Wednesday, April 01, 2009

இந்தியா - நியூசி டெஸ்ட் கிரிக்கெட் - 3வது போட்டி முன்னோட்டம்

இரண்டாவது போட்டியில் டிரா செய்தது பெரிய விஷயம். என்னதான் flat பிட்ச்சாக இருந்தாலும் இரண்டேகால் நாட்கள் விளையாடுவது என்பது சாதாரணமானதல்ல.

கம்பீர், லஷ்மணன், டிராவிட், சச்சின், யுவராஜ் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே. மூன்றாவது போட்டிக்கு தோனி அணிக்கு திரும்பி விடுவார் என எதிர்பார்க்கலாம்.

தினேஷ் கார்த்திக் கிடைத்த ஒரு வாய்ப்பையும் தவர விட்டு விட்டது வருத்தம்தான். இரண்டாவது போட்டியில் சேவக்கின் தலைமை சிலாகிக்கும்படி இல்லை. யுவராஜ் சிங் இரண்டு கேட்ச்சுகளை மிஸ் செய்யாமல் இருந்தால், போட்டியின் முடிவு வேறு மாதிரியும் இருந்திருக்க வாய்ப்புண்டு.

மூன்றாவது போட்டி நடக்கப்போகும் வெலிங்டன் பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமானது, எனவே இந்தியா தொடரை வெல்ல அருமையான வாய்ப்பு காத்துக் கொண்டுள்ளது.

சேவக் எல்லா பந்துகளை விளாச நினைப்பதை தவிர்க்கலாம். முதல் டெஸ்ட் வென்ற அதே அணியே மீண்டும் களமிறங்கலாம். இந்தியா பீல்டிங்கைல் அதிக கவனம் செலுத்த வேண்டும். பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச்சுகளில், பீல்டிங்கின் சிறு தவறுகள் கூட வெற்றிவாய்ப்பை தடுத்து விடும்.

பந்து வீச்சில் ஷாகிர், இஷாந்த், முனாப், ஹர்பஜன் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம். தோனியின் தலைமை நிச்சயம் அணியை ஊக்குவிக்கும். யுவராஜ் பார்முக்கு திரும்பியுள்ளது நன்மையே.

மூன்றாவது போட்டியை வென்று, தொடரையும் வென்று சரித்திரம் படைக்க இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!!

4 comments:

Anonymous said...

கமென்ட் மாடரேஷன் நீக்கியதை சோதிக்க, இந்த கமென்ட்..

நாமக்கல் சிபி said...

ஆமாம்! இதுவும் சோதிக்கதான்!

Cetification Consultant said...

கரெக்டு! மாடுரேசன் நீக்கப் பட்டுள்ளது என சான்றளிக்கிறோம்!

பழூர் கார்த்தி said...

ஆஹா, அற்புதமாய் வேலை செய்கிறதே!! :-))

பின்னூட்டமிட்ட
பெருந்தகைகளுக்கு
நன்றி!!