Friday, February 24, 2006

சங்கிலித் தொடர் பதிவு - ஜோசப் & டோண்டுவிடமிருந்து

மூன்று நாட்களாய் அலுவலகத்தில் நிறைய வேலை இருந்ததால் தமிழ்மணம் பக்கம் வரமுடியவில்லை. திடீரென்று நேற்று மாலை தமிழ்மணத்தை திறந்த போது, சங்கிலித்தொடர் பதிவுகள் நிறைய தென்பட்டன. தெரிந்த விளையாட்டுதான், புது வடிவத்தில். சங்கிலித்தொடரில் என்னை அன்பால் இழுத்த ஜோசப் மற்றும் டோண்டுவிற்கு நன்றி !

பிடித்த நான்கு விஷயங்கள்

1. சினிமா பார்ப்பது / விமர்சிப்பது : சினிமா பெரும்பாலானோருக்கு பிடித்த பொழுதுபோக்குதான். சினிமா பார்ப்பதும், சினிமா பார்க்க வருபவர்களை பார்ப்பதும் எனக்கு இன்னமும் பிடித்தமான விஷயம்தான். ஆனால் தியேட்டரில்தான் சினிமா பார்க்க பிடிக்கும்.

2. கிரிக்கெட் பார்ப்பது / விளையாடுவது / விமர்சிப்பது : ஊரிலிருந்த வரை கிராமத்து கிரிக்கெட்டான கிட்டிப்புல்லின் ரசிகன் நான். திருச்சிக்கு படிக்க வந்தவுடன், கிரிக்கெட்டுக்கு மாறிவிட்டேன். இப்போதும் நமது கிரிக்கெட் பதிவுகளை 'கிரிக்கெட் கூட்டுப்பதிவில்' காணலாம்.

3. பழைய பாடல்கள் கேட்பது : பொதுவாக பாடல்கள் கேட்பது பிடிக்கும். பழைய பாடல்கள் இன்னும் ரொம்பவே பிடிக்கும். ஜெயா டிவியில் இரவு 11 மணியிலிருந்து 12 மணிவரை ஒலிபரப்பும் தேன்கிண்ணம் நிகழ்ச்சியின் பரம ரசிகன். நேற்று கூட 'கங்கைக் கரை தோட்டம்...' பாடலில் என்னையே மறந்தேன்.

4. தமிழ் வலைப்பதிவுகள் படிப்பது / படைப்பது : ஆறு மாதமாகத்தான் தமிழ்மணம் பழக்கம். தேசிகன் அறிமுகப் படுத்தினார். அவருதவியுடன் வலைப்பதிவையும் ஆரம்பித்தேன். முன்பெல்லாம் ஆனந்த விகடன், குமுதம், தினமலர், தினமணி, வெப் உலகம், ரீடிஃப் என்று எல்லா தமிழ் வலைத்தளங்களுக்கும் செல்வேன். இப்போதெல்லாம் தமிழ்மணத்திற்கே நேரம் போதவில்லை. டோண்டு சொல்வது போல், தமிழ்மணத்தைப் பார்க்காவிட்டால், கையெல்லாம் நடுங்க ஆரம்பித்து விடுகிறது. தமிழ்மணத்தை உருவாக்கி, நிர்வாகித்து, பங்களித்து வரும் நண்பர்கள், வலைப்பதிவர்கள் அனைவருக்கும் நன்றி !

பிடித்த நான்கு படங்கள்

1. அன்பே சிவம்
2. தவமாய் தவமிருந்து
3. குருதிப்புனல்
4. காக்க காக்க

பிடித்த நான்கு பாடல்கள்

1. சென்னை செந்தமிழ் (எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி)
2. நானொரு சிந்து (சிந்து பைரவி)
3. சின்ன சின்ன ஆசை (ரோஜா)
4. பச்சைக்கிளிகள் தோளோடு (இந்தியன்)

பிடித்த நான்கு இடங்கள்

1. டி. பழூர் (நான் பிறந்து வளர்ந்த கிராமம்)
2. திருச்சி (பள்ளி, கல்லூரி படிப்பு)
3. ஹைதராபாத் (முன்பு வேலை பார்த்த இடம் - 5 வருடங்கள்)
4. மும்பை (தற்போது வேலை பார்க்கும், வசிக்கும் இடம்)

பிடித்த வலைப்பதிவாளர்கள்

நிறைய பேரை பிடிக்குமென்பதால் வகைப்படுத்தி எழுதுகிறேன். இன்னும் நிறைய வலைப்பதிவுகள் ஞாபகத்தில் இல்லாததால், எழுத முடியவில்லை. நண்பர்கள், பொறுத்தருளுக.

அனுபவங்கள் / மீள் நினைவுகள் / சமூகம்

1. டோண்டு
2. டி.பி.ஆர்.ஜோசப்
3. தருமி
4. 'தாட்ஸ் இன் தமிழ்' பத்ரி

நகைச்சுவை / நையாண்டி

1. டுபுக்கு
2. இட்லி வடை
3. முத்து (தமிழினி)
4. பினாத்தல் சுரேஷ்

நிகழ்வுகள் / கதைகள் / பயண அனுபவங்கள்

1. தேசிகன்
2. புனே செப்புப் பட்டயம் மோகன்தாஸ்
3. கடற்புறத்தான் ஜோ
4. எண்ண கிறுக்கல்கள் செல்வராஜ்

சங்கிலித் தொடரில், நான் அழைக்க விரும்புபவர்கள்

1. தேசிகன்
2. ரஷ்யா இராமநாதன்
3. 'தாட்ஸ் இன் தமிழ்' பத்ரி
4. கோ. கணேஷ்

8 comments:

dondu(#4800161) said...

வேலைகள் மத்தியிலும் நல்ல பதிவு போட்டுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

இப்பின்னூட்டம் என்னுடைய சங்கிலிலிப் பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_22.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழூர் கார்த்தி said...

நன்றி டோண்டு அவர்களே, பொதுவாகவே எனக்கு மீள் நினைவுகள் பதிவுகள் படிப்பது, பிடிக்கும்.. உபயோகமான அனுபவங்கள், வாழ்க்கை முறைகள், சவால்கள், வெற்றி பெற்ற முறை போன்றவை நம்மையும் உத்வேகப் படுத்தும் !!

Dharumi said...

சோ. பையா,
அது என்ன.."
அனுபவங்கள் / மீள் நினைவுகள் / சமூகம்

1. டோண்டு
2. டி.பி.ஆர்.ஜோசப்
3. தருமி" //-
- அது என்ன இந்த category-ல் பெருசுகளா உங்களுக்குப் பிடிக்குது??

tbr.joseph said...

அது என்ன இந்த category-ல் பெருசுகளா உங்களுக்குப் பிடிக்குது??//

அதானே?

ஹூம்.. அனுபவசாலிகள் சொல்றதுதான் உங்களுக்கு புடிச்சிருக்கு போலருக்கு..

பரவால்லை.. உங்களுக்காவது புடிச்சிருக்கே.. அதுக்கு நன்றி..

பழூர் கார்த்தி said...

நன்றி தருமி மற்றும் ஜோசப் அவர்களுக்கு..

Senthil said...

//அது என்ன இந்த category-ல் பெருசுகளா //


நான் கேட்க நினைத்தெல்லாம் அவங்களே கேட்டுட்டாங்க.:)

//நகைச்சுவை / நையாண்டி

3. முத்து (தமிழினி)
//
அது என்ன முத்துவை நகைச்சுவை / நையாண்டி category இல் சேர்த்துவிட்டீர். அவர் சீரியஸ் பதிவுகளுக்குதானே அதிகம் அறியப்படுகிறார் :)

அன்புடன்
சிங்கை நாதன்

பழூர் கார்த்தி said...

// முத்து (தமிழினி)
அது என்ன முத்துவை நகைச்சுவை / நையாண்டி category இல் சேர்த்துவிட்டீர். அவர் சீரியஸ் பதிவுகளுக்குதானே அதிகம் அறியப்படுகிறார் :) //

இந்த விளையாட்டுக்கே நான் வரவில்லை.. ஏற்கனவே உடம்பெல்லாம் அடிவாங்கி வலிக்கிது.. வேணாம்..அழுதுருவேன் :-)

பொன்ஸ்~~Poorna said...

//நகைச்சுவை / நையாண்டி
3. முத்து (தமிழினி)
//

இது முத்துவுக்குத் தெரியுமா?