Monday, August 20, 2012

காராச்சேவு - மோகன்குமார் vs வவ்வால், நீங்கள் யார் பக்கம்?

நீங்கள் காராசாரமான விவாதத்தை எதிர்பார்த்து வந்திருந்தால் பதிவின் பிற்பகுதிக்கு செல்லுங்கள், முதலில் கொஞ்சம் ஸ்வீட், பிறகு காரம்....



இது ஒரு பொன்மாலைப் பொழுது - பாடல்

நிழல்கள் படத்தில் வரும் இந்த பாடல் எனக்கு மிக பிடித்தமான பாடல்களில் ஒன்று, இளையராஜா இசையில், எஸ்.பி.பி பாடிய அற்புதங்களில் ஒன்று, வைரமுத்துவின் வைர வரிகள் அருமையாக, இனிமையாக, அர்த்தம் பொருந்தியதாக இருக்கும். 'ஒய் திஸ் கொலைவெறி'யை ரசிக்கும் இன்றைய யு.டியூப் தலைமுறையினக்கு இப்பாடலின் அற்புதம் புரியாமல் போகலாம். பாடலில் வரிகள் ஆரம்பிக்கும் முன் வரும் இசையை கவனித்து ரசியுங்களேன், சுகமான துள்ளலாய் ஆரம்பித்து 'ஹே ஹோ ஹூம் லலல்லா....' என்ற ஹம்மிங்கில் ஆரம்பமாகும்.

பாடல் வரிகளை கவனியுங்கள்,

'வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்'
.....
'வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது'
....

எவ்வுளவு அர்த்தம் பொதிந்த வரிகள், நீங்களும் கேட்டு ரசியுங்கள்..





அசிலி பிசிலி கவிஞர்கள் கொஞ்சம் செவி சாய்ப்பார்களா??

இப்பாடலில் வரும் நாயகன் 'ராஜசேகர்' இப்போது 'சரவணன் மீனாட்சி' தொலைக்காட்சி தொடரில் சரவணனுக்கு அப்பாவாய் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் பத்து, பதினைந்து வருடங்கள் கழித்து சரவணன் வேறெதாவது நடிகருக்கு அப்பாவாய் நடிக்கும் பொழுதும், ரஜினிகாந்த் ஹீரோவொய் 'எந்திரன் - பார்ட் 2'வில் நடித்துக் கொண்டிருக்கலாம். உலகம் முழுக்க 2000 தியேட்டரில் ரிலிசாகி, ஒரே நாளில் லாபம் சம்பாதித்து, மறுநாள் சன் டிவியில் ஒளிபரப்பாகலாம். தமிழ் சினிமா வாழ்க!!




மோகன்குமார் vs வவ்வால், நீங்கள் யார் பக்கம்?


நண்பர் 'வீடு திரும்பல்' மோகன்குமார் சிறிது நாட்களுக்கு முன்பு 'போலீஸின் புதிய விதிகளை ஏமாற்ற பள்ளி வேன்காரர்கள் புது டெக்னிக்' என்று ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் அவரது கருத்துகளுக்கு வவ்வால் பதில் கூறி, விவாதம் செய்திருந்தார்.

தொடர்ந்து சில பின்னூட்டங்களின் மூலம் விவாதத்திற்கு பின்பு மோகன்குமார் திடீரென்று 'எனது நண்பர்களைக் கிண்டல் அடித்துள்ளீர்கள், அதனால் என்னுடைய பதிவில் நீங்கள் இனிமேல் கமெண்ட் இடக் கூடாது' என்று கூறி வவ்வாலின் அடுத்த பின்னூட்டத்தை டெலிட் செய்து விட்டார்.

வவ்வால் ஆபாசமாகவோ, வன்முறையாகவோ பேசவில்லை, சற்று எரிச்சலூட்டும் படியான, தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டுள்ளார், பதிவர் வெறும் ஹிட்ஸுக்குத்தான் எழுதியுள்ளார், உண்மையான சமூக அக்கறையெல்லாம் இல்லை, நிஜமாகத் தீர்வை எதிர்நோக்கவும் இல்லை என்று வவ்வால் பின்னூட்டங்களில் பதிலளித்துள்ளார்.

'உங்களது கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை' என்று மோகன்குமார் பதிலளித்து, கடந்து சென்றிருக்கலாம், அதை தவிர்த்து, ஒருவருடைய கருத்தை ஒட்டுமொத்தமாக தடை செய்வது, கமெண்ட் போடக்க்கூடாது என்று சர்வாதிகாரம் செய்வது, நியாயமான செயலாக முடியாது.

சிறப்பான பல்சுவைப் பதிவுகளை தந்து, பதிவுலகத்தையே தன்பால் திருப்பியிருக்கும் பிரபல பதிவர் மோகன்குமார், தனது தவற்றை திருத்திக் கொண்டு, தொடர்ந்து வெற்றிநடை போடுவார் என்றே நான் நம்புகிறேன், நீங்களுமா?





11 comments:

ராஜ் said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவு எழுதி இருக்கேங்க :)
நான் ஸ்கூல், காலேஜ் படிக்கிற காலத்துல AR மியூசிக் மேல வெறியா இருந்தேன், இளையராஜா பட்டுன ஓடியே போயிருவேன். ஆனா நான் காலேஜ் முடிச்சு 7 வருஷம் ஆச்சு, இப்ப கொஞ்சம் maturity வந்த அப்புறம் ராஜா பாட்டு தான் கேட்க பிடிக்குது. "கொலைவெறி" பாட்டு எல்லாம் கேட்க வெறுப்பா இருக்கு. வயசு ஏற ஏற ரசனை மாறுது என்று நான் நினைக்கிறன்.
இங்க பதிவுலகத்துல கமெண்ட் பாக்ஸ்ல கருத்து போர் செஞ்சு யாரோட எண்ணத்தையும் மாத்த முடியாது என்பது என்னோட அனுபவம்.

வவ்வால் said...

பழூர் கார்த்தி,

வெளிப்படையான உங்களது அணுகு முறைக்கு பாராட்டுகளும்,நன்றியும்!

//சற்று எரிச்சலூட்டும் படியான, தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டுள்ளார், //

அதாவது உண்மையை கேட்டுள்ளேன்,

நான் கேட்டது நம்மால் தவிர்க்க கூடிய ஒன்றை செய்யாமல் , அரசு சட்டம் போடணும் கண்காணிக்கணும் என சொல்வது சரியா என்று, மேலும் நான் சொன்னது அனைத்தும் அவர்ப்பதிவில் சொல்லியிருந்ததை வைத்தே.

எந்த இடத்திலும் தனிநபர் தாக்குதல் என சொல்லும்படியாக எதுவும் இல்லை ,ஆனால் தனிநபர் தாக்குதல் என பொய்யான ஒன்றை சொல்லியிருந்தது தான் மிகப்பெரிய அபத்தம்.

"இது போல சம்பவங்கள் நடந்தால் பூனைக்கு மணிக்கட்டணும்,குதிரைக்கு கடிவாளம் போடனும் என சமூகப்பிரக்ஞையைப்பிராஸ்திப்பார்கள்,ஆனால் தாங்களாக முன்வந்து செய்யக்கூடியவற்றை செய்யமாட்டார்கள் "என பொதுவாக சொன்னதில் என்ன தனிநபர் தாக்குதல் கண்டார்?

இதில் இன்னொன்று நான் சொன்னதைப்பலரும் ஏற்றுக்கொண்டே இருக்கிறார்கள், ஏன் எனில் முதலில் பெற்றோர் தான் மாற வேண்டும், பிரபலப்பள்ளி என 10 கி.மிக்கு அப்பால் உள்ள பள்ளியில் 3வயது குழந்தையை அனுப்புவது அடிப்படையிலேயே அபாயமானது ஆகும். நல்லப்பேருந்தில் இருக்கையில் அமர்ந்திருந்தாலும் திடீர் என பிரேக் போட்டால் அக்குழந்தையால் கவனமாக கம்பியை பிடிக்க முடியுமா இல்லை எட்டுமா?

பேருந்திலேயே இதான் நிலைமை எனும் போது ஆட்டோவில் 10 பேருக்கு மேல் ஏற்றி அனுப்பினால் யார் பொறுப்பு? பெற்றோர் ஆட்டோவுக்கு பணம் கொடுத்து அவர்களாகவே 10 குழந்தைகள் இருக்கும் ஆட்டோவில் 11 ஆவது திணித்து அனுப்புகிறார்கள், எனவே ஆபத்தினை பணம் கொடுத்து நன்கு அறிந்தே வாங்குவது போன்ற செயல் தானே இது?

------------

ராஜ்,

//இங்க பதிவுலகத்துல கமெண்ட் பாக்ஸ்ல கருத்து போர் செஞ்சு யாரோட எண்ணத்தையும் மாத்த முடியாது என்பது என்னோட அனுபவம்.//

ஹி ..ஹி பதிவு எழுதி அரசின் எண்ணைத்தையும் மாற்ற முடியாது என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்களேன் :-))
----------------------

ராஜ் said...

கண்டிப்பா வவ்வால்,
யாராலையும் யாரையும் மாத்த முடியாது, மனுஷனோட என்னத்தையே மாத்த முடியாதப்ப அரசின் முடிவுகள் எம்மாத்திரம்.

Doha Talkies said...

நான் நண்பர் ராஜின் கருத்துக்களுடன் உடன் படுகிறேன்,
பள்ளி நாட்களில் இளையராஜா மீது அவ்வளவு ஆர்வம்,
முதிர்ச்சி காரணமாக இளையராஜா பாடல்கள் மேல் தீராத காதல் கொண்டுவிட்டேன்.
அதுபோல வவ்வாலின் கருத்துக்கள் சரியே.

பழூர் கார்த்தி said...

ராஜ், உங்க கருத்திற்கு நன்றி!

// ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவு எழுதி இருக்கேங்க :) //

ஆமாங்க, நேரம் கிடைத்தாலும், பதிவிடுவதற்கு ஒரு சோம்பேறித் தனம்தான்.. ஆனால் தினமும் ஒரு சில பதிவுகளாவது படித்து விடுவேன்..

// வயசு ஏற ஏற ரசனை மாறுது என்று நான் நினைக்கிறன்.//

முற்றிலும் உண்மை..

//இங்க பதிவுலகத்துல கமெண்ட் பாக்ஸ்ல கருத்து போர் செஞ்சு யாரோட எண்ணத்தையும் மாத்த முடியாது என்பது என்னோட அனுபவம்.//


ஆமாங்க, இதை நானும் உணர்ந்து இருக்கேன், மாற்று கருத்துகளுக்கு உடன்படா விட்டாலும், இடமாவது கொடுக்கலாம் என்பதே எனது கருத்து, நன்றி!

பழூர் கார்த்தி said...

வவ்வால், உங்க கருத்துக்கு நன்றி!

// நம்மால் தவிர்க்க கூடிய ஒன்றை செய்யாமல் , அரசு சட்டம் போடணும் கண்காணிக்கணும் என சொல்வது சரியா //

நியாயம்தான்..

//எந்த இடத்திலும் தனிநபர் தாக்குதல் என சொல்லும்படியாக எதுவும் இல்லை ,ஆனால் தனிநபர் தாக்குதல் என பொய்யான ஒன்றை சொல்லியிருந்தது தான் மிகப்பெரிய அபத்தம்.//

இதுதான் எனக்கும் வருத்தத்தை அளித்தது..

மாற்று கருத்துகளுக்கு உடன்படா விட்டாலும், இடமாவது கொடுக்கலாம் என்பதே எனது கருத்து, நன்றி!

பழூர் கார்த்தி said...

Doha Talkies, உங்க கருத்திற்கு நன்றி!

ராஜ் said...

பாஸ்,
ரொம்ப வருஷமா எழுதுரீங்க, உங்க பழைய பதிவு நிறைய படிச்சேன்..என்னோட நெருங்கிய நண்பனின் டைரி படிக்கிற மாதிரி இருந்தது... :) நானும் உங்களை மாதிரி தான்..பல ஊர் சுத்தி இருக்கேன்.
ஹைதராபாத்->-விஜயவாடா->-நாக்பூர்->மும்பை->காரக்பூர்->போபால்->பெங்களூர்->ஹைதராபாத் --> இப்ப அமெரிக்கா செல்ல முயற்சி செய்து கொண்டு இருக்கும் பையன்... :)
ஒரு சின்ன விண்ணப்பம்.. நீங்க உங்க பதிவுல Followers Widget வைக்கலாமே. அது இருந்தா நீங்க ஏதாவது புது பதிவு போட்டா எனக்கு என்னோட பிளாக்கர் டாஷ்போர்ட் முலமா தெரிய வரும். அப்ப அப்ப உங்க ப்ளாக் பக்கம் வரலாம். முன்னாடி வச்சு இப்ப எடுத்துட்டேங்களா..???

பழூர் கார்த்தி said...

ராஜ்,

//ரொம்ப வருஷமா எழுதுரீங்க, உங்க பழைய பதிவு நிறைய படிச்சேன்..என்னோட நெருங்கிய நண்பனின் டைரி படிக்கிற மாதிரி இருந்தது//

உங்க பாராட்டுக்கு நன்றி!

//நானும் உங்களை மாதிரி தான்..பல ஊர் சுத்தி இருக்கேன்.
ஹைதராபாத்->-விஜயவாடா->-நாக்பூர்->மும்பை->காரக்பூர்->போபால்->பெங்களூர்->ஹைதராபாத்//

ஆஹா, இந்தியாவையே வலம் வந்திருக்கிறீர்களே, இந்த அனுபவங்களையெல்லாம் பதிவுகள் ஆக்குங்களேன்! ஏற்கனவே எழுதியிருக்கிறீர்களா?

//இப்ப அமெரிக்கா செல்ல முயற்சி செய்து கொண்டு இருக்கும் பையன்.//

முயற்சி சீக்கிரமே வெற்றியடைய வாழ்த்துகள்!

// நீங்க உங்க பதிவுல Followers Widget வைக்கலாமே.//

நிச்சயம் இன்று வைத்து விடுகிறேன், நீங்களே ஏற்கனவே ஒருமுறை கூறியும் வைக்காததற்கு என் சோம்பேறித் தனம்தான் காரணம் :)

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பாடல் கண்ணொளியை பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

பழூர் கார்த்தி said...

நன்றி தனபாலன்!! எனக்கு மிகப் பிடித்த பாடல்கள் சிலவற்றை தொடர்ந்து பதியலாம் என நினைக்கிறேன், பார்ப்போம்!!