Tuesday, December 27, 2005

வாசனையுடன் ஓர் பதிவு

வலைப்பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும், தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் ! கடுமையான வேலைப்பளுவின் காரணமாக நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின் இப்போது பதிவிடுகிறேன்.

கடந்த இருபது நாட்களில் நிறைய சம்பவங்கள் நடந்து விட்டன. இந்தியா, இலங்கையை கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக வென்றது. சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டிகளில் மரண அடி வாங்கியுள்ளது. பாரளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பதவி பறிபோயுள்ளது. சுனாமி நினைவுதினமன்று பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகளை வெளியிட்டன. தமிழ்நாட்டில் வெள்ள நிவாரணம் வாங்க வந்தவர்களிடம் கூட்ட நெரிசல் ஏற்பட்டு நிறைய பேர் இறந்தனர். வழக்கம்போல் அரசு தொலைக்காட்சியும், எதிர்க்கட்சி தொலைக்காட்சியும் இதை முடிந்த அளவுக்கு அரசியலாக்கின.வலைப்பதிவுகள் வழக்கம்போல் வெளிவந்தன.


2005ம் வருடத்தில் இந்தியாவில் நிறைய சோக சம்பவங்கள் நடந்து விட்டன. மும்பையில் மழை, வெள்ள அழிவுகள், காஷ்மீரில் பூகம்பம், குஜராத், ஒரிஸ்ஸாவில் மழை, வெள்ளம், தமிழ்நாட்டில் வெள்ள அழிவுகள், கூட்ட நெரிசல் பலிகள், பாரளுமன்ற பிரதிநிதிகள் பதிவிபறிப்பு என நிறைய
சம்பவங்கள் நடந்து விட்டன. இவைகளிலிருந்து மக்களும், அரசாங்கமும் பாடம் கற்று, எதிர்காலத்திலாவது இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ள ஓரளவாவது தயார்நிலையில் இருக்க வேண்டும். 2006ம் வருடம் உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும் தர இறைவனை பிரர்த்திப்போம். மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள் !


கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே கவிதை என்ற பெயரில் ஏதாவது கிறுக்குவது வழக்கம். இதோ வாசனைக் கவிதையை வாசியுங்கள், ஏதாவது புரிந்தால் பின்னூட்டத்தில் கெட்ட வார்த்தைகள் தவிர்த்து, மற்ற வார்த்தைகளில் எனக்கு எழுதுங்கள் !


வாசனை


தூக்கம் வர மறுத்த ஓரிரவில்

ஞாபகம் வந்தது உன் வாசனை..

பேருந்தில் உன் தோள் மேல் கைபோட்டு

நெருங்கி உட்கார்ந்திருந்த போது வந்த வாசனை..

வாசனைத் திரவியங்கள் உபயோகப் படுத்தும்

பழக்கமில்லாத உன்னை, உன் வாசனையினால்

இன்னும் பிடித்துப் போனது, எனக்கு...

உன் பெயரை எங்காவது பார்க்கும்போதும்

படிக்கும்போதும், ஞாபகத்தில் வருவது

உன் உருவமும், வாசனையும்தான்..

இன்றும் கூட எப்போதாவது தொலைபேசியில்

உன்னுடன் பேசினால், பேசி முடித்து விட்டு

முகர்ந்து பார்க்கிறேன், உன் வாசனையை...

எங்கோ பிறந்தோம், எங்கோ வளர்ந்தோம்..

ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்தோம்..

உனக்கும், எனக்கும் நம்மை பிடிக்கும் முன்பே

பிரிந்து விலகினோம்...எதனால் நாம் பிரிந்தோம்..

மறுபடியும் சேருவோமா..காரணம்

தெரிய வில்லை, புரிய வில்லை...

இருப்பினும் தூக்கம் வராத இரவுகளில்,

இன்னமும் நுகர்கிறேன், உன் வாசனையை !!!

4 comments:

Anonymous said...

kavithai nalla irukku :)

kaviathaiyavida concept romba pidichuthu.
Aamaa 2006 vandhiruche...blogaddress 2006 pottu puthu blog arambipeengala? :P

தருமி said...

கெட்டதில் முதலாவது இடமே கிரிக்கெட்டுக்குத்தானா...என்னமோ போங்க!!
வாசனை - வாசனை இன்னும் பிடிச்சிக்கிட்டுதான இருக்கீங்க..அதுக்குப் பிறகென்ன சோகமய்யா?

பழூர் கார்த்தி said...

டுபுக்கு, இந்த குசும்புதானே வேண்டாங்கறது... ஒவ்வோர் வருசத்துக்கும் புது ப்ளாக் ஆரம்பிக்கறாப்ல ஒன்னும் திட்டமில்லை.. புத்தாண்டு வாழ்த்துகள் :-)
*****
தருமி, வாசனை மட்டும்தானே இன்னும் பிடிச்சுக்கிட்ருக்கோம், அதேன் சோகம் :-)

தருமி said...

நல்ல ஒரு 'நுகர்வோர்'தான் நீங்கள்.

முந்தின பதிவில் ஒரு எழுத்துப்பிழை: கேட்டதில்