Thursday, July 13, 2006

இஸ்ரேலில் சோம்பேறி பையன் - பாகம் 2

முந்தைய பாகத்தில் : மும்பையிலிருந்து விமானத்தில் கிளம்பியது முதல் திறந்த வாய் மூடவில்லை (முதல் வெளிநாட்டு பயணமாச்சே). இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் இறங்கி 'பசேல்' ஹோட்டலுக்கு நண்பர்களுடன் பயணிக்கிறேன். ஹோட்டல் ரிஷப்சனை அணுகிய போது...

'மன்னிக்கவும், உங்களுக்கு இந்த ஹோட்டலில் இடமில்லை..' அழகிய பெண் ரிசப்ஷனிஸ்ட் வாயசைத்ததை கேட்டு எனக்கு லேசாக மயக்கம் வந்தது. மயக்கம் தவிர்க்க கோலிசோடா தேடிக் கொண்டிருந்த நொடிகளில், ரிசப்ஷனிஸ்ட் தொடர்ந்தாள் "உங்களுக்கு 'தால்' ஹோட்டலில் ரூம் புக் செய்திருக்கிறோம், நீங்கள் இங்கிருந்து அங்கு போவதற்கு நாங்களே டாக்சி ஏற்பாடு செய்து விடுகிறோம், சிரமத்திற்கு மன்னியுங்கள்". 'இட்ஸ் ஓகே..ஹி..ஹி..' இது நான்.இது டெல் அவிவ் கடற்கரை. ஹோட்டல் தால் (TAL) ஹயர்கான் வீதியில் கடற்கரை ஓரமாக உள்ளது. 10 தளங்களுடன் கூடிய அருமையான ஹோட்டல். இரு நிமிட நடையில் கடற்கரையை அடைந்து விடலாம். கடற்கரையை நம்மூர் மெரினாவுடனோ, மும்பை ஜூகுவுடனோ ஒப்பிட்டு நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை. ஒரே வரியில் சொன்னால் 'பூலோக சொர்க்கம்'.மேலே நீங்கள் பார்ப்பது இஸ்ரேலில் ஓடும் பஸ். எல்லாமே அரசாங்கத்தைச் சேர்ந்ததுதான். தனியார் பஸ்கள் இல்லை. யுஎஸ் போலவே 'கீப் ரைட்' வண்டியோட்டும் நடைமுறை. பஸ், கார்களில் 'ஸ்டியரிங்' (தமிழ்ல என்னங்க) இடது முன்பக்கம் இருக்கின்றன. அழகான, புதிய, நன்கு பராமரிக்கப்படும் பஸ்கள். வழித்தடங்கள், இறங்கும் இடம் தெரிவிக்கும் பலகை அனைத்திலும் 'ஹீப்ரு' மொழியே. 20-25 பேர் மட்டுமே உட்கார முடியும்.இது லாட்டரிக் கடை. பாருங்கள், எவ்வுளவு ஜோராக உள்ளதென்று. கடையின் முன் நிற்பது எனது நண்பர். இஸ்ரேலிலும் நம்பர் லாட்டரி உண்டு. ஒருநாள் அலுவலகம் முடிந்து திரும்பும் போது, சிறுமி ஒருவள் (8 அல்லது 9 வயது இருக்கும்) லாட்டரி வாங்கிக் கொண்டிருந்தாள். 'ஃபாரின் ஃபாரின்தான்' என்று நினைத்துக் கொண்டே நகர்ந்து விட்டேன்.இரண்டு இஸ்ரேல் இளம்பெண்கள் ஒய்வெடுக்கின்றனர். இஸ்ரேலில் அனைத்து இளம்பெண்களும் அழகாக உள்ளனர் (அல்லது எனக்கு அப்படி தோன்றுகிறது). 18 வயதில் ராணுவத்திற்கு கட்டாயமாக அனுப்பப் படுவதாலும், அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்களாலும் எல்லாருமே 'ஜில்'லென்று உள்ளனர். (பெண்கள் மட்டுமல்ல, ஆண்களுமே ஸ்மார்ட்டாக, தொப்பையில்லாமல் சல்மான் கான் போலுள்ளனர்). பெண்கள் உடைகளும் ரொம்பவே மாடர்ன்தான், மிகக் குறைவான உடைகளை மட்டுமே நிறைய பெண்கள் அணிகின்றனர்.

இஸ்ரேலில் நிறைய தமிழ் வலைப்பதிவாளர்கள் இருப்பதாக தெரியவில்லை. எனக்குத் தெரிந்து வஜ்ரா சங்கர் இருக்கிறார். வேறு யாராவது இருப்பது தெரிந்தால், பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். ஆனால் நான் அங்கே இருந்தபோது யாரையும் சந்திக்க இயலவில்லை. அடுத்த முறை பார்ப்போம்.


இஸ்ரேல் பற்றி நிறைய தமிழ் வலைப்பதிவுகள் வந்துள்ளன. சர்ச்சைக்குறிய விஷயங்களில்லாமல், இஸ்ரேலின் சுற்றுலாத்தளங்களை / பயண அனுபவங்களை பற்றிய பதிவுகள் குறைவே (என நினைக்கிறேன்).

வஜ்ரா சங்கர் தனது வலைப்பதிவில்புகைப்படத்துடன் சில இடுகைகளை, அருமையான விவரங்களுடன் இட்டுள்ளார். தள முகவரி http://sankarmanicka.blogspot.com/

வேறாதாவது தமிழ் வலைப்பதிவுகள் சுற்றுலா - இஸ்ரேல் பற்றி இருந்தால், நண்பர்கள் பின்னூட்டத்தில் முகவரி தரலாம்.

ஷபாத் பற்றியும், ஹோட் - ஹசரான் பற்றியும் அடுத்தடுத்த பாகங்களில் பார்க்கலாமே !!

17 comments:

Vajra said...

//
லே நீங்கள் பார்ப்பது இஸ்ரேலில் ஓடும் பஸ். எல்லாமே அரசாங்கத்தைச் சேர்ந்ததுதான்.
//

சோ. பை,
படத்தில் இருப்பது டான் (dan) பஸ் சர்வீஸ்.
டான் பஸ் சர்வீஸ், எக்கெட் (Egged) பஸ் சர்வீஸ் அரசாங்க முதலீடு உள்ள தனியார் நிறுவனங்கள்.

எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் ஏகத்துக்கு தனியார் முதலீடு உள்ளவை. பல்கலைக்கழகத்தில் கூட எக்கச்செக்க தனியார் முதலீடுகள்.

இஸ்ரேல் அரசாங்கம் பஸ் ஓட்டச் சென்றால் நாட்டை ஹெஸ்பொல்லாக்கள்/தாலீபான்கள்/ஹமாஸ் கபளீகரம் செய்து விடுவார்கள்...;D

இன்னொறு குட்டி மேட்டர். இந்த டான் பஸ் சர்வீஸ் தான் இஸ்ரேலில் அதிகஷெரூத் (மினி பஸ்) ஓட்டும் நிறுவனம்.

tbr.joseph said...

குட்.. இப்பத்தான் ஒரு பயணக்கட்டுரை மாதிரி இருக்கு..

பெண்களுடைய அழகை வர்ணித்த இடத்துல ஒங்க வயசு தெரிஞ்சுது..

ஆனா போட்ட படங்கள்ல ஃபுல் ட் ரெஸ்லருக்காங்களே.. சென்சாருக்கு பயந்துட்டீங்களோ:)

அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வாரத்துக்கு மூனு பதிவாவது போடுங்க..

Vajra said...

படத்தைப் பார்த்தவுடன் தெரிந்தது, அது டிஸிங்காப் செண்டர் என்று...
அங்கே பக்கத்தில் உள்ள "தந்தூரி"யில் ஒரு பிடி பிடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...;))

பழூர் கார்த்தி said...

வஜ்ரா ஷங்கர், தகவலுக்கு மிக்க நன்றி.. இதனை அடுத்த பதிவில் சேர்த்து விடுகிறேன்..

***

ஜோசப், வாரத்துக்கு மூன்று பதிவா???
எனது பேரை கெடுத்து விடுவீர்கள் போலிருக்கிறதே :-)

***

கொஞ்சம் ஏடாகூடமான படங்களும் உள்ளன.. ஆனால் தமிழ்மணத்திற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்ப வில்லை (அடிரா சோம்பேறி, அட்ரா..)

***

ஷங்கர், டிஸிங்காப் செண்டர்தான்..பக்கத்திலுள்ள சினிமா ஹோட்டலில்தான் வசித்தேன்..தால் 3 நாட்கள் மட்டுமே.. "தந்தூரி" ஹோட்டல் சாப்பாடு சுமார்தான் !!

Vajra said...

//
"தந்தூரி" ஹோட்டல் சாப்பாடு சுமார்தான் !!
//

என்னங்க பண்றது...கெடைக்கிறதுல (இந்திய உணவு விடுதிகளில்)அது தான் கொஞ்சம் டீசண்டானது... உங்களுக்கு ஏதும் புதுசா தெரிஞ்சிறுந்தா சொல்லுங்க...

எனக்குத் தெரிஞ்சு, ஷவூல் ஹ மெலாக்(Shaul ha melakh) தெருவில் இந்திரா என்று ஒன்ரு உள்ளது...அது தந்தூரியைவிட மட்டமாக இருக்கிறது...விலையைப்பார்த்தால் 45-50 ஷெக்கெல் என்று சொல்கிறார்கள்...

பழூர் கார்த்தி said...

வஜ்ரா, எனக்கு தெரிந்த இந்திய உணவு விடுதிகள்

தந்தூரி
இந்திரா
சப் குச் மிலேகா (இதில் 65 ஷக்கீலுக்கு அருமையான பபே உணவு படைக்கிறார்களாம் !!)

ஆனால் நான் தந்தூரியில் மட்டுமே ஒருநாள் சாப்பிட்டேன்.. மீதி நாட்கள் ஹோட்டலில் சமைத்தோம்

cancerian said...

Motha thoguppaiyoon padithaen. Nanraga iruthathu.
Irunthaloom sila idangalil buruda vittu irukka vaendaam (Jus Kiddin!)
Airportin Paeyar uruvaakan parri ithan moolan arinthaen.
Intha thokuppai villu paatupool izhukka vendaam,, Kich endru mudiyungal

cancerian said...

Motha thoguppaiyoon padithaen. Nanraga iruthathu.
Irunthaloom sila idangalil buruda vittu irukka vaendaam (Jus Kiddin!)
Airportin Paeyar uruvaakan parri ithan moolan arinthaen.
Intha thokuppai villu paatupool izhukka vendaam,, Kich endru mudiyungal

பிரதீப் said...

படங்கள் மட்டுமல்ல, உங்க அனுபவக் கட்டுரையும்தான் அருமையா இருக்குங்க! இஸ்ரேலுக்குப் போகத்தான் முடியலை, இப்படியாச்சும் பாத்துக்கிருவமே...

வலைப்பதிவு said...

ஒரே ஒரு ராணுவ வீரருக்கு பதிலாக நூற்றுக்கணக்கான மக்களையும் பிள்ளைகளையும் கொன்ற நாடெல்லாம் ஒரு நாடா? காரி முகத்தில் உமிழ வேண்டும்.

Dubukku said...

நல்ல கட்டுரை. நீங்கள் இப்போ திரும்ப ஊர் வந்துவிட்டீர்கள் என்றி நம்புகிறேன். தற்போதைய பதட்ட நிலையைப் பார்த்தீர்களா?

மின்னுது மின்னல் said...

சரியா சொன்னிங்க பொன்ஸ் இரண்டு ராணுவ வீரர்களுக்காக எத்தனை அப்பாவி குழந்தைகள் பலி இன்னும் எத்தனையோ ??
இதை பற்றி யாரும் எழுதுவதில்லை

(பொன்ஸ் நெஞ்சை உறுக்கும் போட்டோவுக்கு இமெயிலில் தொடர்பு கொள்ளவும்)

பழூர் கார்த்தி said...

cancerian, தொடரை வில்லுப்பாட்டு போல் இழுக்காமல் கிச்சென்று முடித்து விடலாமென்றுதான் நானும் நினைக்கிறேன் :-) நன்றி !!

***

ப்ரதீப், உங்கள் கருத்துக்கு நன்றி !

***

பொன்ஸ், உங்கள் ஆதங்கம் எனக்கும் புரிகிறது, நிலைமை சீரடைய இறைவனை பிரார்த்திப்போம் !

***


டுபுக்கு, நான் ஜூன் 17ம் தேதியே புனேவுக்கு திரும்பி விட்டேன்.. ஆனால் திரும்பச் செல்லும் திட்டமும் உள்ளது.. அதற்குள் நிலைமை சீரடைந்தால் நல்லது !

***

மின்னுது மின்னல், இஸ்ரேல் தனது அணுகுமுறையை இந்த விஷயத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்தும்..

இருந்தும் இந்த தொடர், இஸ்ரேலின் சுற்றுலா மற்றும் பயண அனுபவங்களை கூறுவதால், இங்கே அதனை தெரிவிக்க இயலவில்லை..

நன்றி !

இராமநாதன் said...

//18 வயதில் ராணுவத்திற்கு கட்டாயமாக அனுப்பப் படுவதாலும்//
ஹி ஹி.. நேர்ல பட்ட அனுபவம் நிறைய உண்டுங்க. நண்பனோட மனைவி மெதுவா தட்டினாலே நமக்கெல்லாம் வலிக்கும்.

இலாத், ஹைபாலாம் போயிட்டு வந்தீங்களா?

என்னங்க பொன்ஸு அப்புறம் மின்னுது மின்னல்,
ஆனாலும் இவ்வளவு சீற்றம் கூடாதுங்க. ஜனநாயக நாடுகளோட சாபக்கேடு இது. இதப்பத்தி பதிவே போடணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன். Palestine has got better PR guys.

என்ன வஜ்ரா, சோ.பை? சரிதானே?

Anonymous said...

Israel beach nalla iruntha nalla irukkunnu sollunga...atha vituttu marina matrum india beach ellam yen izhukuringa.....photola than pakkuromulla appudi onnum agha ohonnu illai...athe kallu, mannu, sedi, kodi than.....oru vaati flightla yerittu ivanunga kudukura alumbu irukke:-)

arun c

Vajra said...

//
Palestine has got better PR guys.
//

ரஷியா ராமனாதன் அவர்களே...ஒரு விதத்தில் அது சரிதான்...அந்த PR ஆசாமிகள் மேல் தான் தவறு என்று நான் சொல்வேன்...ஹி ஹி ..

சொ. பை,
அந்த பொன்ஸ் ஒரு போலி...உண்மையான பொன்ஸ் அல்ல...இப்போது தான் கவனித்தேன்..

..
நண்பனோட மனைவி மெதுவா தட்டினாலே நமக்கெல்லாம் வலிக்கும்.
..
ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான்...அவுங்க உங்களுக்கு வலிக்கிற அளவுக்கு தட்ட, நீங்க என்ன பண்ணீங்க...?

பழூர் கார்த்தி said...

//இலாத், ஹைபாலாம் போயிட்டு வந்தீங்களா?//

இராமநாதன், இலாத் போகவில்லை.. ஹைபா சென்று வந்தேன்.. படங்கள் அடுத்த பதிவில்

***

அருண் சி, உங்க கருத்துக்கு நன்றி, ஒரு ஆதங்கத்தின் பேரில் எழுதப்பட்டதே அந்த ஒப்பீடு, நம்மூரிலும் கடற்கரையை சுத்தமாக வைத்துக் கொள்ள இயலும், மக்கள் ஒத்துழைத்தால்...

***

//அவுங்க உங்களுக்கு வலிக்கிற அளவுக்கு தட்ட, நீங்க என்ன பண்ணீங்க...? //

வஜ்ரா, இராமநாதனிடம் நிறைய பதிவுகளுக்கான விஷயம் இருக்கிறதென நினைக்கிறேன் :-))