- 'அன்னியன்' படத்துக்கு ரூ. 85 ஆக இருந்த டிக்கெட் விலை, 'கஜினி' படத்துக்கு ரூ. 100 ஆக எகிறி விட்டது.
- தியேட்டரில் ஒலி அமைப்பு (சவுண்ட் சிஸ்டம்) சரியில்லை.
- படத்தில் பங்குபெற்ற கலைஞர்களின் பெயர் போடும்போது, சூர்யாவை விட அஸினுக்கு அதிக விஸில்கள் கிடைத்தன.
- இடைவேளையில் தின்ற சமோசா சூப்பர், இதற்காகவே இன்னொரு படம் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.
- படம் இடைவேளைக்கு பிறகு சுவாரசியமாக இல்லை. கிளைமேக்ஸ் ஏமாற்றம்.
- சூர்யா - அஸின் காதல் காட்சிகள் பிரமாதம், சூர்யா கலக்கியிருக்கிறார். நயன்தாராவைப் பற்றி சொல்ல எதுவுமில்லை.
- 'சுற்றும் விழிச் சுடரே' மற்றும் 'ஒரு மாலை இளவெயில் நேரம்' பாடல்கள் அருமை. மற்ற பாடல்கள் வீண்.
நயன்தாராவை பற்றி எதுவும் சொல்லாததற்கு நிறைய நண்பர்கள் வருத்தப் பட்டனர். அவர்களுக்காக மேலும் சில திரைத் துளிகள் Version 2.0 வில் சேர்க்கப் பட்டன.
- ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியை எப்படியெல்லாம் காட்டக் கூடாதோ, அப்படியெல்லாம் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
- கிளைமேக்ஸ் காட்சியில் வரும் மழையில் நயன்தாராவை நனையவிட்டு கவர்ச்சி விருந்து படைத்துள்ளார்கள்.
- சந்திரமுகி, ஐயா போன்ற படங்களில் வந்து நாகரீகமாக நடித்த நயன்தாராவை வெறும் கவர்ச்சி பொம்மையாக பயன்படுத்தியிருப்பது வருந்தத் தக்கது.
மொத்தத்தில் 'கஜினி' வெற்றியா, தோல்வியா என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் இது இன்னொரு 'ரமணா' இல்லை என்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது.
தினமலரில் என் பெயர் வந்ததை மும்பையில் பாதி பேருக்கும், சொந்த ஊரான டீ. பழூரில் எல்லோருக்கும் தம்பட்டம் அடித்தாயிற்று. அலுவலகத்தில் சக ஊழியர்களும், நண்பர்களும் சற்று மரியாதையாக பார்க்கின்றார்கள். முடிந்தால் சன் டீவியில் ஒரு பேட்டி கொடுத்து விடலாமென்று இருக்கிறேன். பார்க்கலாம், சன் டீவிக்கு சீரியில்கள் நடுவே என் பேட்டியை ஒளிபரப்ப நேரமிருக்குமா, என்று.
நவராத்திரி விழாவை மும்பை மக்கள் 'தாண்டியா' நடனமாடி கொண்டாடி வருகின்றனர். எங்கள் பகுதியிலும் 'தாண்டியா' ஆடிவரும் இடத்திற்கு சென்றிருந்தேன். லேட்டஸ்ட் ஹிந்தி பாடல்களை (தாண்டியாவிற்கான பிரத்யோகமான இசையும் உண்டு) லோக்கல் ஆர்கெஸ்ட்ரா குழுவினர் பாட, மக்கள் படு உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தனர். M டீவி, V டீவி சானல்களைத் தாண்டி இளைஞர்களும், மெகா சீரியல்களைத் தாண்டி பெண்களும் வந்திருந்ததை வரவேற்க வேண்டும். நவராத்திரி விழாவின் பத்து நாட்களும், கோலாகலமாக மக்கள் பொது இடங்களில் கூடி விழாவைக் கொண்டாடுகின்றனர்.
கவிதை - 1 (உருவாக்கம் : நண்பர் அரவிந்த்)
தீக்குச்சி தீப்பெட்டியிடம் கேட்டதாம்,
உரசிக்கொள்வது நாமாக இருப்பினும்
பற்றிக்கொள்வது நான் மட்டுமா?
கவிதை - 2 (உருவாக்கம் : சோம்பேறி பையன்)
கைத்தொலைபேசியில் வரும் அழைப்புகளும்
சிற்சிறு (SMS) செய்திகளும்
கணினியில் வரும் மின்னஞ்சல்களும்
ஞாபகப் படுத்தா விட்டாலும்
எங்காவது உன் பெயரை பார்க்கும் போதும்
உனக்கு பிடித்த பாடலை கேட்கும் போதும்
மூழ்குகிறேன், உன் நினைவுகளால்!
6 comments:
கைத்தொலைபேசியில் வரும் அழைப்புகளும்
சிற்சிறு (SMS) செய்திகளும்
கணினியில் வரும் மின்னஞ்சல்களும்
ஞாபகப் படுத்தா விட்டாலும்
எங்காவது உன் பெயரை பார்க்கும் போதும்
உனக்கு பிடித்த பாடலை கேட்கும் போதும்
மூழ்குகிறேன், உன் நினைவுகளால்!
காதலிக்கிறீங்களா!? அல்லது ஏதும் முயற்சி நடக்குதா:)
அப்புறம், உங்கள் கவிதையைவிடவும், தமிழ் சொல்லையே பயன்படுத்த முயற்சித்திருக்கும் உங்கள் ஆர்வம் பாராட்டத்தக்கது.
கைத்தொலைபேசியில் வரும் அழைப்புகளும்
சிற்சிறு (SMS) செய்திகளும்
கைத்தொலைபேசியில் வரும் அழைப்புகளும், குறுந்தகவல்களும் / குறுஞ்செய்திகளும்
கணினியில் வரும் மின்னஞ்சல்களும்...
//சூர்யாவை விட அஸினுக்கு அதிக விஸில்கள் கிடைத்தன.
//
ஹி ஹி சிங்கப்பூர் பிளாசா திரையரங்கிலும் இதே கதை தான். அசின் புகழ் எங்கெங்கும் வியாபித்துள்ளது... மும்பை மட்டும் விதிவிலக்கா என்ன
இவன்
அகில உலக கனடா கொண்டார் அசின் ரசிகர் மன்றத்தின் ஒரே தலைவன்.
The blog consists of more info abt wat u did in Theatre rather than the movie.Paravaillai adjust pannikalam.But Dandiya va pathi general info dhan kuduthirukinge.Neenga yaaroda dance panringa appadingara vishyam missing.something secret.Arvind kavidhai pramadham aanal Somberi payyan kavidhai oru Kodumai. Idhayellam Padichitu padikaravangaluku paithiyam pudikama irukkanum.First write on the top Let the Almighty save u for reading such a blog.Anyway innum konjam info vudan aduthavatti vaange.i will try to give good comments
- Prasadh RIC
பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.
//அன்பு : காதலிக்கிறீங்களா!? அல்லது ஏதும் முயற்சி நடக்குதா:)//
இதெல்லாம் சொல்ல முடியாது :-) நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள் :-)
மிஸ்டர் பையன் உங்கள் கஜினி விமர்சனத்துடன் வரிக்கு வரி உடன்படுகிறேன்.
எதிர்பார்த்த அளவிற்கு படமில்லை
நன்றி கோ. கணேஷ்.
நயன்தாராவை பற்றி எதுவும் சொல்லாததற்கு நிறைய நண்பர்கள் வருத்தப் பட்டனர். அவர்களுக்காக
மேலும் சில திரைத் துளிகள்
* ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியை எப்படியெல்லாம் காட்டக் கூடாதோ, அப்படியெல்லாம் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
* கிளைமேக்ஸ் காட்சியில் வரும் மழையில் நயன்தாராவை நனையவிட்டு கவர்ச்சி விருந்து படைத்துள்ளார்கள்.
* சந்திரமுகி, ஐயா போன்ற படங்களில் வந்து நாகரீகமாக நடித்த நயன்தாராவை வெறும் கவர்ச்சி பொம்மையாக பயன்படுத்தியிருப்பது வருந்தத் தக்கது.
Post a Comment