Thursday, December 08, 2005

கிரிக்கெட் - திருச்சி - கணிப்பொறி - பயணம்

நண்பர் 'பத்ரி' தொடங்கியிருக்கும் கிரிக்கெட் வலைப்பதிவில் நானும் உறுப்பினராகி விட்டேன். இன்று ஒரு பதிவு சச்சினைப் பற்றி எழுதியிருக்கிறேன். அதற்கான சுட்டி இங்கே 'சச்சின் - டெல்லி - 35 ?'

திருச்சியைப் பற்றி எழுதிய பதிவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பதிவின் இரண்டாம் பாகம் தயாரகிறது. கூடிய சீக்கிரம் வெளியிட்டு விடலாம்.

நேற்று இரவு என்.டி.டிவியில் மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் - இன்போசிஸ் நாராயணமூர்த்தி - பிரணாய் ராயின் கலந்துரையாடல் ஒளிபரப்பானது. 1.7 பில்லியன் டாலர் மைக்ரோசாப்ட் இந்தியாவில் முதலீடு செய்யப் போவதாக செய்தி வந்துள்ளது. பில்கேட்ஸின் பேச்சில் செயற்கை தன்மை நிறைய இருப்பது போல் எனக்கு தோன்றியது. மூர்த்தி இயல்பாக பேசினார். கொஞ்ச நேரம் பார்த்து விட்டு ஜெயா டிவி 'ஷோ டைம்' நிகழ்ச்சிக்கு சென்று விட்டோம்.

மும்பையில் கன்சோலியிலிருந்து சான்படாவிற்கு மாறி விட்டேன். தினமும் அலுவலகத்திற்கு மின்சார தொடர்வண்டியில்தான் (ட்ரெயின்) வருகிறேன். பயணம் சுவாரசியமாக இருக்கின்றது, கூட்டமே இல்லை. இத்தடம் (தானே - வாஷி) புதிதாகையால் கூட்டம் இல்லை.

7 வருடங்கள் கழித்து கல்லூரி நண்பனை சந்திக்க முடிந்தது. தற்போது இவர் என்னுடனே தங்கியிருக்கிறார். மும்பை பன்னாட்டு வங்கி ஒன்றில் பணி புரிகிறார். தினமும் கல்லூரி நாட்களைப் பற்றி பேசி நினைவலைகளில் நனைந்து கொண்டிருக்கிறோம். சுவாரசியமான சம்பவங்கள் பதிவுகளாக வெளிவரும் வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்மணத்தில் நட்சத்திர பதிவுகள் கலக்கிக் கொண்டிருக்கின்றன. தருமி, கோ. கணேஷ், ஜோ போன்றவர்களின் ராஜபாட்டையை தொடர்ந்து குழலியும் இந்த வாரம் கலக்கிக் கொண்டிருக்கிறார். வாழ்த்துக்கள் நட்சத்திரமாய் கலக்கியவர்களுக்கும், கலக்கப் போகின்றவர்களுக்கும் !!!

3 comments:

Sud Gopal said...

ஓ.உங்க ப்ரொஃபைலப் பார்த்திட்டு நீங்க வாஷியில(ஷில் மாபே)இருக்கிற telecom கம்பெனியில வேலை பாக்கரீங்கன்னு இல்ல நெனச்சேன்.

ரிவர் டேல்,மேக்ராஜ் மல்டிப்ளெக்ஸ்,நவரத்னா,ஜிம்மி டவர்.அட..அட...பழச மறக்க முடியலயே

Anonymous said...

UNNKALUUKUU VERA VEELAI ILLAYA THEENAMUMM CRICKET CRICKET

EHAVU POOEE ORUPADEEYA ELUTHOOINKO

பழூர் கார்த்தி said...

சுதர்சன், நான் வாஷி பக்கத்திலிருக்கும்
டெலிகாம் கம்பெனியில்தான் வேலை பார்க்கிறேன்.. மும்பை பற்றி ஓர் பதிவு எழுதி வருகிறேன்.. கூடிய விரைவில் வெளிவரலாம்...

****

அனானிமஸ், கோச்சிக்கிடாதீங்க... உருப்படியாவும் ஏதாவது எழுத முயற்சி பண்றேன் :-)

****

கார்த்தி, மும்பை அனுபவங்கள் விரைவில் ரிலீஸ் ஆகும் :-)
போட்டோவில் பவுடர் அதிகமில்லை, எல்லாம் அனிமேஷன்தான்...