Wednesday, August 31, 2005

நண்பர்களுக்காக ஒரு பதிவு..

வணக்கம் நண்பர்களே, இனிய மாலைப் பொழுதுகள் உங்களுக்கு உரித்தாகுக! தமிழ் வலைப்பதிவுகளுக்கு நான் புதிய ரசிகன். கடந்த மூன்று மாதங்களாக வெவ்வேறு நண்பர்களின் வலைப்பதிவுகளை படித்து ரசித்து விட்டு, இப்போதுதான் இந்த புதிய தமிழ் வலைப்பதிவை உருவாக்கியுள்ளேன். இங்கே ஏதாவது என் பார்வையில் படும் சுவாரசியமான சம்பவங்கள், என் கடந்த கால அனுபவங்கள் மற்றும் எனக்கு தோன்றுபவற்றை எல்லாம் கிறுக்கலாம் என்று இருக்கிறேன். நீங்கள்தான் பொறுத்தறுள வேண்டும்!

தமிழில் தட்டச்சு செய்வது எனக்கு புதிதானது. முரசு அஞ்சல் மென்பொருளுக்கு நன்றி. தமிழில் எழுதுவதே (எனக்கு) அரிதாகி விட்ட நிலையில், இது ஒரு இனிய முயற்சி என்றே கருதுகிறேன்! இந்த வலைப்பதிவை உருவாக்க உதவிய தேசிகன் (எழுத்தாளர் சுஜாதாவின் முதன்மை சீடர்) , சுரதா (பொங்குதமிழ் மென்பொருள் அளித்தவர்) மற்றும் ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றி !

என்னைப் பற்றிய அறிமுகம்

பெயர் : ஜோதி. சுவாமிநாதன்
வயது : 26
வசிக்கும் நகரம் : மும்பை
வேலை : தொலைத்தொடர்பு மென்பொருள் சோதனையாளர்
சொந்த ஊர் : திருச்சி

5 comments:

Desikan said...

சுவாமிநாதன்,
வாழ்த்துக்கள். சண்டை போடாமல் நிறைய எழுதுங்கள்.
அன்புடன்
தேசிகன்

Boston Bala said...

வாங்க... அமர்க்களமான ஆரம்பம்; விடாம ஆட வாழ்த்துகள் :-)

dondu(#11168674346665545885) said...

ஹல்லோ பம்பாயில்தான் இருக்கிறீர்களா? சமீபத்தில் 1971 முதல் 1974 வரை எனக்கு பம்பாய் வாசம். மாதுங்கா கே.ஏ. சுப்ரமணியம் சாலையில் சரஸ்வதி நிவாஸில் வாசம். கட்டை பிரம்மச்சாரி. கன்சர்ன்ஸில் சாப்பாடு, பக்கத்து அரோரா தியேட்டரில் சினிமா என்று அமர்க்களமான வாழ்க்கை. அந்தக் காலக் கட்டத்தில் ந்டந்த நிகழ்ச்சியொன்றைப் பதிவு செய்திருக்கிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/07/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழூர் கார்த்தி said...

நண்பர்களே, உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி !

mkr said...

உங்கள் வலைப்பதிவை காண நேரிடது.எழுத எழுத எழுத்தும் வசப்படும் என்று சொல்வார்கள்.ஆனால் ஆரம்ப முதலே உங்கள் எழுத்து இயல்பாக இருக்கிறது.தொடர்ந்து எழுதுங்கள்.