையே (டமாசு லாம் இல்லீங்கோ தாமிரபரணி தெனாவட்டு...எலே மாப்ள அருவாள ரெடி பண்ணுலேய் திருச்சிகாரங்க பிரச்சனை பண்ண வராங்கலேய்...)
இளவஞ்சி, திருச்சி வெயிலெல்லாம் ஒரு வெயிலா :-) இதெல்லாம் இளவெயிலுப்பா.. அனுபவிக்கனும்...
*****
ராஜா, நல்லா சொன்னீங்க, திருச்சியில மிகப்பெரிய பொழுதுபோக்குத் தலமே சத்திரம் பேருந்து நிலையம்தான், அங்க இருக்கற ஒரு பேக்கரில, சாயந்திரம் பப்ஸு, டீ சாப்டுக்கிட்டே சைட் அடிக்கற சுகமே, சுகம்தான் :-)
*****
என்னார், மன்னிச்சுடுங்க, இந்த பதிவு ரொம்ப நாளா எழுதினது, நேற்றுதான் பதியப் பட்டது.. மற்றபடி தமிழகமே வெள்ளத்தில் மிதப்பது எனக்கும் வருத்தத்தை அளிக்கிறது, உதவியளிக்க நண்பர்களுடன் இணைந்திருக்கிறேன்..
*****
அருணு, 'பனானா லீஃப்'ல அசைவமும் உண்டா.. மறந்துருச்சுய்யா.. அப்புறம் ஆர்.இ.சி மற்றும் கே.ஏ.பே மருத்துவக் கல்லூரி பற்றி எழுதாததற்கு மன்னிக்கவும், திருச்சி பாகம் - 2ல் போட்டு விடுவோம்...
*****
மலர், திருச்சி பாகம் - 2 தயாராகிறது, பொறுங்கள் சற்று..
*****
தேசிகன், மாம்பழச்சாலையை எப்படி மறந்தேன் :-) சீசனில் கூட்டம் அலை மோதும்.. காலேஜ் நிக்நேம்ஸ் பத்தி எழுதவும் மறந்துட்டேன், ஆமா நீங்க எந்த காலேஜ் ?
*****
மோகன்தாஸ், கோச்சுக்கிடாதீங்க.. திருச்சி பாகம்-2ல் போட்டுடலாம் :-)
*****
டுபுக்கு, வருசத்துல முக்காவாசி நாலு காவிரி காலியாத்தான் போகுது, ஆனா மிச்ச கால்வாசி நாலுள கலக்கிபுடுவோம்ல... திருச்சி, திருச்சிதாம்லே :-))
டுபுக்கு அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். தொல்பெருமைவாய்ந்த காவிரியை பற்றி அவர் தவறாக பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் கற்பு மேட்டரில் காவேரியும் சேர்க்கப்படும். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் எங்கக்கிட்ட அருவா எல்லாம் கிடையாது. ஆனால் அப்துல் கலாமின் உதவியோடு அணுகுண்டை ரெடி பண்ணவேண்டிவரும்.
nice thala..very nice definition of trichy..although i haven' t ever been to that city, from what u, arun and malar have written, life-la once-aavadhu poi paathuttu varanam..good blog..keep it up..
ணே... கலக்கிபுட்டீங்க ணே.. மொத நாளு திருச்சி, சீரங்கம், மலைக்கோயிலு'னு சுத்திபுட்டு, மக்கா நாளு முக்கம்பு'ல போயி புளி சோறு ரவுன்டு கட்டுன மாதிரி இருந்திச்சி.
அடுத்த வட்டம் போட்டோ பிடிச்சி போடுங்கேய்....
Prasadh
This blog is quite interseting this time.Adhisayama irukku.0 sec's indha madiri info llam thararu.I had been to Trichy once as one of ur frds in the comments said veyil romba adhigam.Kaveri(River) is most of the time dry.But gud work insted of wasting blog space by writing some useless things this time ongay oorai pathi nalla vivarama ezhudhi irukkinga.Idhlendhu oru vishayam Nalla Puriyidhu neenga office velai pakra time a vida yosichu indha blog ezhutharathuku naraya time spend panringa.Anyway ellarum velaya mattum pathutta who will give this info'.Enna correct dhaney
பிரசன்னா, உடனே திருச்சி போய்ட்டு வாங்க...
*****
புஸ்பாஸ், போட்டோ புடிக்கிறதா.. சரி முயற்சி பண்ணுவோம் :-)
*****
பிரசாத், யோவ் ரொம்ப கொழுப்புய்யா உனக்கு :-)
மைக்கேல்ஸ்-ல நானும் ஐஸ் கிரீம் சாப்பிட்டிருக்கேன் .திருச்சிய நல்ல ரவுண்டு வந்திருக்கீங்க .2-ம் பாகமும் எழுதுங்க.
டி.ராஜ், நான் ஹாஸ்டல்வாசி அல்ல, இருந்தாலும் மாலைநேர என்.ஸ்.பி ரோடு உலா பற்றி எழுத விஷயங்கள் உள்ளன, பாகம் 2-ல் எழுதுகிறேன்..
*****
ஜோ, நன்றி..
*****
கார்த்திக், உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா..ஹி..ஹி..
hi Jo..
Innoru Trichy ponnu ezhudaren..
Indha postai ippa dhaan padichen.. really great work..
u brought Trichy alive in ur post .. ellam ok.. but Michael's la super tharamana icecreamnu sonnadhai accept panna mudiyadhu.. evalo unhygeinic icecream kodukarangannu poi konjam avanga seyyara idathai paartha theriyum.. softies icecreamnu ore oru machine vechu Rs 5 kku superaa koduppangale theppakulam pakkathula adhu romba pidikkum..
neenga Trichy private bus pathi sollalaye... vera engeyum andha madhiri bus service paarka mudiyadhu.. really gr8..
Mr. Desikan Vasanta Bhavan parotta pathi sonnar.. I used to love the cutlet there..
expecting Trichy Part 2 eagerly..
சுந்தரி, நன்றி..
திருச்சி பிரைவேட் பஸ் பற்றியும் பாகம்-2ல் எழுதி வருகிறேன்..
திருச்சிமாநகராடச்சியில் 38 வார்டுகளுக்கு மட்டும் வெள்ள நிவாரணதொகை குடும்பத்திற்கு தலா ரூ1000 வழங்கப்படுகிறது.
Desipundit
திருச்சிக்குப் போனதில்லையா? எப்படியொரு தப்புபண்ணிட்டீங்க. திருச்சி ஒரு பூலோக சொர்க்கம்கிறார் இந்த சோம்பேறிப்பையன் . அங்க போக நினைச்சா, உங்களோட பயணத்தேவைகளில் கண்டிப்பா இவரோட வலைப்பதிவையும் சேர்த்துக்கோங்க. நல்லா சுத்திக்காட்டுறார் திருச்சியை. இவருக்குப் பிடிச்ச ஐஸ்க்ரீம் கடைக்குக்கூட கூட்டிட்டுப்போறார்.
Hi,
I have featured your post in Desipundit
நன்றி பிரேமலதா...
Friend,
You did not mention my R.C.Higher Secondary School.
RTC Lodge ஹோட்டல் ரவா, வெங்காய ஊத்தப்பம், காபி, கந்தக பூமியின் காட்டமான வெய்யில், Golden Rock Loco shed, 80வயதான ஸ்டேட் பாங்க் ஆலமரம், 117 Infantry Battallion, அமெரிக்கன் ஆஸ்பத்திரி, பாலக்கரை ஆறுமுகம் ஹோட்டல் பரோட்டா, டவுன் ஸ்டேஷன் அய்யர்கடை இட்லி கடப்பா, ஸ்ரீரங்கம் அம்மாமண்டப படித்துறை, வருடமொருமுறை ஸ்ரீரங்கநாதர் வந்துபோகும் நாச்சியார் கோவில், திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோவில்,BHEL ஆகியவையெல்லாம் விட்டுப் போச்சே!!!!
சோ.பை.,
"உலகம் பெருசு மாமே" அப்டீன்றார் இளவஞ்சி; ஆனா அது ரொமப் சிறுசுன்னு தோணுது. ஏன்னா நீங்க சொன்ன அந்த மைக்கிள்ஸ் ஐஸ்க்ரீம் கட நமக்கு உங்க ஊர்ல பிடிச்ச இடம். அந்தக் கடை பத்தின ஒரு விஷயத்தைச் சொல்லாம விட்டுட்டீங்களோ?
அங்க ஒரு படம் தொங்குமே..பழைய அதாவது எங்க காலத்து, நடிகர் ஒருவர் படம். பாத்துருக்கீங்களா? ரவிச்சந்திரன்..அவர் உங்க காலேஜ்ல P.U.C. படிச்சப்போ அந்தக் கடைக்கு ரெகுலர் கஸ்டமராம்..
வினையூக்கி அண்ணே, மன்னிச்சிருங்க.. பாகம் - 2ல் எழுதிடுவோம் :-)
*****
ஞானவெட்டியான், விடுபட்ட விஷயங்கள் நிறைய.. பாகம் - 2ல் எழுத முயற்சிக்கிறேன், உங்கள் பட்டியல் அதற்கு உதவியாயிருக்கும், நன்றி :-)
*****
தருமி, நீங்க சொல்ற அந்த படத்தை நான் பாத்ததில்லீங்களே.. ஹூம்..என்னத்த சொல்றது.. அங்கிட்டு போறப்பவெல்லாம் கடைக்கு வந்திருக்கிற பைங்கிளிகளை பாக்கத்தேன் நமக்கு நேரம் சரியாயிருந்தது :-))
Aiyya
Enakku thala suththu dhu.Pudhu maadhiri tamil words.
Sorry naan blogs kku pudusu. Adhan doubt.
Naan enna panna num? Software ye dhavadhu instaal panna numa?
pyya
அய்யா அனானிமஸ், தினமலர்.காம் போய் தமிழ் எழுத்துருவை பதிவிறக்கிக் கொள்ளுங்கள்
*****
Annonymus, Visit www.dinamalar.com. You can download tamil font from there & install in your system.
ரொம்ப நாள் கழிச்சு கொஞ்சம் டைம் கிடைச்சிருக்கு.. திருச்சி - பாகம் 2 எழுதி அடுத்த வாரத்தில் போட்டு விடுகிறேன், நண்பர்களே !!
//சினிமா தியேட்டர்களுக்கு என்ன குறைச்சலா திருச்சியில ? நிறைய தியேட்டர்கள் இருக்குங்க. ஒரே காம்ப்ளெக்ஸ்ல (மாரீஸ்) 5 தியேட்டர்கள் இருக்குங்க. அப்புறம் ரம்பா, ஊர்வசி, சிப்பி, சோனா, மீனா, காவிரி இன்னும் நிறைய தியேட்டர்கள் ஞாபகம் இல்லைங்க.//
முல்லை தியேட்டர விட்டுட்டிங்களே :)
மைக்கில்ஸ் தெப்பக்குளத்துல மட்டும் இல்ல, புத்தூர் பிசப் ஹாலேஜ் பக்கத்துலயும், பாத்திமா ஜுவல்லர்ஸ் கார்ப்ரேஷன் ரோட்லயும் ஒன்னு இருந்ததுங்கோ. ரொம்ப சீப், செம்ம டேஸ்ட் பரம ஏழ எங்களுக்கே அது தான் ஒன்லி ஐஸ்க்ரீம் பார்லர்.
நான் பிறந்து, வளர்ந்ததெல்லாம் புத்தூர் நால்ரோடுக்கும் ரொம்ப பக்கம் தான்.
தம்பி,
முல்லை தியேட்டரை பற்றி தனியே சொல்லி இருக்கேங்க, இந்த குறிப்பிட்ட இடத்தில விட்டுட்டேன், கோச்சுக்கிடாதீங்க.. நானெல்லாம் அங்க ரெகுலர் கஸ்டமர், college daysல.. ஹிஹிஹி..
<<>>
லிவிங் ஸ்மைல்,
ஆமாங்க, எங்க college daysல, அதுதான் எங்களுக்கும் பெரிய இடம்..
//நான் செயிண்ட் ஜோஸப் காலேஜ்லதாங்க படிச்சேன்//
:)))
//ஆனா அசைவம் கிடையாதுன்னு நினைக்கிறேன். சரியா ஞாபகம் இல்லீங்க !//
சைவம் கிடையாது.. :))
ஸ்ரீமதி, நீங்களும் அங்கேதான் PG படித்தீர்களா??? ஏனென்றால் UG அங்கே கோ-எட் இல்லை...
மேலும், பனானா லீப் அசைவம் மட்டும்தானா?? தகவலுக்கு நன்றிங்க.. எனக்கு சரியா ஞாபகம் இல்லைங்க..
Post a Comment