Friday, June 01, 2012

சுஜாதா எழுதிய ஒரு 18+ ஜோக்

எழுத்தாளர் சுஜாதா தனது கதைகளில்/கட்டுரைகளில் எப்போதுமே அடல்ட் சமாச்சாரத்தை இலை மறைவாய், காய் மறைவாய்தான் தொடுவார். வசந்த் டி-ஷர்ட் வாசகமாகட்டும், அல்லது கதைநாயகியின் வர்ணணையாகட்டும், விரசமில்லாமல் கவர்ச்சியை கோடு காட்டுவதில் வல்லவர்.

தனது நிறைய கதைகளில் மெக்சிகோ சலவைக்காரி ஜோக்கை பற்றி கோடு காட்டியவர், அதை வெளிப்படையாய் எழுதவே இல்லை. எப்போதோ ஒரு வலைப்பதிவில் அந்த ஜோக்கை படித்தேன். அந்த ஏழாவதா செஞ்சவங்க மறுபடி வாங்க - அதுதானா உண்மையான மெக்சிகோ சலவைக்காரி ஜோக் என்று தெரிந்தவர்கள்/அறிந்தவர்கள் சொல்லலாம்!!கற்றதும் பெற்றதும் பகுதியில், நிறைய விஷயங்களை பற்றி கலந்து கட்டி எழுதியிருப்பது சுவாரசியமாய் இருக்கும். அப்போதெல்லாம் விகடனில் நான் முதலில் படிக்கும் பகுதி கற்றதும், பெற்றதும்தான்!! பிறகு மதனின் கேள்வி பதில் படிப்பேன். இப்போது விகடன் அவ்வுளவு சுவாரசியமாய் இருப்பதில்லை!!

அப்படி ஒரு க.பெ பகுதியில்தான், கீழ்கண்ட ஒரு 18+ ஜோக்கை பரிந்துரைத்துள்ளார். படித்து ரசியுங்கள்.....
அடுத்து இந்த ஜோக்... நியூ அமெரிக்கன் புக் ஆஃப் ஹியூமரிலிருந்து தட்டியது.


புயல் வந்து கப்பல் மூழ்கி, ஒரே ஒருவன் மட்டும் உயிர் தப்பி, தன் நாய் ஃபெர்டினாண்டுடன் ஒரு தனித் தீவில் தள்ளப்பட்டான். சுற்றும்முற்றும் பார்த்தான். தனித் தீவு. மனித நடமாட்டமே இல்லை. நிறைய காய், கனிகள் தின்னக் கிடைத்தன. உயிர் வாழப் பிரச்னை இல்லை. நாய்க்கும், பொந்துகளில் எலி, அணில் போன்ற பிராணிகள் அகப்பட்டன.

நாளடைவில் அவனுக்கு ரொம்பப் போர் அடித்தது. தேடிப் பார்த்தான். தீவு முழுக்க ஆடுகள்தான் இருந்தன. அவற்றில் எதை அணுகினாலும், நாய் உடனே கோபம் கொண்டு, குரைத்து உறுமி, அவனைக் கடிக்க வந்தது. தினம் இதே கதிதான். அதனால், முயற்சியைக் கைவிட்டான்.

ஒரு நாள், கடற்கரையில் திரியும்போது திடுக்கிட்டான். ஓர் அழகான பெண், நனைந்த உடை களில் மயக்கமாகக் கிடந்தாள். உடனே அவளுக்கு முதலுதவி செய்து, தண்ணீரை எல்லாம் உறிஞ்சி, செயற்கை சுவாசம் தந்து, தட்டிக்கொட்டி எப்படியோ பிழைக்க வைத்து விட்டான்.

விழித்தெழுந்த அந்த அழகான பெண் நிலைமையை அறிந்ததும், அவனைக் காதலுடன் பார்த்து, ‘‘என் உயிரைக் காப்பாற்றியதற்குக் கைம்மாறாக உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்டாள்.

‘‘ஒரே ஒரு காரியம் செய்தால் போதும்’’ என்றான்.

‘‘என்ன?’’

‘‘ஃபெர்டினாண்டை அரை மணி நேரம் பார்த்துக்கொள்வீர்களா?"

***

நன்றி:

நியூ அமெரிக்கன் புக் ஆஃப் ஹியூமர், ஆனந்த விகடன் மற்றும்
http://sujatha-kape.blogspot.in/

9 comments:

ராஜ் said...

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

மெக்ஸிகோவில் ஒரு சலவைக்காரி ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அந்தப் பக்கம் போன ஆண்கள் அவளின் பின்பக்கமாக வந்து ஜோலியை முடித்துச் சென்று விடுவார்கள். அவள் மறுப்பேதும் சொல்வதில்லை. ஒரு நாள் ஆறு பேர் இப்படி முடித்துச் சென்றதுமே பக்கத்தில் இருந்த கழுதைக்கும் ஆசை வந்துவிட்டது. அதுவும் போய் முடித்தது சிறிது நேரம் கழித்து சலவைக்காரி சொன்னாளாம்,

“அந்த ஏழாவது ஆள், மறுபடியும் வாங்க!”

பழூர் கார்த்தி said...

நன்றி ராஜ் - ஜோக் சூப்பர். சுஜாதா இதை சொல்லாமலே இருந்ததால்தான் இவ்வுளவு சுவாரசியம்... சொல்லியிருந்தால் இவ்வுளவு பிரபலமாயிருக்காது!!

ராஜ் said...

நன்றி கார்த்தி,
உண்மையில் இது தான் "மெக்சிகோ சலவைக்காரி ஜோக்" என்று எனக்கும் உறுதியாக தெரியாது... எங்கோ நெட்டில் படித்தேன். அதை இங்கு பகிரிந்து கொண்டேன்..
சுஜாதாவின் தீவிர விசிறியான எனக்கு உங்கள் ப்ளாக் அறிமுகம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.. அடிக்கடி சந்திப்போம்..
இதற்கு முன்பே உங்கள் வலைபதிவு வந்து இருந்தாலும் நான் போடும் இரண்டாவது பின்னூடம் இது...
உங்கள் கிரிக்கெட் ப்ளாக் பார்த்தேன்.. ரொம்ப சுவாரிசியமாக எழுதி உள்ளீர்கள். தொடர்ந்து அதையும் எழுதலாமே..???
இந்த ப்ளாக்லையும் அடிக்கடி எழுதுங்கள்...முக்கியமாக "பழூர் காராச்சேவு"

--ராஜ்--

ராஜ் said...

ஒரு சிறு விண்ணப்பம், உங்கள் ப்ளாக்கில் "Followers Widget" வைத்தல் நன்றாக இருக்கும்.

MANO நாஞ்சில் மனோ said...

அதை வெளிப்படையாய் எழுதவே இல்லை.//

ஆனந்தவிகடனில் எழுதிட்டார் இந்த கதையை.

பழூர் கார்த்தி said...

// உண்மையில் இது தான் "மெக்சிகோ சலவைக்காரி ஜோக்" என்று எனக்கும் உறுதியாக தெரியாது... எங்கோ நெட்டில் படித்தேன். அதை இங்கு பகிரிந்து கொண்டேன்..//

நன்றி ராஜ்!!

//சுஜாதாவின் தீவிர விசிறியான எனக்கு உங்கள் ப்ளாக் அறிமுகம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.. அடிக்கடி சந்திப்போம்..//

நிச்சயமாக! நானும் சுஜாதாவின் எழுத்துகளுக்கு ரசிகந்தான்!

//உங்கள் கிரிக்கெட் ப்ளாக் பார்த்தேன்.. ரொம்ப சுவாரிசியமாக எழுதி உள்ளீர்கள். தொடர்ந்து அதையும் எழுதலாமே..???//

கிரிக்கெட் ப்ளாக், 6 நண்பர்கள் ஆசிரியர்களாக இருக்கும் ஒரு shared blog. ஒருங்கிணைப்பாளர் பத்ரி என ஞாபகம். இப்போது அதில் யாருமே எழுதுவதில்லை.. நான் முயற்சிக்கிறேன்..

//ஒரு சிறு விண்ணப்பம், உங்கள் ப்ளாக்கில் "Followers Widget" வைத்தல் நன்றாக இருக்கும்.//

ஆலோசனைக்கு நன்றி, வைத்து விட்டேன்!!

பழூர் கார்த்தி said...

நாஞ்சில் மனோ,

வருகைக்கும், தகவலுக்கும் நன்றி! ஆனந்தவிகடனில் சுஜாதா 'மெக்சிகோ சலவைக்காரியை' முழுமையாக எழுதியாக நினைவில் இல்லை.. அதன் அடல்ட் தன்மை காரணமாய் வெளிப்படையாய் பத்திரிக்கையில் எழுதியிருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.. இருந்தாலும், உங்க கருத்துக்கு நன்றி!

vijay raj said...

நண்பரே!
மெக்சிகோ சலவைக்காரி ஜோக்கை தேடி நான் வரவில்லை.,இருப்பினும் இதை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

Kanaka Valli said...

சுஜாதா மேல் இருந்த மரியாதையே போய்விட்டது இந்த ஜோக்கால்தான் ..மனிதர் உயிரோடு இருந்தால் ஒரு கடிதமாவது போட்டு மனிதரை நெளிய வைத்திருப்பேன்...அவருக்கு பெண்குழந்தை இல்லாதது வசதியாக போய்விட்டது..
ஆனால் ஒன்று இது நம்ப ஊர் வண்ணாத்தி கதையாக வலம் வந்துகொண்டுதான் இருக்கிறது..
இப்ப புரிகிறது மதன் ,எஸ். ராமகிருஷ்ணன்,சுகி சிவம் போன்றோர்களை விடவும் சுஜாதா ஒருபடி மேலே இருக்கிறார் என்று..