Showing posts with label அஸ்வின். Show all posts
Showing posts with label அஸ்வின். Show all posts

Wednesday, August 29, 2012

கிரிக்கெட்: அஸ்வின் சுழலில் தடுமாறிய நியுசி - ஒரு அலசல்


அஸ்வின் - உங்களையும், என்னையும் போன்ற ஓர் சாதரண குடும்பத்து பையன். நமது பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம், பேட்டிகளிலோ, இண்டர்வியூ கொடுக்கும்போதோ இயல்பாக, உண்மையாக பேசுவார், சின்சியாரிட்டி தெரியவரும்.

அருமையான சுழற்பந்து வீச்சாளர். ஹர்பஜனுக்கு பிறகு என்ன என்ற கேள்விக்கு சரியான விடையாக இந்திய அணியில் உருவாகி வருகிறார்.

நிறைய ஒருநாள் (இதுவரை 40 போட்டிகள்), டி20 கிரிக்கெட் விளையாடியுள்ளதால் ஒன் - டே ஸ்பெசலிஸ்டாக கருதப் பட்டார். ஆனால் 2011 ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி 22 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார். அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அவ்வளவாக சோபிக்க வில்லை. தற்போது நியுசிக்கு எதிராக இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 12 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.



இதுவரை இந்தியாவில் அஸ்வின் விளையாடிய 4 போட்டிகளில், 43 விக்கெட்டுகள் வீழ்த்தி, 3 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். இதுவே ஒரு பெரிய சாதனைதான். இவரும் ஓஜாவும் சேர்ந்து இந்த 4 போட்டிகளில் 60 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். கும்ப்ளே - ஹர்பஜன் போல அஸ்வின் - ஓஜா ஜோடியும் தொடர்ந்து பல போட்டிகளில் அசத்துவார்கள் என ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளனர்.

பந்து வீச்சில் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் அஸ்வின் ஜொலிக்கிறார். இப்போது நடந்த் முடிந்த போட்டியில் கூட அவர் எடுத்த 37 ரன்கள் அணிக்கு ஒரு பெரிய ஸ்கோரை தந்து, நியுசிலாந்தை பயப்படுத்தியது.

டெஸ்ட் போட்டிகளிலும், ஒருநாள், டி20 போட்டிகளிலும் ஒரு அட்டாக்கிங், அக்ரெசிவ் பவுலராக உருவெடுத்துள்ளார் அஸ்வின். எந்த போட்டியிலும் முதல் ஐந்து-ஆறு ஓவர்களில் நிறைய ரன்கள் போய்விட்டால், தோனி இவரைத்தான் பந்து வீச அழைப்பார். எதிரணி ரன்கள் குவிப்பதை குறைத்து, விக்கெட்டுகளையும் வீழ்த்தி விடுவார்.

டெஸ்ட் போட்டிகளில் இவரது பவுலிங் ஆவரேஜ்: 26.83, பேட்டிங் ஆவரெஜ்: 35.66. இதுவே இவரது திறமைக்கு சான்று. இவர் இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது, ஆனாலும் நமது அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம் அஸ்வின். இவர் மென்மேலும் வெற்றிகளைப் பெற வாழ்த்துவோம்!

நன்றி: படம் மற்றும் தகவல் உதவி - கிரிக் இன்ஃபோ வலைத்தளம்